Advertisement
ஏழைகளுக்கு இலவச மொபைல் போன்: சுதந்திர தினத்தன்று அறிவிப்பு?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,23:42 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012,03:50 IST

புதுடில்லி: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 90 கோடி பேருக்கு மேல், மொபைல் போன் வைத்துள்ளனர். தினமும் மொபைல் போன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களில், மொபைல் போன் என்பது இன்னமும், "பகல் கனவாக'வே உள்ளது.


புதிய திட்டம்: இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு, மொபைல் போனை இலவசமாக வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு, "ஒவ்வொரு கையிலும் ஒரு மொபைல் போன்' என, பெயரிடவும் தீர்மானித்துள்ளது. நாட்டில், 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பதாக கணக்கிட்டால், மூன்று கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். வெறுமனே மொபைல் போனை மட்டும் வழங்காமல், ஒவ்வொரு மாதமும் 200 உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.


திட்ட செலவு: இந்தத் திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் திட்டக் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனேகமாக வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று இது தொடர்பான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெறும் திட்டங்கள் குறித்து, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இன்னமும் உறுதி செய்யவில்லை.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (156)
Kumaraswami Balasubramanian - erode ,இந்தியா
11-ஆக-201201:24:36 IST Report Abuse
Kumaraswami Balasubramanian மக்களை முட்டாள் என்று காங்கிரஸ் கட்சி நினைத்துவிட்டது மக்களின் கோபம் தேர்தல் முடிவில் தெரியும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arasu Arjun - Chennai,இந்தியா
10-ஆக-201202:08:35 IST Report Abuse
Arasu Arjun மொத்த கருப்பு பணத்தையும் வெளியே கொண்டுவர ஏதாவது திட்டம் உண்டா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
babu - tiruchi,இந்தியா
09-ஆக-201223:30:00 IST Report Abuse
babu தர்ம சாலையாக மாற்றி விடுங்கள், அரசில் இருப்பவர்கள் விலை குறைவு ஏழை மக்களும் பயன்படுத்தும் நிலையில் தகவல் தொடர்பு இப்படி இல்லாமல் கொள்ளை கொள்ளையோ கொள்ளை என மொபைல் டாக் டேக்க்ஸ் பலவாறும் பிடித்தம், எங்கும் வரி எதிலும் வரி சிலருக்கு வரிவிலக்கு இதுவும் இலவசம் மொத்தத்தில் யாருக்கு இலவசங்கள் லாபம் கொடுக்கும் யாவருக்குமே புரியும் இலவசங்கள் இல்லிச்சவயர்களை வசபடுதவே தேவை வோட்டு, சேவை இலவசம், இந்தியாவை பற்றி கொள்ள இதய தீ பிடிகிறது இலவச இந்தியாவை பற்று கொள்ள மறுகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kanagu11 - coimbatore,இந்தியா
09-ஆக-201222:36:31 IST Report Abuse
kanagu11 1950 முதல் காங்கிரஸ்தான் ஆச்சி செய்கிறது. ஆனால் இந்தியாவில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்ப்பட்டது .மக்களாகிய நாம் சரியில்லை . ஆட்சிய மாத்தனும் இல்லே நாம் மாறனும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Hari Iyer - Austin,யூ.எஸ்.ஏ
09-ஆக-201222:03:03 IST Report Abuse
Hari Iyer ஜயாவை முந்திவிட்டார் சோனியா. நூறு கோடி மக்களை கேவலமாக காண்பதால்தான் இலவசங்களை அள்ளி வீசுகின்றனர்.இந்தியா நாட்டிற்கு சரியான தலைவர் இல்லாததால் சுரண்டல் நல்ல முறையில் நடக்கின்றது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nanmai Nanmaigal - tuticorin,இந்தியா
09-ஆக-201220:52:18 IST Report Abuse
Nanmai Nanmaigal செல் போன் கொடுக்கிறது இருக்கட்டும். ஆனால் அதற்கு முன்பாக நாட்டின் ஒவ்வொரு பகுதிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். தேசத்தின் சீர்கேடுகளை அகற்றுவதற்கு முன் வரவேண்டும் இன்டர்நெட் மூலமாக ஆபாசங்கள் வருகிறதை தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். சினிமாக்களில் வருகிற ஆபாசமான காட்சிகள் வன்முறை காட்சிகள் நிறுத்த ஆவணசெய்ய வேண்டும். மக்களை சீரழித்து கொண்டிருக்கிற மதுவை ஒழிக்க முன் வரவேண்டும். மிக முக்கியமாக ஓரினசேர்க்கையை எக்காரணத்தை கொண்டும் தேசத்திற்குள் அனுமதிக்க கூடாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
09-ஆக-201219:49:16 IST Report Abuse
S.Govindarajan. ஒவ்வொரு இந்தியனுக்கும் உணவு ,உடை, இருக்க இடம், படிக்க வசதி, வேலை வாய்ப்பு , இவை அனைத்தையும் கொடுத்து விட்டீர்களா? இந்த அழகில் இலவச மொபைல் என்ன வேண்டிக் கிடக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Balaji Gopalan - Nouakchott,மொரிட்டானியா
09-ஆக-201219:42:08 IST Report Abuse
Balaji Gopalan நான் இனிமேல் tax கட்ட யோசிப்பேன் ,,, காங்கிரஸ் காரன் புத்தி கெட்டவன் ... வரி பணம் வீண் பண்ணுறான்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Oosi - Port Said,எகிப்து
09-ஆக-201218:43:47 IST Report Abuse
Oosi 7000 கோடிக்கு உருப்படியா மருத்துவ வசதியையும் கல்விக்கூடங்களின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்துங்கள். அறிவியல் ஆராய்ச்சிக்கும், infrastructure மேம்படுத்தவும் உபோகப்படுத்திங்கள். இளைஞர்களின் திறமையையும் விளையாட்டுத் திறனையும் வளர்க்க பயன்படட்டும். 1.3 பில்லியன் டாலரை வீணாக்க வீண்டாம். இதுதான் சீனாவிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் உருப்பட முயற்சிக்கிறார்கள். நம் அரசாங்கங்கள் மக்களை கையேந்தவைக்கவே முயற்சிக்கின்றன.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201218:19:40 IST Report Abuse
periya gundoosi ஒரு நாளைக்கு 28 ரூபாய் வருமானம் இல்லாத மககள் தான் வறுமைக்கு கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள். இவர்களுக்கு மொபைல் ஃபோன் இலவசம், இவர்கள் ரீசார்ஜ் எப்படி செய்வார்கள். அப்ப அதை காசு முடிந்தவுடன் தூக்கி வீச வேண்டியது தான். யூஸ் டு த்ரோ, பொருளாதார பேதையின் திட்டம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.