TRAI warn about fake SMS | பிரபல நிறுவன பெயரில் மோசடி எஸ்.எம்.எஸ்.,: தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமா "டிராய்?'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரபல நிறுவன பெயரில் மோசடி எஸ்.எம்.எஸ்.,: தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமா "டிராய்?'

Added : ஆக 08, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பிரபல நிறுவன பெயரில் மோசடி எஸ்.எம்.எஸ்.,: தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமா "டிராய்?'

பிரபல நிறுவனங்கள் பெயரில், அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக, மோசடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவது அதிகரித்து வருகிறது.


"டிராய்' உத்தரவு: கூலித் தொழிலாளி முதல், பணக்காரர்கள் வரை, அலைபேசி பயன்படுத்துவது, தவிர்க்க முடியாததாகி விட்டது. இதைச் சாதகமாக பயன்படுத்தி வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர, அவர்களது தயாரிப்பு பொருட்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் அலைபேசி வழியாக விளம்பரப்படுத்துகின்றன. இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடமும் (டிராய்), அரசிடமும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் விரும்பாமல், அலைபேசி நிறுவனங்கள் விளம்பரம் செய்யக் கூடாது என, "டிராய்' உத்தரவிட்டது. இதனால் விளம்பரங்கள் ஓரளவு குறைந்தன. சமீப காலமாக கோகோ கோலா, நோக்கியா, இன்டர் நேஷனல் கிரிக்கெட் கிளப் உட்பட, பல நிறுவனங்கள் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வருகிறது.


இப்படி வந்த ஒரு எஸ்.எம்.எஸ்., விவரம்: அதில், "யு.கே., மொபைல் அவார்டு, 2012ம் ஆண்டுக்கான, 4.6 கோடி ரூபாய் பரிசுத் தொகையை உங்கள் அலைபேசி எண் வெற்றி பெற்றுள்ளது' எனவும், "உங்கள் விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்' என்றும் கூறி, ஒரு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி வருகிறது. தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்டால், அடையாள ஆவணங்களை, "பேக்ஸ்' அனுப்புமாறு கூறி, "பேக்ஸ்' எண்ணும் வாடிக்கையாளர் மெயிலுக்கு வருகிறது.


மோசடி எஸ்.எம்.எஸ்.,: பின், "எங்கள் ஏஜென்ட், "பென் கென்னடி' என்பவர், உங்கள் வீடு தேடி வந்து, பரிசு தொகைக்கான பார்சலை வழங்குவார்' என, மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ்., வருகிறது. அதன்பின் வாடிக்கையாளர்களுக்கு, சர்வதேச தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. அதில், புரியாத மொழியில் வாடிக்கையாளர்களிடம் பேசி, ஒரு நிமிடத்தில் துண்டித்து விடுகின்றனர். தொடர்ந்து மறுநாள், "4.6 கோடி ரூபாய்க்கான, "டிராப்ட்'டுடன், டில்லி ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளேன்' என, மேலும் ஒரு எஸ்.எம்.எஸ்., வருகிறது. மேலும் தொடர்புக்கு, 919999216250 என்ற அலைபேசி எண்ணை, எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். அந்த எண்ணை தொடர்பு கொண்டால், "கஸ்டம்ஸ் கிளியரன்சுக்காக, 8,500 ரூபாய்க்கு, 20116586584 என்ற வங்கி கணக்கிற்கு, பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தவும். பின்னர் உங்களுக்கு, 4.6 கோடி ரூபாய்க்கான, "டிராப்ட்' வீட்டிற்கு வந்து வழங்கப்படும்' என, எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.


புகார் தெரிவிக்கவும்: இது குறித்து, திருச்சி இந்தியன் வங்கியின் அதிகாரி மனோகர் கூறியதாவது: இது போன்ற ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்கிறது. இதைக் கண்டு, மக்கள் ஏமாற வேண்டாம். மாநகரங்களில் சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், "சி.பி.ஐ., பைனான்ஸ் கிரைசஸ் விங்'கிற்கு புகார் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் வங்கிகள் தொடர்பான குற்றங்களால் பாதிக்கப்பட்டால், மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sashi - chennai,இந்தியா
09-ஆக-201221:44:42 IST Report Abuse
sashi நம் மக்கள் முதலில் இலவசமாக பெறுவதை நிறுத்த வேண்டும். ஏன் உங்களுக்கு அவன் பணம் தர வேண்டும் என யோசிக்க வேண்டாமா ?
Rate this:
Share this comment
Cancel
sivaranjan - Tirupur,இந்தியா
09-ஆக-201215:42:24 IST Report Abuse
sivaranjan என்னக்கு கூட தான் இது மாதுரி நிறைய sms வருது. ஆனா அத உடனே delete பண்ணிடுவேன் இல்லைன்னா பேங்க் ல இருக்குர 500 ரூவா கூட தப்பிக்காது
Rate this:
Share this comment
Cancel
praveen - Chennai,இந்தியா
09-ஆக-201215:38:31 IST Report Abuse
praveen வங்கி கணக்கு இருந்தால் தானே அதில் போட முடியும். வங்கிகள் கணக்கு ஆரம்பிப்பவரை, சரியான விலாசத்தில் உள்ளாரா என, தக்க அடையாள அட்டையுடன் அனுமதித்தல், இதுபோல் ஏமாற்று வேலையை கொஞ்சம் குறைக்கலாம். கஸ்டமர் எண்ணிகையை அதிகரிக்க சில பிரைவேட் பேங்க் செய்யும் பிரச்சனை தான் இதுபோல் ஏமாற்று பேர்வழிகள் அதிகரிக்க காரணம்.
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
09-ஆக-201209:02:55 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN மொபைலில் மட்டுமல்ல, கணினிமுகவரிகளுக்கும் இப்படிப்பட்ட அறிவிப்புகள் வந்துகொண்டுதான் உள்ளன. இலவசங்களையும் கையூட்டும் பெற்றே வளர்ந்துவிட்ட நம்மவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று யார் சொன்னாலும் சிந்திக்காமல் தொடர்பு கொண்டு ஏமாந்துபோகிறார்கள். இப்படி ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுகிறவர்களே குற்றவாளிகள். இவர்களைக் கண்டு வருந்துவதைவிட இவர்களின் பணத்தாசைக்கு கிடைத்த பரிசாகவே நினைத்துக்கொள்ளவேண்டும். தவறுகள் தலைக்குமீறிப் போனபிறகே சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வேண்டா வெறுப்பாகவும் அரைகுறையாகவும் நடவடிக்கைகளை எடுப்பார்கள். மெட்ரோ ரயில் பணிகள் செய்வதிலும் முன்னெச்சரிக்கை இல்லாததால் தொழிலாளர்கள் உயிர் இழப்புக்கு காரணமாகி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
thesaapimaani - chennai ,இந்தியா
09-ஆக-201208:19:43 IST Report Abuse
thesaapimaani டிராய்.......... இன்னும் விழிப்புடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் நலன் காக்க படவேண்டும். மக்களை ஏமாற்றும் போலி நபர்களை கண்டு பிடித்து தண்டிக்கவும், தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிடவேண்டும் ஏனென்றால் இந்த மாதிரி தவறுகளுக்கு அவர்கள் உபயோகப்படுத்துவது SMS தான்.
Rate this:
Share this comment
Ravi Chandran - Panaji,இந்தியா
09-ஆக-201215:59:08 IST Report Abuse
Ravi Chandranஆமா இவங்க எங்க நம்ம நலன் காக்கிறது,மொபைல்,ஈமெயில் மட்டும் இல்ல எனக்கு ஒரு மெயில் வந்தது அதில் IT dept லோகோவோட ஒரு மெசேஜ். என்னன்னா என்னோட IT refund ஐ கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்து பெற்றுகொள்ளலாம் என்று....அது ஒரு ஏமாற்று வேலை என்று தெரியும்...நான் வேண்டுமென்றே கிளிக் செய்தேன் அதில் என்னுடைய பேங்க் LOGIN ID ,Password மற்றும் PROFILE password அனைத்தும் கொடுக்க சொல்லி இருந்தது நான் அனைத்துக்கும் ஒரு கெட்ட வார்த்தையை பதிவு செய்தேன்....கொடுமை என்னவென்றால் அதை அப்படியே பிரிண்ட் எடுத்து சென்று IT dept இல் உள்ள பெரிய அதிகாரி வரை காட்டினேன். இது தவறு, நம்பாதீர்கள் என்று எவரும் சொல்லவில்லை. மாறாக கிளிக் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள் என்று சொன்னார் ஒரு உயர் அதிகாரி....நான் இது பற்றி CPC க்கு மெயில் அனுப்பினேன். அவர்களிடமிருந்து 3 மாதத்திற்கு பிறகு பதில் வந்தது இதை நம்ப வேண்டாம் என்று...சரி அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் இல்லை.....இது அதை விட கொடுமை....இதுதான் incredible INDIA .....ரவி........
Rate this:
Share this comment
Cancel
D.Jagannathan - puducherry,இந்தியா
09-ஆக-201207:10:47 IST Report Abuse
D.Jagannathan வெளிப்படையாகவே இந்த ஏமாற்று வேலை நடக்கிறது. பலர் வசிக்க படுகிறார்கள். இதை அலைபேசியில் அனுப்பும் நிறுவனங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SATHISH - Bien hoa,வியட்னாம்
09-ஆக-201207:03:38 IST Report Abuse
SATHISH Just give the block message option, If user don&39t want receive this kind of messages.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-201204:38:47 IST Report Abuse
Kasimani Baskaran காலங்காலமாக நடக்கும் விஷயம் இது. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றால் இது ஒரு பெரிய பிரச்சினை. வந்த குறுந்தகவலை google இல் தேடிப்பார்த்தால் உண்மை விளங்கும். தவிரவும் - இந்தியாவில் மட்டுமே வங்கி மூலம் பணம் போடசொல்லுகிரார்கள். வங்கிக்கணக்கை எளிதில் முடக்கிவிட முடியும். மேல் விபரங்களுக்கு ://spam2watch.blogspot.com/ .
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
09-ஆக-201200:39:00 IST Report Abuse
BLACK CAT பேராசை பெரும் நஷ்டம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை