தமிழகத்தையே உலுக்கியுள்ள, மதுரை கிரானைட் ஊழல் குறித்து, அரசியல் கட்சிகள் பெரிய அளவில் கருத்துகளையோ, போராட்டங்களையோ நடத்தாமல், வாய்மூடி மவுனிகளாகவே உள்ளன. கட்சி பாகுபாடு இல்லாமல், அரசியல் கட்சிகளும், இந்த ஊழலுக்கு துணையாய் இருந்ததுதான் அமைதிக்கு காரணமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.
பணம் கொழிக்கும் கிரானைட் தொழிலில் தொடரும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. துணைபோன அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு நடவடிக்கை தூள் பறக்கிறது. இவ்வளவு பெரிய தொகை தொடர்புடைய விவகாரத்தில் அரசியல்வாதிகள் நுழையாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை. தேர்தல் நிதி, மாநாடு போன்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிதி என கிரானைட் அதிபர்கள் பெரும்தொகையை வழங்கியதால்தான், அரசியல் கட்சிகள் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ, நேரடியாக தாங்களே குவாரிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அழகிரியின் மகன், கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். காங்கிரøŒச் சேர்ந்த மதுரை மாவட்ட பிரமுகர் பி.கே.செல்வராஜ் குவாரி நடத்துகிறார். இவர்களது குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.கிரானைட் தொழிலில் ஈடுபட்டவர்கள், அரசியலை கடந்து நட்போடு பழகியதால், இதுநாள்வரை இந்த முறைகேடு வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது, முறைகேடு விவரம் வெளியில் தெரிந்தும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல் ஒதுங்கி நிற்கின்றன.அரசியல் கட்சிகளைப் போலவே, போலீஸ் மற்றும் வருவாய்துறை, கனிமத் துறை அதிகாரிகளும் குவாரி முதலாளிகளின் கைப்பாவைகளாகவே இருகின்றனர். கிரானைட் குவாரி ஊழல் குறித்து, மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து சில மாதங்கள் ஆன பின்பும் கூட, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அறிக்கை ஊடகங்களில் வெளியானதால் வேறு வழியின்றி நடவடிக்கைய எடுத்து வருவதாகக் கூறுகின்றனர். சகாயம் தனது அறிக்கையில், மூன்று நிறுவனங்களின் முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டி உள்ளார். மதுரை மாவட்டத்தில்175 குவாரிகள் உள்ளன. இவற்றில் நடந்துள்ள அத்துமீறல்களால், அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் அரசியல் கட்சிகள் முன்வராது. அவை, பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளும், கட்சிக்கான நிதியும் அவர்களை வாய் திறக்க விடாது என்று குற்றஞ்சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல்வாதிகள்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆகமொத்தம் திமுக என்பது ஒரு ரவுடிகளின் கட்சி என்பதை நேரடியாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். தான் ஆளும்போது எல்லா அராஜகமும், அட்டூழியமும் செய்வது, பொதுச் சொத்துக்கள், கோயில் சொத்துக்களைச் சூறையாடுவது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொது அரசாங்கத்தால் எடுக்கப்படும் எந்த ஒரு திட்டத்தையும் ஏதாவது ஒரு வகையில் தடுப்பது என்று ரவுடி ராஜ்ஜியமே நடத்துகிறது திமுக என்றால் மிகையாகாது. நல்லா வெவரமாத்தான் இருக்காங்க திமுக தலைவனுங்க
We need auction very powerfully ......dismiss whole govt officers.... Then will do politics.... First we clean the officers .... Future no one going to do that..... Pls.... Madam... So us ur administration knowledge .... Including ur own party & ministers& officers punish them .... Whole world Tamil public are happy.... Do it now.... U got a good chance now..... We are with uuuuuu
வருவாய் துறை அதிகாரிகள் எல்லாரின் வீட்டிலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ரெய்டு செய்யுங்க பல கோடி ரூபாய் கண்டு பிடிக்கலாம் ..... ஒவ்வரு தாலுகா வருவாய் அதிகாரியும் தாசில்தார் ரேஞ்சுக்கு அலப்பறை விடுறாங்க ...சிலர் கலெக்டர் ரேஞ்சுக்கு கல்லா கட்டுரங்க ...... ... தினமலர்க்கு ஒரு வேண்டுகோள் இதுநாள் வரை தமிழ்நாடு ஊழல் ஒரு கண்ணோட்டம் காங்கிரஸ் அரசு ஊழல் ஒரு கண்ணோட்டம்னு தளிப்பு குடுத்து செய்தி போட்டு விடுங்க மக்கள் மறக்காம இருக்க எதனை ஊழல் வழக்கு ஒழுங்கை முடிந்து தீர்ப்பு வந்தது என்பதை தெரிந்து 2104 இல் அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும் .... தோற்றவன் எல்லாம் அமைச்சர் நாடு உருப்புடுனு நேனைகுரிங்க

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.