புதுடில்லி: பார்லிமென்ட் லோக்சபா, மற்றும் சட்டசபை தேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ. மூத்த தலைவர் அத்வனி தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் சீர்திருத்தம் குறித்தும் தேர்தலில் முறைகேடு, பண பலத்தை தடுத்திடவும், தேர்தல் ஆணையர்கள் தேர்வு உள்ளிட்டவைகளில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி வந்தேன். கடந்த 1952-ம் ஆண்டு முதன்முதலாக பார்லிமென்ட் லோக்சபா தேர்தல் நடந்த போது சில மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல்கள் நடந்தன. இம்முறை கடந்த 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் பின்பற்றப்பட்டுவந்தன. பின்னர் 1972-ம் ஆண்டில் இம்முறை பின்பற்றப்படவில்லை.
தற்போது பார்லிமென்ட் லோக்சபா , சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் முடியும் வரை அப்படியே இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே இவைகளை கலைக்க கூடாது. மேலும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலோடு சேர்த்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். இது தொடர்பாக முன்னர் பிரதமர் மன்மோகன்சி்ங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த போது வலியுறுத்தினேன். இதனை இருவரும் பரிசீலித்துள்ளனர்.
மேலும் ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குட்பட்ட அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவில் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தை நீக்கிட வேண்டும் என்றும் அத்வானி தனது வலைப்பூவில் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.