Opposition complaints prime minister in lok sabha | மும்பை கலவரம்: பார்லிமென்டில் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் புகார்| Dinamalar

மும்பை கலவரம்: பார்லிமென்டில் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் புகார்

Updated : ஆக 15, 2012 | Added : ஆக 14, 2012 | கருத்துகள் (4)
Advertisement
  பார்லிமென்டில் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் புகார்:  மும்பை கலவரத்தை கண்டிக்காததற்கு வருத்த

"நாட்டின் முக்கிய வர்த்தக தலைநகரான, மும்பையில் நடைபெற்ற மிகப்பெரிய வன்முறைச் சம்பவத்தை, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ கண்டனம் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரமாக இது உள்ளதென்பதால், மும்பை நகரத்து மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த சம்பவத்தில், வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாக, அம்மாநில முதல்வர் கூறுவது பொறுப்பற்ற செயல்' என்று, பார்லிமென்டில் குற்றம்சாட்டப்பட்டது.


கடும் ரகளை:

நேற்று காலையில், லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ள முடியாமல் போனது. எதிர்க்கட்சிகள் கடும் ரகளையில் இறங்கின. உணவுப் பாதுகாப்புச் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்று, ஏற்கனவே பார்லிமென்ட் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுவிட்டு சபைக்குள் வந்திருந்த, இடதுசாரி எம்.பி.,க்கள் பலரும், இங்கும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். பா.ஜ.,- எம்.பி.,க்களோ கறுப்புப்பணம் குறித்த பிரச்னையை கிளப்பி, அது குறித்து விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். மற்றொரு பக்கமோ, மும்பையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வன்முறை குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரி, பலத்த அமளியில் இறங்கினர். இதனால், சபை கூச்சல் குழப்பமாக காணப்படவே, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.


அபாயகரமானது:

ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் சபை கூடியபோது, மும்பை கலவரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் ஆனந்த் கீதே அழைக்கப்படவே, அவர் பேச ஆரம்பித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:மும்பையில் நடைபெற்ற கலவரம் மிகவும் அபாயகரமானது. இப்படிப்பட்ட ஒரு கலவரத்தை இதுவரை பார்த்திருக்க முடியாது. ராஜா அகடமி மற்றும் அவாமி குரூப் என்ற அமைப்புகள் சேர்ந்து, அசாம் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அசாமில் உள்ள கொக்ரஜார் என்ற மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டத்தை செய்வதாகக் கூறி, இங்கு முழுக்க முழுக்க சட்டத்தை மீறும் வகையில், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூடிவிட்டு, சில நிமிடங்களில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், வன்முறையில் இறங்கினர். கணநேரத்தில் எரிமலையாய் அந்த இடம் மாறிப்போனது. போலீசார் தாக்கப்பட்டனர்; அவர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன; பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, அவர்களது வாகனங்களையும் எரித்து சாம்பலாக்கினர். தவிர, ஆர்ப்பாட்டம் நடந்த ஆசாத் மைதானத்தில், போர் வீரர்களின் நினைவுத்தூண் உள்ளது. அந்த தூணையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தினர்.


கண்டுகொள்ளவில்லை:

கலவரம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும், மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவோ கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மும்பை என்பது சாதாரண ஒரு நகரம் அல்ல. நாட்டின் பொருளாதார வர்த்தக தலைநகரம். அந்த நகரத்தின் மையப் பகுதியில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் கட்டவிழ்த்து விடப்பட்டும்கூட மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தம்அளிக்கிறது.மும்பை நகரத்து மக்கள் மத்தியில் இந்த கலவரம், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பீதி விலகியபாடில்லை. இந்த லட்சணத்தில், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில், வெளிநாட்டுக் கரங்கள் உள்ளதெனக் கூறுகிறார்.ஆசாத் மைதானத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி, கற்கள், உருட்டுக் கட்டைகள் எல்லாம் இருந்துள்ளன. இவை எல்லாவற்றையும் எடுத்து வந்திருப்பதன் பின்னணியை வைத்து பார்த்தால், இந்த வன்முறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதென்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எதற்கும் தயார் என்றும், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தான் கூடினர் என்பதும் தெரியும்.இவ்வாறு ஆனந்த்கீத்தே÷ பசினார்.வெளிநாட்டு சக்திபிறகு காங்கிரஸ் சார்பில், சஞ்சய் நிருபம் பேச அழைக்கபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:இந்துக்கள் தாக்கப்பட்டால் வருத்தம் தெரிவிக்க, ஆர்ப்பாட்டம் நடத்துவர். சீக்கியர்கள் தாக்கப்பட்டால், அதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதுண்டு. அதேபோல தான் இதுவும். அசாமில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்காக, மும்பையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதற்காகவே, 1,500 பேர் கூடினர். வெளிநாட்டு சக்தி தான் கலவரத்திற்கு காரணமாக இருந்திருக்க முடியும்.இந்த கலவரத்தை காரணமாக வைத்து, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா, ஒவ்வொரு நாளும் விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. வன்முறை நடந்துள்ள நிலையில், மேலும் இவ்வாறு துவேஷமான கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்து, வகுப்பு கலவரங்களை தூண்டக் கூடாது.இவ்வாறு சஞ்சய் நிருபம் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
15-ஆக-201209:50:16 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிறுபன்மையுனர் எதை பேசினாலும் , எதை செய்தாலும் அதை கண்டுகொள்ள இந்த அரசு தயக்கம் கட்டுவது ஒட்டுவங்கி ஆரசியல் ... இது இந்த நாட்டின் இறையாண்மைக்கு உகந்தது அல்ல.. வங்கதேசதில் இருந்து ஊடுருவல் ஆதரித்து பேசுகிறது இங்குள்ள சிறுபன்மையுனர் கட்சியுனர்.. நாட்டை அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பதற்கு முன் இது போன்ற சக்திகளிடம் இருந்து காக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Sheriff Mohamed - Dammam,சவுதி அரேபியா
15-ஆக-201208:18:52 IST Report Abuse
Sheriff Mohamed ஆம் மும்பை ஒரு சாதாரண நகரம் இல்லை .மது ,விபச்சாரம் ,சூது எல்லாம் நடக்கும் இடம் .இந்த நாட்டுல வன்முறைய ஆரம்பிச்சதே உங்களை போன்ற அரசியல் நாய்கள் தானே .முதல்லில் உங்களை ஒழிக்கணும் .அப்போ தான் நாடு உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
15-ஆக-201206:55:32 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் நம் ராணுவமும் பர்மிய ராணுவம் போல் கடுமையான தாக்குதல் நடத்தினால்தான் வங்கதேசிகளின் ஊடுருவல் நிற்கும். அவர்களை வாக்குவங்கியாக பயன்படுத்திக்கொண்டு, நம் நாட்டின் மீது மறைமுகப் போர் தொடுக்கும் போலி மதசார்புக் கட்சிகளையும், அவர்களுக்கு /பச்சையாக/ பண உதவி செய்யும் நாடுகளையும் காக எதிர்காமல் விடக் கூடாது
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
15-ஆக-201206:52:23 IST Report Abuse
ஆரூர் ரங என்ன கொழுப்பு இருந்தால், சட்டவிரோதமாகக் குடியேறிவிட்டு, நம் ஊர் பெண் போலீசை , போராட்டம் என்ற போர்வையில் மானபங்கப் படுத்துவர்? மைனாரிட்டிகள் என்பதால் போலீசும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது வெட்கக் கேடு. இந்த அழகில் இந்தப் போராட்டக்கார்களுக்கு போலீசில் இட ஒதுக்கீடும் உயர் பதவிகளும் வேண்டுமாம். ஐந்து லட்சம் (சட்டவிரோதமாக) வங்க்தேசிகள் மும்பையில் இருக்கிறார்கள். இவர்கள் காங்கிரஸ்,,தேசீயவாத காங் , முலாயம் கட்சிகளின் வாக்கு வங்கிகள்..இவர்களை வளரவிடுவதே தேசத்துரோகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை