திருவள்ளூர்: போக்குவரத்து அதிகம் உள்ள சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூரில், ஆளுங்கட்சியினர் நடத்திய பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கி.மீ., தூரத்தைக் கடக்க, 2 மணி நேரம் ஆனதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
அ.தி.மு.க., மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை சார்பாக, உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுக்கூட்டம் திருவள்ளூர், சி.வி.நாயுடு-நேதாஜி சாலை சந்திப்பில் நேற்று நடந்தது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கார், வேன்களில் தொண்டர்கள் திரண்டனர். இவர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டன. பின், காமராஜர் சிலையில் இருந்து கூட்டம் நடைபெறும் இடம் வரை, பேரணி நடந்தது.
இதற்காக, பேரணி துவங்கும் இடமான காமராஜர் சிலை அருகில், தொண்டர்கள் காலை முதல் கூடினர். இதனால், திருத்தணியில் இருந்து, சென்னை வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் நின்றன.பேரணி துவங்கியதும் போலீசார், காமராஜர் சிலையில் இருந்து, சி.வி.நாயுடுசாலை-நேதாஜி சாலை சந்திப்பு வரை, ஒரு வழியில் போக்குவரத்தை நிறுத்தினர். பேரணிக்காக, சாலையின் இருபுறமும், "கட் அவுட்'கள் வைக்கப்பட்டிருந்தன.
பேரணி முடிந்ததும் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், ஒரே நேரத்தில் செல்லத் துவங்கியதால், நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. போலீசார் எவ்வளவு முயன்றும் போக்குவரத்தை சீர்படுத்த முடியவில்லை; வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.ஏற்கனவே பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால், காமராஜர் சிலையில் இருந்து, ஆயில் மில் பஸ் நிறுத்தம் வரை, ஜே.என்.சாலையில், ஆங்காங்கே ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தினசரி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், நேற்று ஆளுங்கட்சியினரால், கடும் நெரிசல் ஏற்பட்டது.இதனால், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, ஆயில் மில் நிறுத்தம் வரை, 3 கி.மீ., தூரத்தைக் கடக்க, 2 மணி நேரம் ஆனது. காலை நேரத்தில் ஏற்பட்ட நெரிசலால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்காவில போய் ஒழுங்கா வேலைய பாருங்க முடிஞ்சா இங்க வந்து குப்பை கொட்டுங்க பார்க்கலாம் அங்க போய் ஒபமவையோ இல்லைனா அந்த அரசாங்கத்தையோ கமெண்ட் அடிங்க பார்க்கலாம்? உடனே pack up தான் உங்களுக்கெல்லாம் எங்கள் நாட்டையோ அல்லது எங்கள் தலைவியையோ allathu எங்கள் ஆட்சியையோ கமெண்ட் அடிக்க யோகிதை இல்லை போய் ஒழுங்க ரெண்டு மூணு பார்ட் டைம் வேலையை பார் கலைஞர்னு அடைமொழி பேர்ல வைச்சுண்டு இந்த ஆட்சியை கமெண்ட் அடிக்காதே இந்த ஒன்றரை ஆண்டில் எதாவது மாநாடு நடத்தினார இல்லை ஊர் ஊரா நலத்திட்டங்கள் விழா nadathi அரசு பணத்தை வேஸ்ட் செய்தாரா? எங்கள் தலைவி இப்போது நடத்தும் ஆட்சி மக்களாட்சி நீ எங்கே போயிருந்தாய் அந்த காட்டாச்சி நடந்த போது? ஏதோ ஒரு ஊர்வலம் 2 மணிநேரம் டிராபிக் ஜாம் நடந்ததுக்கு கூப்பாடு போடும் நீங்கள் எங்கே போனீர்கள் இத்தனை ஆண்டுகள்? இங்கே இர்ருக்கரவரைக்கும் நம் நாட்டை பற்றி துளிகூட தெரியாத உனக்கெல்லாம் அங்கே போனபிறகு யநோதயம் வருதோ? என்னோட ஒரே மேடைல விவாதிக்க ரெடியா புட்டு புட்டு வச்சுடுவேன் நீ போயிருக்கிற இடத்துல என்ன எல்லாம் நடக்குதுன்னு எங்கள் தலைவிக்கு theriyum எப்படி ஆட்சிசெயயனும்னு? நீதான் எருமை கோர்ட்ல கண்டிஷன் போடலேன்னா டெசோ மாநாடால சென்னை என்ன கதி ஆகிருக்கும் தெரியுமா உனக்கு? என்ன அருமையான strategy ? இதே கண்டிஷன் போலீஸ் போட்டிருந்தால் கூப்பாடும் ஒப்பாரியும் மறியல் என்ன வசை பாடுதல் என்ன? உனக்கெல்லாம் எங்கள் ஆட்சியை பற்றி எழுத
உரிமையில்லை சும்மா வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு எழுதாதே தப்புனா சுட்டிகாட்டு ஆனா உன்னோட முகம் தெளிவானதா இருக்கணும்
எனக்கு எல்லாரும் சரி சமம் ஆனா இந்த முறை நாங்க பார்குற தலைவி முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதி நிச்சயம் இவங்கள நம்பி தமிழ்நாடு இருக்கு மத்தியில ஆட்சில இவங்க Kai ஓங்கட்டும் பின்பு வா தமிழ்நாட்டுக்கு நம்மோட ஆட்சி அங்கு நடக்கணும்பார் தமிழனின் எதிர்காலத்தை
நீங்க இப்படியே போனீர்கள் ஆனால் திமுக இல்லை, பாமாக வைவிட படு கேவலமாக அடுத்த தேர்தலில் தோற்று போவீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்?? உங்களுக்கு கூட்டம், பேரணி நடத்த நடு ரோடுதான் கிடைத்ததா? அப்படி எங்காவது ஊருக்கு ஒதுக்குபுறமாக போய் ஓடுங்கள், கத்துங்கள், கும்மி அடியுங்கள், எக்கேடு கேட்டாவது போங்கள்... உங்களால் ஒரு நயா பைசாவிற்கு மக்களுக்கு புரியோஜனம் இல்லை என்றாலும் அவர்களுக்கு உபத்திரவம் தராமல் இருங்கள் அதுவே போதும் உங்களால் அவதிப்பட்ட ஒவ்வொருவரும் உங்களையும், உங்கள் தலைவரையும் chennai செந்தமிழால் திட்டி தீர்ப்பர்களே என்பது உங்களுக்கு தெரியாதா.....எருமைகள் தான் அப்படி இருக்கும்...நீங்கள் மனிதர்கள் அல்லவா....அது என்னமோ தெரியவில்லை நாய்கள் அல்லது கழுதைகள் வாலில் பட்டாசு சரத்தை கட்டி கொளுத்தி விட்டால் எப்படி தறிக்கெட்டு ஓடுமோ அது போல் தான் உங்கள் கார்களில் கட்சி கொடி கட்டி விட்டால் போதும்....நீங்கள் எப்பொழுது ஆறறிவு படைத்த மனிதர்கள் என்பதை நிரூபிக்க போகிறீர்கள் மக்கள் முட்டாள்கள் இல்லை...உங்களின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்....மரண அடி விழும் முன் விழித்து கொள்ளுங்கள்.....
என்ன? சார் பண்றது காசு கொடுத்தாலும் மக்கள் வரமாட்டேங்கறாங்க. பேரணி என்பது தொண்டர்களை முன்னிருத்தினால் தோல்வி அடையும் என்பது அம்மாவுக்கு தெரியாதா என்ன? பேரணி என்பதே நாங்க நெடுஞ்சாலை பயணிகளை நம்பித்தான் நடத்துறதே ஒரு கல் இரண்டு மாங்காய் என்னகொடும சார் இது. இன்னுமா புரியல? காசும் கொடுக்கவேண்டாம் கூட்டமும் சேக்கணும் அதன் சார்........... one stone two mango

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.