Keelavalavy Sarkarai beer mountain cut without permission | விதிகளுக்கு புறம்பாக வெட்டப்பட்ட கீழவளவு சர்க்கரை பீர் மலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிகளுக்கு புறம்பாக வெட்டப்பட்ட கீழவளவு சர்க்கரை பீர் மலை

Added : ஆக 14, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 விதிகளுக்கு புறம்பாக வெட்டப்பட்ட கீழவளவு சர்க்கரை பீர் மலை

மேலூர்:மதுரை மாவட்டம் கீழவளவில் உயரமான "சர்க்கரை பீர் மலை'யை, பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தினர், விதிகளுக்கு புறம்பாக வெட்டி, கிரானைட் கற்களை எடுத்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.

மதுரை கீழவளவு - திருப்புத்தூர் ரோட்டில் சர்க்கரை பீர் மலை உள்ளது. ஒத்தக்கடை யானைமலையை போல், பாறைகள் நிறைந்த இம்மலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த, "ரோஸ்' நிற கிரானைட் கற்கள் உள்ளன. இம்மலையில், பி.ஆர்.பி., நிறுவனத்தினர் கிரானைட் குவாரி அமைத்தனர். மலையின் ஒரு பகுதியை, "கேக்' போல், பாதியாக வெட்டி எடுத்தனர். எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை செதுக்கி, ஏற்றுமதிக்காக கோட்டை போல் அடுக்கினர்.

இதற்கு கீழவளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மலையை மீண்டும் ஊராட்சியிடம் ஒப்படைக்கக் கோரி, பி.ஆர்.பி., நிறுவனத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் தலையீட்டை அடுத்து, சர்க்கரை பீர் மலையில் கிரானைட் வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. மலையில் பாதியளவு வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இதை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விதிகளுக்கு புறம்பாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
15-ஆக-201218:32:34 IST Report Abuse
ganapathy மு.க. யானை போன்று தோற்றம் தரும் மலையை குடைந்து சிற்ப கூடம் அமைக்க யோசனை சொன்னார். கல்லை குடைஞ்சு ஊழல் பண்ண தான் அந்த ஐடியா. வைகோ, கிராம மக்கள் எதிர்ப்பினால் அது நின்று போனது . நிலத்தில், நீரில், கடலில், மணலில், காற்றில் ஊழல் என்றேன்...அதோட மலையிலும் ஊழல்.... (என்ன வடை போச்சு அம்புட்டு தான் )
Rate this:
Share this comment
Cancel
Balachandran - chennai,இந்தியா
15-ஆக-201214:14:32 IST Report Abuse
Balachandran எப்படி மலையை முழுங்கி இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
shanmugam suresh - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-201207:09:50 IST Report Abuse
shanmugam suresh மேலூரிலிருந்து காரைக்குடி சென்றால் ஒரே புகை மண்டலம், எல்லாம் குவாரி வெட்டும்போது கிளம்பும் புழுதி...இதெற்கெல்லாம் இப்பவாவது விடிவு காலம் வந்ததே..
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-201206:37:55 IST Report Abuse
Kasimani Baskaran சரியான மலை முழுங்கி மகாதேவன்கள் கவனக்குறைவாக இருந்தால் மேற்குத்தொடர்ச்சி மலையைக்கூட முழுவதுமாக ஏற்றுமதி பண்ணி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
15-ஆக-201206:33:25 IST Report Abuse
kundalakesi இதை மனமறிந்து செய்தவர்கள் நாசமாகப் போகவேண்டும் . சாபமிட்டாலும் போன மலை திரும்பி வருமா?
Rate this:
Share this comment
Cancel
Periya-Rasu - Baton Rouge,யூ.எஸ்.ஏ
15-ஆக-201203:06:08 IST Report Abuse
Periya-Rasu "சர்க்கரை பீர் மலை&39யை, பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தினர், விதிகளுக்கு புறம்பாக வெட்டி, கிரானைட் கற்களை எடுத்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்." ஏங்க ஒரு மலைய வெட்டி எடுக்க மட்டும் அதிகாரிங்க ஏங்க போனாங்க? கண்ணு குருடா போயிடுத்தா
Rate this:
Share this comment
VIVASAYI - Salem,இந்தியா
15-ஆக-201209:15:07 IST Report Abuse
VIVASAYIஅதுல ஒரு நேர்த்தி, நியாயம் பாருங்க. போட்டோ பாருங்க...என்ன அழகா ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, சண்டை சச்சரவு போட்டுக்காம, இந்த கோடு வரைக்கும் உள்ளது எனக்கு, அதுக்கப்புறம் உள்ளது உனக்குன்னு, யாருடனோ பங்கு ஒப்பந்தம் போட்ட மாதிரி தெளிவா கோடு போட்ட மாதிரி வெட்டி எடுத்திருக்காங்க..பாசக்கார புள்ளைங்க..தப்பு செஞ்சாலும் தப்பா செய்யறதில்லை...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
15-ஆக-201210:30:25 IST Report Abuse
மதுரை விருமாண்டிமம்மி பிராண்ட் பீரை நக்கிக் கொண்டு இருந்திருப்பார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
VIVASAYI - Salem,இந்தியா
15-ஆக-201201:07:31 IST Report Abuse
VIVASAYI நான் சமீபத்தில மீனாட்சியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன். இதுக்கு முன்னாடி, 1980 களில் பலமுறை போயிருக்கிறேன். அப்போதெல்லாம், சிவன் சன்னதி வெளிப்பிரகாரத்தில், சித்தர் சன்னதி மூலையில், கம்பிகளுக்கு பின்னால், அழகழகான வெள்ளை கற்களில் செய்யப்பட்ட, மேதா தக்ஷிணாமூர்த்தி, மற்றும் நாக சிவலிங்கம் போன்ற சிலைகள் எல்லாம் இருக்கும். இப்போதெல்லாம் அந்த இடம் காலியாக உள்ளது. அந்த சிலைகள் எல்லாம் எங்கே உள்ளது.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஆக-201208:04:22 IST Report Abuse
Pannadai Pandianமதுர தளபதி கிட்ட கேட்டா சொல்லிடுவாரு. ஆனால் தளபதின்னு மரியாதையா கூப்பிடனும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை