Tomato rice and pepper egg will include in lunch | சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம்: விரைவில் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம்: விரைவில் அறிவிப்பு

Updated : ஆக 18, 2012 | Added : ஆக 16, 2012 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்' தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு' தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.

இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்' என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்ட போது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது. இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்' தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வழங்கும் உணவு:

தினம் - சாதம், சாம்பார், அவித்த முட்டை
செவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்
வெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு
புதிய மதிய உணவு முறை
* வழக்கம் போல் சாதம், சாம்பார் ஒரு நாள்.
* மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.
* அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது.
* உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithi Esvaran - Chennai,இந்தியா
17-ஆக-201218:33:32 IST Report Abuse
Vaithi Esvaran விஜயகாந்துக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்கவும். பிட்சா, பர்கர், பிரெஞ்சு ப்ரை கிடைக்க வாய்ப்புண்டு வைத்தி சென்னை
Rate this:
Share this comment
Cancel
Bastin Reegan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஆக-201213:07:37 IST Report Abuse
Bastin Reegan வரவேற்கத்தக்க ஒன்று
Rate this:
Share this comment
Cancel
தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா
17-ஆக-201212:35:24 IST Report Abuse
தாழ்ந்த தமிழகமே இப்ப ஊத்துற சாம்பார்ல தக்காளி இருக்கா ஒழுங்கா டெய்லி முட்டை வேக வெச்சு குடுத்த போதும் அதை கண்காணிக்க நடவடிக்கை எடுங்க புது மெனு தேவை இல்லை . பாதி நாள் முட்டை குடுப்பது இல்லை இதுல போரியல் போட்டா ஆகா 4 முட்டை போட்டு ஒரு வகுப்பு முழுதும் பொரியல் வாசனை காண்பிப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ
17-ஆக-201212:03:52 IST Report Abuse
Anton Pham நான் அமெரிக்காவில் இருந்தாலும் எனக்கு சதுணவே பிடித்தமான உணவு. வாரத்தில் ஒரு நாள் ஒரு குவார்ட்டர் கொடுத்தால் நல்லது, கொடுப்பார்களா?
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஆக-201216:21:55 IST Report Abuse
Pannadai Pandianஏன்யா....குழந்தைகளின் உணவை கிண்டலடிக்கிற சமயமா இது ??? நீ வேணும்னா பாரு, உங்க ஊரு கருப்பனுங்க உன் காதை அறுத்து சுட்டு திங்கரானா இல்லையான்னு பாரு. கையில எப்போதும் ஒரு $100 ஸ்டாக் வச்சுக்க. ...
Rate this:
Share this comment
Rama - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
18-ஆக-201203:43:12 IST Report Abuse
RamaWell said Pandi.. Anton Pham should be mugged up by a African american otherwise at least ass kicked by a cowboy.. Houston heat must have made Anton mad...
Rate this:
Share this comment
Cancel
Gayathri Sridhar - Pudukkottai,இந்தியா
17-ஆக-201211:40:55 IST Report Abuse
Gayathri Sridhar குட் ஐடியா அப்படியிய இந்த டாஸ்மாக் காலி பண்ணுங்கப்பா உங்களுக்கு புனியமா போகும் ...... எல்லா family -um நல்லா இருக்கும் எந்த சண்டை-um இல்லாம........
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
17-ஆக-201208:11:35 IST Report Abuse
R.BALAMURUGESAN ....இனி பள்ளி நிர்வாகிகளுக்கும்.... அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கும்.... பெப்பர் வாங்கினோம் என்று புதிதாக கணக்கெழுதி, பணம் சுருட்ட ஏற்பாடு செய்தாகிவிட்டது....
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth.R - chennai,இந்தியா
17-ஆக-201207:36:00 IST Report Abuse
Rajinikanth.R என்றைக்குதான் , இந்த பிள்ளைகளை பெற்ற பெற்றேர்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகளைக்கு தான் சொந்த வருமானத்தில் உணவு வழங்கும் நிலைக்கு உயர்வார்கள் , உலகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளும் தான் ஈன்ற குஞ்சுகலக்கு மற்றவர்களை உணவு வழங்க நிற்பந்திபதில்லை மனிதனை தவிர . ஏன் சந்தேகம் என்வென்றால் இந்த பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்கள் வயிற்றை எப்படி நிரப்புகிறார்கள் இந்த நாட்டில் 80 களிலும் 90 களின் பாதி வரையிலும் சத்துணவு வழங்கியதில் நியாயம் உள்ளது இன்று எராளமான வேலை வாய்ப்புகள் மண்டியுள்ள நிலையில் இன்றைக்கும் அதை தொடர்வதில் என்ன அர்த்தம் உள்ளது .
Rate this:
Share this comment
unmai - chennai,இந்தியா
17-ஆக-201209:52:25 IST Report Abuse
unmaiஇதெல்லாம் இலவச கூட்டம்.. இவர்கள் பிள்ளை பெறுவதில் இருந்து அவர்கள் படிப்பு, திருமணம், அவர்களுக்கு குழந்தைகள், எல்லாம் அரசின் அனுசரிப்பிலேயே நடக்கும்.. இவர்கள் குடிமகன்களாக அரசுக்கு வருவாய் அள்ளி கொடுப்பார்கள்.. எல்லாம் கேடுகெட்ட அரசியல் செய்யும் வேலை.. இவர்களில் பலர் ரிசர்வேசன் முறையில் அரசாங்க வேலைளும் இருப்பார்கள்.....
Rate this:
Share this comment
vilakkam vivek - erode,இந்தியா
17-ஆக-201210:50:20 IST Report Abuse
vilakkam vivek சூப்பர் அருமையான கருத்து நண்பரே ,விலங்கு கூட தன் குழந்தைக்கு ஒரு stage வரை உணவு கொடுக்கும் ,மற்றபடி அந்த குட்டிகளே உணவை தேடி கொள்ள வேண்டும், இதுதான் survival of life cycle ,இங்கே மனித இனத்தில் எல்லாம் தலைகீழ் , அதுவும் இந்தியாவில் இலவசம்னு கொடுத்து குட்டிசுவராகிடறாங்க,ஆனால் இதை மனித நேயம்னு கூட சொல்லலாம், ஏனென்றால் பட்டினியுடன் படிக்க வரும் குழந்தைகளுக்கு தெரியாது, தான் எப்படி பிறந்தோம் என்று?...
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-ஆக-201212:39:16 IST Report Abuse
பாமரன்ரஜினிகாந்த்....ஞாயமான ஆதங்கம் மற்றும் அருமையான பதிவு ....இங்கிருக்கும் அல்லக்கைகள் இதுபத்தி எதுவும் சொல்லாது......
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஆக-201216:23:58 IST Report Abuse
Pannadai Pandianரஜினி காந்த்....தனி நபர் வருமானத்தை உயர்த்துவது அரசின் கடமை. அதை செய்ய முடியலைன்னா இப்படி சோறு போடுவது அரசின் கடமை. ...
Rate this:
Share this comment
Cancel
17-ஆக-201207:16:17 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் அடுத்தது ஈமு முட்டை ஆம்லேட்டோ?
Rate this:
Share this comment
Cancel
17-ஆக-201207:16:11 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் அமாவாசை கிருத்திகை நாட்களில் முட்டை திருட்டு அதிகம்.(பெற்றோர் அனுமதிப்பதில்லை) உள்ளூரில் கிடைக்கும் காய்கனிகளே போதும். சும்மா முட்டை உற்பத்தியாளர்களிடம் பெட்டி வாங்கிக்கொண்டு பெப்பர் முட்டைன்னு கதை விடராங்களோ?.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-ஆக-201212:15:16 IST Report Abuse
மதுரை விருமாண்டிமூட்டையாப் பணம் வாங்கிட்டு முட்டை போடுறாங்கன்னு சொல்றீங்களா ? அப்போ, அடுத்த எலக்சன்லே இவங்களுக்கு நீங்க ஒரு முட்டை கொடுத்துடுங்க.....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
17-ஆக-201205:43:51 IST Report Abuse
Thangairaja டாஸ்மாக்கை மூடிட்டு இதையெல்லாம் செஞ்சா புண்ணியமா போகும்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-ஆக-201206:55:19 IST Report Abuse
மதுரை விருமாண்டிபெப்பர் முட்டை சைடு டிஷ் இனிமேல் தாராளமாக டாஸ்மாக்கில் கிடைக்கும்.. ...
Rate this:
Share this comment
Rajinikanth.R - chennai,இந்தியா
17-ஆக-201209:07:58 IST Report Abuse
Rajinikanth.Rஅதெப்படிங்க முடியும் டாஸ்மாக்ல அவங்க அப்பன்கிட்ட புடுங்குற பணத்துல பாதிய அவங்க எடுத்துகிட்ட மீதி பாதியில கொஞ்சம் கிள்ளி சத்துணுவ போடுறாங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை