E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
புராதன சின்னங்களையும் அழித்து காசு பார்த்த குவாரி உரிமையாளர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
23:44

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே, சமணர் படுகைகள், கல்வெட்டுக்கள் நிறைந்த மலைகளையும், குவாரி உரிமையாளர்கள் விட்டு வைக்காதது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், பாமியான் புத்தரை சிதைத்த தலிபான் செயல் போல, இங்கே கொடுமை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ள, மூன்று மலைகளும், அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளும் மற்றும் திருவாதவூர் மலைகளில் உள்ள, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவறை கோவில்கள், புத்தர், மகாவீரர் மற்றும் ஜெயின் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் பல இடங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இச்சின்னங்கள் நிறைந்த பகுதிகளில், கிரானைட் கற்கள் கிடைத்ததால், படிப்படியாக அவற்றை அழித்து, குவாரி உரிமையாளர்கள், கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதில், கீழையூர் ரங்கசாமிபுரத்தில், டாமின் கட்டுப்பாட்டில் உள்ள, சமணர் படுகை மலை மற்றும் புறாக்கூட்டு மலை முற்றிலும் சிதைந்தன. சர்க்கரை பீர் மலை எனப்படும், பொக்கிஷ மலையை, "கேக்' வெட்டுவது போல் துண்டு துண்டாக வெட்டிய போது, ஊர் மக்கள் எதிர்ப்பாலும், கோர்ட் உத்தரவாலும், பணி, பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு, 7 மலைகளை கொண்ட அரிட்டாபட்டி மலையின் பின்புறம், மக்களுக்கு தெரியாமல், கற்களை வெட்டும் பணி துவங்கியது. தொடர் வெடிச் சத்தம் கேட்டு, மக்கள் அங்கு சென்ற போது, மலையின் சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.


குவாரி நடத்துவதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர், சி.ஆர்.ரவீந்திரகுமார் இதுகுறித்து கூறியதாவது: அரிட்டாபட்டியில், ஏழு மலைகள் உள்ளன. இவற்றில், சமணர் படுகைகள், பஞ்ச பாண்டவர் வசித்த இடம், குடவறை கோவில், புத்தர் சிலைகள், பிராமி கல்வெட்டுக்கள் என, புராதன சின்னங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், இம்மலையை தெய்வமாக வணங்கி, இதன் ஊற்று நீரை, புனித நீராக எண்ணி வருகின்றனர். மலைகளில் விழுந்து வரும் மழை நீர், மேல் தருமம் கண்மாயில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 1966 முதல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்தை, டாமின் நிர்வாகம், செப்., 19, 2008ல், தனியாருக்கு, "லீசு'க்கு கொடுத்தது. 400 ஏக்கரில், இம்மலையை, குவாரி உரிமையாளர்கள் வெட்டி இருப்பர். ஆனால், "மலையில் குவாரி கூடாது' என, ஜூன், 2011ல், ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கற்களை வெட்ட, ஜூன், 28, 2011ல், கோர்ட் தடை விதித்தது. குவாரி உரிமையாளர்கள் தடையை உடைத்து விடக் கூடாது என, ஜூலை 15, 2011ல், உச்ச நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் தடையால், இந்த மலைகள் தப்பின, என்றார். அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், குவாரி உரிமையாளர்களால் கற்களை வெட்டி எடுத்துச் செல்ல முடியாது. 1995 முதல், 2012 வரை கனிம வளத்துறை, வருவாய் துறைகளில் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டால் உண்மை தெரியும் என்ற கருத்து பரவலாக எழுந்து இருக்கிறது.

Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-ஆக-201201:34:28 IST Report Abuse
மதுரை விருமாண்டி 1995 முதல், 2012 வரை கனிம வளத்துறை, வருவாய் துறைகளில் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளிடமும் "விசாரணை" மேற்கொண்டால் உண்மை தெரியும் விசாரணையை லாட்டியை உள்ளே நுழைத்து, தட்டி, தட்டி விசாரித்தால் தான் வரும்.. சின்ன ப்ராப்ளம்... இதில் போலீஸ், ஜட்ஜுங்க கூட அதே கூட்டணியில் இருக்கிறதாலே வெறும் பேச்சாவே இருந்திருமோ என்கிற ஆதங்கம் எழுகிறது..
Rate this:
0 members
0 members
0 members
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
17-ஆக-201215:13:30 IST Report Abuse
paavapattajanam உண்மையான அரசு என்றால் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடியோடு பெத்து எடுத்து குடும்பத்தோடு வாழ் நாள் சிறையில் அடைக்க வேண்டும் - சொத்துகளை பிடுங்க வேண்டும் - அமைதியாக லஞ்சம் அரசு அதிகரிகள், அமைச்சர்கள், போலீஸ் காரர்கள் அனைவருக்கும் லாடம் கட்டி -வேலை நீக்கம் செய்து - வாழ்நாள் சிறை மற்றும் சொத்துகளை அரசு உடமை ஆகவேண்டும் - நடக்குமா - பார்க்கலாம். ஜெய் ஹிந்த்.
Rate this:
0 members
0 members
0 members
manokaran - kanchipuram,இந்தியா
17-ஆக-201218:05:17 IST Report Abuse
manokaranஅம்மா அவர்கள் குவாரி ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமனையான தண்டனையை வாங்கி கொடுக்கவேண்டும் கந்தன்,சென்னை ...
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Jay - Bengaluru,இந்தியா
17-ஆக-201214:26:45 IST Report Abuse
Jay இன்னும் இப்படியே நிலைமை போனா இந்த வருஷம் மட்டுமில்ல, இனி எந்த வருஷமும் மழை பெய்ய வாய்ப்பே இல்லாம போயிடும்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
jaiganeshbolo - Chennai,இந்தியா
17-ஆக-201213:23:23 IST Report Abuse
jaiganeshbolo அதிகாரிகள் இதற்கு முழு உடந்தை அவர்கள் உதவி இல்லாமல் முதலாளிகள், அரசியல் வாதிகள் இதனைச் செய்யவே முடியாது முதலில் தண்டிக்கப் படவேண்டியவர்கள் அவர்களே
Rate this:
0 members
0 members
0 members
Cancel
saravanan - erode,இந்தியா
17-ஆக-201211:29:53 IST Report Abuse
saravanan All the politicians are in the greed of money they are ready to sale the whole india to a foreign country.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Michael - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-201211:03:46 IST Report Abuse
Michael சமூக அக்கறை உள்ள பலரும் பயந்தது இதற்காகத்தான். நடந்து முடிந்ததற்காக ஒப்பாரி வைத்து அழும் கூட்டம் தான் நம்முடையது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு வரலாறு என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. அதற்கு முன்பாவது ஏதாவது இருந்திருக்கும் என்று குறைந்த பட்சம் நம் சந்ததியாவது அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த குவாரி போக்கிரிகள், அரசியவாதி வியாதிகள், அதிகாரி திருடர்கள் என்ற முக்கூட்டு குழிதோண்டி அழித்துவிட்டது. குவாரி கயவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்.. அரசும்தான். இந்த அதிகாரிகளை மாட்டு அடி அடித்தாலும் தகும். ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கினார் இறைவன் என்று பைபிள் கூறுகிறது. இருந்த எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்த இவர்களை என்னவென்று சொல்வது. நம்மைத்தாமே நாம் ஆள்வதாகச் சொல்லிக் கொள்வது, கடந்து செல்லும் ஒவ்வொருநாளும் அர்த்தமில்லா அபத்தத்தமாக ஆகிக்கொண்டிருக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Ram Mohan - tirunelveli,இந்தியா
17-ஆக-201210:31:42 IST Report Abuse
Ram Mohan எதிர்கால சந்ததிக்கு என்று நம் முன்னோர் விட்டு சென்றவை பல அனால் நம் அவர்களுக்கு ஒரு சுடுகாடு கூட இல்லாமல் எல்லாம் புதைகுளிகளாய் மாற்றி விட்டோம் ...இப்படி மாற காரணமான அரசியல் வாதிகள் ,அரசு ஊழியர் என்ற போர்வையில் துணை போன ஊழல் பெருச்சாளிகள் இவர்களை எல்லாம் குடும்பத்தோடு போட்டு அந்த புதைகுழியில் மூடினாலும் தப்பு இல்லை ...சிறுமி சுருதி வழக்கு போல கோர்ட் இதையும் பதிவு செய்து மக்கள் எதிர்காலம் அழியாமல் காக்க நீதி தேவதை நீ கண் திறப்பாய்
Rate this:
0 members
0 members
0 members
Cancel
K Saravana - Chengalpattu,இந்தியா
17-ஆக-201210:16:08 IST Report Abuse
K Saravana தமிழின் தொன்மைக்கு ஆதாரமாக இருப்பவை தமிழ் பிராமி கல்வெட்டுகள். இவை அனைத்தும் சமண படுக்கைகளுக்கு அருகில் உள்ளவை. குவாரி வைத்து இவைகளை உடைத்து விட்டால், பிறகெப்படி தமிழின் தொன்மை குறித்து பேசுவது? பெருமைப்படுவது? தமிழை வைத்து பிழைப்பை ஓட்டும் கட்சிகள் என்று திருந்துமோ?
Rate this:
0 members
0 members
0 members
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
17-ஆக-201209:22:10 IST Report Abuse
saraathi பொங்கி எழுந்த பொதுமக்களுக்கு நன்றிகள். இத்தகைய நிகழ்சிகளின் மூலம் சாதாரண மக்களிடையே சாதி,மத வெறுப்புகள்,பிரிவினைகள் இல்லையென்பது புலப்படுகிறது.இதன்பின்னறேனும் சுயநலத்திற்காக சாதி,மத தூண்டல்களை துண்டிவிடுவோரது சதியில் வீழாது நம் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
17-ஆக-201209:13:51 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்ளும் பல செய்திகளை உண்மை என்று நிரூபிக்க பயன்படுவதே இதுபோன்ற புராதனச் சின்னங்கள்தான். குமரிக் கண்டம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் இருக்கின்றனவே அன்றி ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. சிந்து சமவெளி ஆய்வில் சில எழுத்து குறியீடுகள் உள்ளனவே அன்றி அவை தமிழருடயவைதான் என்று நிரூபிக்க முடியவில்லை. இந்து மதத்தின் துவக்கம் தமிழரிடையே இருந்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தாலும் போதிய ஆவணங்கள் இல்லை. இந்தியா முழுதும் தமிழர்களே ஒரு காலத்தில் இருந்தனர் என்பதற்கும் கல் வெட்டுக்கள் வாயிலாக மட்டுமே நிரூபிக்க முடியும். வட இந்தியர்கள் ஆராய்ந்து இந்த உண்மையை வெளி இடப்போவதில்லை. தமிழரின் வான நூல்களும், கணித நூல்களும், பல இலக்கிய நூல்களும் காணாமல் போய் வெகு காலங்கள் ஆகிப்போயின. தமிழரின் மொழிப்பற்று அவ்வளவே. தமிழருக்கு எதிரி தமிழரே. இதை நிரூபிப்பதுபோல அமைந்துள்ளது மதுரை வாழ் தமிழர்களின் இச் செயல். தமிழ் மொழியை வளர்த்த மதுரை இன்று தமிழரின் பெருமையை சிதைக்கும் போக்கில் இறங்கி இருப்பது கண்டு மனம் கனக்கிறது. திருந்துங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
17-ஆக-201213:12:14 IST Report Abuse
Desabakthanவெளிநாட்டினரும் ப.ஜ.க. உம துவாரகாவை கண்டுபிடித்து வரலாற்றுக்கு உயிர் கொடுத்தனர். ஆனால் இங்குள்ள முதுபெரும் அரசியல்வாதி ராமன் என்ன engineer ஆ என்று நக்கல் பண்ணினார். தொல்லியல் பற்றி என்ன அக்கறை இந்த பண, அடி முட்டாள், பெருச்சாளிகளுக்கு?குமரி கண்டம், ஆப்ரிக்கா, மெக்சிகோ எல்லாமே சேர்ந்து இருந்த தாகவும் ஆராய்கிறார்கள். இந்து மதம் மற்றும் அல்ல மெக்சிகோவிலும் வானியல் முறைபடி கட்டுமானங்கள் உள்ளன. தொல்லியலார்கள் தமிழ் நாட்டு கோவிலுக்கும் மெக்சிகோ கட்டுமானத்துக்கும் பிரமிடுக்கும் உள்ள ஒற்றுமை ஆராய்கையில் நம்ம அடி முட்டாள் கல்லை எப்படி தோண்டலாம் என்று அலைகிறான். விட்டால் பிரமிட் , தாஜ்மகளையும் விட மாட்டார்கள் துரோகிகள்....
Rate this:
0 members
0 members
0 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.