ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (261)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
soundararajan ks - chennai,இந்தியா
05-நவ-201206:02:08 IST Report Abuse
soundararajan ks இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
Rate this:
Share this comment
Cancel
New Bharat Congress - New Delhi,இந்தியா
21-ஆக-201202:08:46 IST Report Abuse
New Bharat Congress தமிழா ஊழலை எதிர்க்கும் மூன்றாம் அணி தொடங்கப் பட்டுள்ளது. முப்பது மாநிலங்களுக்கும் முதற்சுற்று பணிகள் முடக்கிவிடபட்டுள்ளது ஆதரிப்பீர் புதிய பாரத தேசிய காங்கிரஸ். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக படித்த தமிழனே வாரீர் ://www.facebook.com/pages/New-Bharat-National-Congress-Tamil-Nadu/111935668953708
Rate this:
Share this comment
Cancel
kumaravel - tampinis,சிங்கப்பூர்
20-ஆக-201211:04:39 IST Report Abuse
kumaravel வீட்டில பேர பிள்ளைகளுடன் விளையாட வேண்டிய நேரத்துல இவரு fb விளையாடுறாரு, என்ன சின்னபிள்ளை தனமா இருக்கு .
Rate this:
Share this comment
Cancel
Raja Dhanasekaran - Muscat,ஓமன்
20-ஆக-201209:11:20 IST Report Abuse
Raja Dhanasekaran நூதன திருடர்களின் கையில் இருந்து என்றுதான் தமிழனுக்கு விடுதலையோ ...?
Rate this:
Share this comment
Cancel
BABU - CHENNAI,இந்தியா
20-ஆக-201208:51:49 IST Report Abuse
BABU வெரி குட் நல்ல விஷயம் ......நன்றி நன்றி ........
Rate this:
Share this comment
Cancel
Kes7 - Springfield,யூ.எஸ்.ஏ
19-ஆக-201221:22:31 IST Report Abuse
Kes7 நானும் எவ்வளவு தான் நல்லவன் மாதிரியே நடிக்குறது
Rate this:
Share this comment
Cancel
Samy Doss - Johannesburg,தென் ஆப்ரிக்கா
19-ஆக-201211:05:29 IST Report Abuse
Samy Doss தினமலருக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட மாட்டாது. இங்கே கருத்து சொல்லுகிறவர்களும் தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையா என்று சோதிக்காமலே கருத்து தெரிவிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Parvathi Nambiar - Jersey city,யூ.எஸ்.ஏ
19-ஆக-201204:13:23 IST Report Abuse
Parvathi Nambiar அவர் ஒன்னும் உங்களுக்கு பயந்த்ட்டு ஒன்னும் ஒடல. எதிர்த்து போராடி பழக்கமுள்ளவர். பேஸ் புக்குல ஒன்னும் ஊழல் பண்ண வைப்பில்லைன்னு தெரிஞ்சிருக்கும் அதான் கெளம்பிட்டாரு. ஆனா பாருங்க இந்த தொழில்ல உள்ள வருமானத்தை புரிஞ்சி புதிய சமூக வலைத்தளம் ஆரம்பிக்க போறாரு. பேரு: "கலைஞர் புக்"
Rate this:
Share this comment
Cancel
Ramani Balu - Bangalore,இந்தியா
18-ஆக-201219:56:50 IST Report Abuse
Ramani Balu இதுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம் கழக கண்மணிகள் " Face book தலைவனுக்கு பாராட்டு விழா "
Rate this:
Share this comment
Cancel
nandhakumar - PONGALUR,இந்தியா
18-ஆக-201213:56:10 IST Report Abuse
nandhakumar முதலில் சொல்லியவர்களின் கருத்துகளில் இருந்து தான் கருணாநிதின் கணக்குக்கு கருத்து சொல்லவேண்டும் .அவரின் கணக்கும் சரி வலைதள கணக்கும் சரி இனிமேல் சரி வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்