- அமுதன் - "தெய்வீக சுக அனுபவம்' என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தமிழக கலைஞர்களின் மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு விடுதிகளில் தங்கியிருக்கும் ஏராளமான சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர்.
கலை நிகழ்ச்சி: யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை-இந்திய உறவு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக - யாழ்ப்பாண மக்களின் கலை உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறான அமைப்புடன் திட்டமிடப் பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படித்த மாணவியருடன், கிராமப்புறங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து பள்ளி மாணவியர் அழைத்து வரப்பட்டுஇருந்தனர். இலங்கை பள்ளிகளில் நுண்கலை பயிற்சி என்பது ஒரு முக்கியமான பாடம். இதில் இசை, நடனம் போன்றவை அடங்கும். உள்நாட்டுப் போரில் பெற்றோரை இழந்து, விடுதிகளில் தங்கிஇருக்கும் சிறுமியரின் மனதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக கலைஞர்களால் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான இலங்கை அதிகாரிகளின் வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் அலர்மேல் வள்ளி நாட்டிய நிகழ்ச்சியை நிகழ்த்தினார். கலித்தொகை பாடல் ஒன்றை மையமாகக் கொண்டு இந்த நடனம் வடிவமைக்கப்பட்டிந்தது. தொடர்ந்து அந்த பாடலுக்கும், நடனத்துக்கும் இடையேயான உறவை அலர்மேல் வள்ளி விளக்கினார்.
கலந்துரையாடல்: தொடர்ந்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நடனக் கலைஞர் அலர் மேல் வள்ளியுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நடனம், இசை வாழ்க்கை குறித்து அவர்கள் பேசினர். இதையடுத்து, பங்கேற்க வந்திருந்தோர் அவர்களுடன் கலந்துரையாடினர். நாட்டியத்தில் உள்ள பாவங்களும் விளக்கப்பட்டன. இரண்டாம் நிகழ்ச்சி, இன்று பிற்பகல் துவங்குகிறது. யாழ் பல்கலைக் கழக அரங்கில் பயிற்சி நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் கலைகளின் நுணுக்கம் பற்றி தமிழக கலைஞர்கள் பேசுகின்றனர். தொடர்ந்து தெய்வீக சுக அனுபவத்தில், மாலை, இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சங்கிலியான் தோப்பு: யாழ்ப்பாணம் சங்கிலியான் தோப்பு என்ற இந்த இடம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், நிகழ்வு பற்றிய பரபரப்பு யாழ்ப்பாணத்தில் தொற்றிஉள்ளது. சங்கிலியான் தோப்பு, முன்பு புலிகளின் கையில் இருந்தது. அது, கிட்டு பூங்கா என்று அழைக்கப்பட்டது. அங்கு மிகப்பெரிய ஆயுதக் கிடங்கை புலிகள் வைத்திருந்தனர். அந்த இடம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு மீண்டும் சங்கிலியான் தோப்பாக மாற்றப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்ட இடத்தில், இந்த கலாசார நிகழ்ச்சி நடத்தப்படுவதால் தான் இந்த பரபரப்பு. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கூட உள்ளனர். இதே இடத்தில், நாளை, உன்னி கிருஷ்ணன் இசை நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சினிமாவில் வாய்ப்பு இழந்து அரசியலில் பிழைப்பை ஓட்டும் சீமான், பிரபாகரன் உயிருக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய வைகோ போன்ற இந்திய தேச திரோகிகள் தங்களுடைய நாளைய அறிக்கையில் இலங்கையில் உள்ள நம் தொப்புள்கொடி உறவை மகிழ்விக்க சென்ற நடனக் கலைஞர் அலர்மேல் வள்ளி, பாடகர் உன்னி கிருஷ்ணன் போன்றவர்களை தமிழ் ஈழ திரோகிகள் என்று கூறுவார்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.