India wakes up to border threats: Plans 18 tunnels to counter China and Pakistan | ராணுவ சுரங்கங்கள் எப்படி இருக்கும்: தாமதமாக விழித்துக்கொண்ட மத்திய அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ சுரங்கங்கள் எப்படி இருக்கும்: தாமதமாக விழித்துக்கொண்ட மத்திய அரசு

Added : ஆக 17, 2012 | கருத்துகள் (15)
Advertisement

நீண்ட தாமதத்திற்குப் பிறகு, ஒரு வழியாக பாகிஸ்தான், சீன எல்லைகளில் சுரங்கப் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் எல்லைகளில் சுரங்கப்பாதைகளை அமைத்து பாதுகாப்பை கண்காணிக்கின்றன. சமீபத்தில் கூட இந்திய எல்லைக்குள் நுழையுமாறு பாகிஸ்தான், அத்துமீறி சுரங்கப்பாதையை அமைத்தது தெரிய வந்தது. இதே போன்ற சுரங்கப் பாதைகளை இந்தியாவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. மத்திய ராணுவ அமைச்சகம், வழக்கம் போல் மெத்தனமாக இருந்துவிட்டு, தற்போது விழித்துக்கொண்டு உள்ளது. இதன்படி சீனா, இந்திய எல்லைகளை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில், 18 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


காரணம் என்ன: சுரங்கப் பாதைகள் அமைத்தால் நெருக்கடி நேரங்களில், விரைவாக எல்லைப்பகுதிக்கு ராணுவம், ஏவுகணைகள், ராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகள், குண்டுகள் போன்றவற்றை கொண்டு செல்லவும், அவற்றை சுரங்கங்களிலேயே ஸ்டாக் வைக்கவும் முடியும். ராணுவத்தினரின் நடமாட்டத்தை, செயற்கைக்கோள் உதவியுடன் எதிரி நாடுகள் கண்டுபிடித்து விடலாம். சுரங்கம் அமைத்தால், ராணுவத்தின் நடமாட்டத்தை, எதிரிகள் கண்டுபிக்க முடியாது. வெயில், மழை, பனி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்தும் தப்பிக்கலாம். மேலும் என்.பி.சி., ( நியூக்ளியர், பயோலாஜிக்கல், கெமிக்கல்) ஆயுதங்களை பாதுகாக்கவும், கட்டுபாட்டு மையமாகவும் பயன்படுத்தலாம்.


18 இடங்கள்: சீனா, பாகிஸ்தான் எல்லையின் 7 இடங்களில் முதல் கட்ட தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 11 சுரங்கங்கள் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநில எல்லையில் அமைக்கப்டும்.


வசதிகள்: சுரங்கப்பாதைகள், பெரியதாக அமைக்கப்படும், சாலை மற்றும் இருப்பு பாதைகளும் இதனுள் அமைக்கப்படும். அப்போது தான் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல முடியும். இந்த திட்டத்திற்காக 26,155 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2020 -2021ல் இப்பணி நிறைவடையும்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraj - Anguchettypalayam,இந்தியா
17-ஆக-201218:44:17 IST Report Abuse
Jayaraj நல்லா குடுக்கரங்காய detailu .இப்படியே எல்லா ரகசியங்களை எல்லாம் சொல்லிடுங்க , 2020 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும். கருப்பு பணம், ஊழல் பத்தி மட்டும் ரகசியமா வச்சுகோங்க. வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
kamal - sudukadu,இந்தியா
17-ஆக-201216:11:44 IST Report Abuse
kamal IS VERY GOOD, BUT TOOOOOOOOOOOOO LATE, PLEASE HURRYYYYYYYYYYYYYYYYYY UP OTHER WISE CHINA,WILL DO................................................ SOME?????????????
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஆக-201216:10:30 IST Report Abuse
Pannadai Pandian நம் தலை கிட்ட இந்த ப்ராஜெக்ட ஒப்படைங்கப்பா.....26155 கோடியில இன்னும் ரெண்டு சைபர பின்னாடி சேர்த்து 2020 குள்ள முடிச்சு கொடுத்துருவாரு.....எல்லோருக்கும் தனி சூட்கேஸ்ல பணத்த பிரிச்சு ஹேன்ட் டெலிவரி கொடுத்துருவாரு. இப்படித்தான் 2G லேயும் செஞ்சாரு ஆனால் விஷயம் அவுட்டானத்தால ஆரியனுங்க இவரை மாட்டி உட்டுட்டானுங்க.
Rate this:
Share this comment
Cancel
Manohar - Trichy,இந்தியா
17-ஆக-201214:24:03 IST Report Abuse
Manohar 26,155 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம. கண்ணா அடுத்த லட்டு தின்ன ஆசையா?
Rate this:
Share this comment
Cancel
Dhianesh - Sligo,அயர்லாந்து
17-ஆக-201213:41:44 IST Report Abuse
Dhianesh எவ்வளவு அழகா பிளான் பண்ண விசயத்த சொல்லிடாங்க பார்தீங்களா... இதுக்கு பேரு ராணுவ ரகசியம்... இதுக்கு மத்திய அரசு பேசாம தூங்கிகிட்டே இருக்கலாம் ... பக்கத்துக்கு நாட்டு காரன் செய்யறத சொல்ளீட்ட செய்றான்... எத வெளிய சொல்லணும் எத சொல்லகூடாது கூட தெரியாம ஆட்சி நடத்துவதால் தான் நம் நாடு உலக அரங்கில் தலை குனிந்து நிற்கிறது ... பல நாடுகள் நம்மை பார்த்து சிரிக்க காரணம் இது தான்... நம் நாட்டை வல்லரசு ஆக்க கூடிய தலைவன் என்றைக்கு வருவான்..... இந்தியன்
Rate this:
Share this comment
Cancel
guru thill1980 - chennai,இந்தியா
17-ஆக-201213:24:54 IST Report Abuse
guru thill1980 டெண்டர் விட ரெட்டி ப்ரோதேர்ஸ் அணுகவும் சூப்பர் ஆ சுரங்கம் தொண்டுவாங்க
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஆக-201216:02:12 IST Report Abuse
Pannadai Pandianகேபிள் பதிக்க மாறன் ப்ரதர்சை அணுகவும்....
Rate this:
Share this comment
Cancel
Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ
17-ஆக-201212:08:41 IST Report Abuse
Anton Pham பயபுள்ளைங்க அடுத்ததா சுரங்கம் தோண்டுறேனு ஆட்டைய போட பிளான் பண்ணிட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
17-ஆக-201211:43:03 IST Report Abuse
Siva அப்படியே எங்க எங்க சுரங்கம் வருதுனு ஒரு அறிக்கை கொடுத்துடுங்க. பாக் சீன ஆளுங்களுக்கு அந்த இடத்தை தேடற வேலை மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Muthu Raja - woodlands,சிங்கப்பூர்
17-ஆக-201206:47:55 IST Report Abuse
Muthu Raja ஐயா இராணுவதுக்குண்டு ஒரு ரகசியம் இருக்குல அத ஏன் வெளியிடனும் . சீனா பாகிஸ்தான் காரன் எல்லாம் நோண்ட ஆரம்புசுருவன்.................
Rate this:
Share this comment
Cancel
Sathura Giri - Jurong West,சிங்கப்பூர்
17-ஆக-201206:43:24 IST Report Abuse
Sathura Giri பாத்துங்க . போட்டு முடிந்தவுடன் அவர்கள் பயன் படுத்தி விட போகிறார்கள்......
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
17-ஆக-201218:03:00 IST Report Abuse
K.Sugavanamஅவங்க தோடி முடிச்சு வெளில இந்த பக்கம் வரும்போது தான் நம்ப ஆளுக கொட்டாவிய நிறுத்துவாங்க.ஆனா நாம தோண்ட ஆரம்பிக்கும் போதே அடுத்த பக்கத்துல இருந்து போட்டு தள்ளிடுவாங்க. ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை