People unhappy about ADMK MLA's action in Salem | சேலம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., க்களின் ஆட்டம் அதிகரிப்பு: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (16)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கடந்த ஆட்சியில், தி.மு.க.,வினர் செய்த தவறுகளை, குற்றங்களை, சேலம் மாவட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், அவர்களை சார்ந்துள்ள நிர்வாகிகளும், பயமின்றி செய்து வருகின்றனர். அப்போதைய நிலையில், கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தி.மு.க.,வினர் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டனர். தற்போதைய சூழலில், முதல்வர் ஜெயலலிதா சாட்டையை சுழற்றா விட்டால், வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கோட்டையான சேலம், கை நழுவி போகும் வாய்ப்புள்ளது. கடந்த, தி.மு.க., ஆட்சியில், சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளில், ஆறு தொகுதியில், தி.மு.க.,வும், மூன்று தொகுதியில், பா.ம.க.,வும், ஒரு தொகுதியில் , காங்கிரசும், ஒரு தொகுதியில், அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றன. மாவட்ட, "மாஜி' அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம், சேலத்தை தன் கோட்டையாக கருதி, பலரை மிரட்டியும், கட்ட பஞ்சாயத்து செய்தும், ரவுடிகளால் தொந்தரவு கொடுத்தும், வீடு, நிலம், சொத்து உள்ளிட்டவற்றை வளைத்து போடும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், ரவுடிகள் சிலர் செயல்பட்டனர். நான்கு ஆண்டுகளில், பொதுமக்கள் வெறுத்து ஒதுக்கும் அளவில், தி.மு.க.,வினரின் செயல்பாடுகள் இருந்தன.

மாஜியின் நடவடிக்கையை பார்த்து, ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும், தங்கள் பங்குக்கு, அந்தந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்தினர். நிம்மதியிழந்து தவித்த மக்கள், தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர். 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், சேலம் தொகுதி கைவிட்டு போனது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அனைத்து தொகுதியிலும், "வாஷ் அவுட்' ஆனது. உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்தும், தி.மு.க.,வின் கையை விட்டுப் போனது. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா, சேலத்தில், தி.மு.க.,வினர் நடத்திய அட்டகாசங்களுக்கு கைது நடவடிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது, "வாலு போயி கத்தி வந்த கதையாக' அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சி நிர்வாகிகளும், தங்களுடைய சுயரூபத்தை காட்ட

Advertisement

ஆரம்பித்துள்ளனர். "ஐந்து ஆண்டு காய்ந்து கிடந்தோம்; நாங்கள் சம்பாதிக்க இப்போது தான் வாய்ப்பு' எனக் கூறி, தொட்டதெற்கெல்லாம் பணம் பிடுங்கும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுமக்களும், "தி.மு.க.,வினரைப் போல் தான், அ.தி.மு.க.,வினரும் உள்ளனர்' என, வேதனையுடன் கூற துவங்கி விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள, எட்டு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கை: சேலம் தெற்கு, எம்.எல்.ஏ., செல்வராஜ்: மக்கள் பிரச்னையைப் பற்றி இவர் கண்டு கொள்வதில்லை. தான் சார்ந்த குடும்பத்துக்கு தேவையானவற்றை, பதவியை பயன்படுத்தி காரியம் சாதித்து வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை சென்றால், பின்னாலே, இவருடைய போன் வருகிறது. நிர்வாகியானாலும் சரி, பொது ஜனமானாலும் சரி," காசு இருந்தால் வா; இல்லையேல் வெளியே போ' என, விரட்டியடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொகுதி மக்களுக்காக இதுவரை சொல்லிக் கொள்ளும் படி எதையும் செய்யவில்லை. மாநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளதால், தன்னை யாரும் அசைக்க முடியாது, எனக் கூறி வருகிறார். மக்களிடம் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Zubair Masood Mohamed Kassim - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-201205:26:06 IST Report Abuse
Zubair Masood Mohamed Kassim ஒ இது ADMK அடிமை ராஜாங்கம் ...
Rate this:
Share this comment
Cancel
Kumaraswami Balasubramanian - erode ,இந்தியா
17-ஆக-201222:20:58 IST Report Abuse
Kumaraswami Balasubramanian உங்களை பார்த்து உலகம் சிரிக்கிறது கடந்த 15 மாத ஆட்சியில் உங்கள் சாதனை என்ன? மக்கள் வரிபணத்தில் கொடுத்த இலவசங்கள் தவிர ஒன்றுமில்லை பாவம் அவர்களும் கொஞ்சம் சில்லறை சேர்த்தட்டும்..
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
17-ஆக-201217:54:09 IST Report Abuse
K.Sugavanam ஏற்கெனவே ஒரு தபா கூப்பிட்டு போட்ட போடுல டவுசர் நனைஞ்சு வந்து கம்முனு கெடந்தாங்க.இப்ப பெயர்ச்சி யால ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க போல.மம்மி சரியான பேதி வைத்தியம் செஞ்சாலோழிய வழிக்கு வர மாட்டங்கபோல.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
23-ஆக-201201:51:35 IST Report Abuse
மதுரை விருமாண்டிமம்மிக்கு பேதி ஆகாமே இருந்தா சரி......
Rate this:
Share this comment
Cancel
prabahar - madurai,இந்தியா
17-ஆக-201213:33:43 IST Report Abuse
prabahar இனிமேல் பவர் கட் கிடையாது... அம்மா சாட்டையை எடுத்து சுழட்ட ஆரம்மிச்சட்டகன்னா சும்மா காத்து பலமா அடிக்கும்...... தமிழ்நாட்டுக்கு பவர் கட்டே கிடையாது.....
Rate this:
Share this comment
Cancel
buruhani - baniya,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஆக-201213:07:28 IST Report Abuse
buruhani புத்திசாலி முதல்வருக்கு தெரியும் சாட்டையின் பிடியே அவர்கள் தான் என்று .
Rate this:
Share this comment
Cancel
kkn - salem,இந்தியா
17-ஆக-201212:59:47 IST Report Abuse
kkn முதல்ல சிறு விவசாயிகள் வாழ வழி பண்ணுங்க,இல்லைனா,சாப்பாட்ற்கு பதிலா ___________________
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
17-ஆக-201212:58:58 IST Report Abuse
Rangarajan Pg இந்த அம்மா சாட்டையை தான் சுத்தி சுத்தி அடிக்கிறார்கள். . ஆனா அது வெறும் ""விஷ்க் விஷ்க்"" என்று தான் சத்தம் வருகிறது. ஆனால் ஒருவனும் பயபடுவதில்லை. ஒரு அடியும் எவன் மேலும் படுவதில்லை. அந்த அளவிற்கு கைதேர்ந்த நிலையில் அடிபடாமல் அடிக்கிறாரோ என்னவோ. எந்த ரிசல்டும் இல்லாமல் வெறும் சாட்டையை சுற்றி என்ன பிரயோஜனம்.
Rate this:
Share this comment
Cancel
sumithran - singapore,சிங்கப்பூர்
17-ஆக-201212:08:15 IST Report Abuse
sumithran "வாலு போயி கத்தி வந்த கதையாக&39 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சி நிர்வாகிகளும், தங்களுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர். "ஐந்து ஆண்டு காய்ந்து கிடந்தோம் நாங்கள் சம்பாதிக்க இப்போது தான் வாய்ப்பு&39 எனக் கூறி, தொட்டதெற்கெல்லாம் பணம் பிடுங்கும் நிலைக்கு வந்து விட்டனர். பொதுமக்களும், "தி.மு.க.,வினரைப் போல் தான், அ.தி.மு.க.,வினரும் உள்ளனர்&39 என, வேதனையுடன் கூற துவங்கி விட்டனர். ஜெயலலிதாவும் அ.தி.மு.க எம்.எல்.ஏ தான்.. அவரும் தன் சுய ரூபத்தை காட்டிவிட்டார்.. சசிகலா இல்லாமல் தான் வாழ முடியாது என்று எப்பொழுது மீண்டும் சேர்த்துக் கொண்டாரோ.. அப்பொழுதே சனி ஆரம்பம் ஆகி விட்டது... ஜெயலலிதாவின் மேல் மக்கள் மிகப் பெரிய அளவில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை... இப்படியே போனால்.. 2004 லோக்சபா தேர்தலில் அடி வங்கியதை போல.. 2014 லும் அனைத்து தொகுதிகளையும் பறி கொடுத்து விட்டு, மூலையில் அமர வேண்டியது தான்.. பிரதமர் ஆகும் கனவு எல்லாம் பகல் கனவாகவே போய் விடும்.
Rate this:
Share this comment
Cancel
தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா
17-ஆக-201210:48:06 IST Report Abuse
தாழ்ந்த தமிழகமே மக்கள் திட்டம் எல்லாம் எப்படி பாட்டி வாய்ல வடை சுடுதோ அதே மாதிரி கட்சிக்காரன் கிட்டயும் வயல் சவுக்கு எடுக்கும். ஏன் தப்பு செய்ற ஒரு MLA வ உள்ள தூக்கி போடு அப்பறோம் வேற எவன் தப்பு செய்றானு பார்போம். அது சரி நமக்கே பெங்களூர் பிரச்னை இருக்கு. கட்சி காரனுக்கு ஒரு முன்சீப் கோர்ட் கேஸ் கூட இல்லாட்டி மரியாதை இருக்காதே
Rate this:
Share this comment
Cancel
Cherran - Sydney,ஆஸ்திரேலியா
17-ஆக-201208:37:33 IST Report Abuse
Cherran If this continues, Vijayakanth will get good Chance in next election at Salem Division. Thanks AIADMK.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.