புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படம், நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும், புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான்.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி, பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை, "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
முதல் படம்: 1826ம் ஆண்டு பிரான்சை நாட்டை சேர்ந்த, ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர், முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. பல்வேறு அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அன்று கடினம்: முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், தற்போது இது எளிதாகி விட்டது. புகைப்படத்தின், தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் முன்னேற்றம் அடைந்து விட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.