மதுரை:தமிழகத்தை உலுக்கி வரும், கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக, மதுரை எஸ்.பி., அலுவலகத்தில் சரணடைந்த, "பி.ஆர்.பி., கிரானைட்ஸ் எக்ஸ்போர்ட்' உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, பல்வேறு காரணங்களை கூறி, போலீஸ் விசாரணையை இழுத்தடித்ததால், கைது நடவடிக்கை தாமதம் ஆனது.
மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில், 18 குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தோண்ட, தோண்ட பூதம் வந்தது போல், விசாரணையில் முறைகேடுகள் அம்பலமாகின. பி.ஆர்.பி., கிரானைட் உள்ளிட்ட பல நிறுவனங்களக்கு, "சீல்' வைக்கப்பட்டது. பல கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதுக்கப்பட்ட கற்களை மதிப்பிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.இதில், மதுரை மேலூர், கீழையூர், கீழவளவு, ஒத்தக்கடை பகுதியில் கிரானைட் வெட்டி எடுத்த, "பி.ஆர்.பி., கிரானைட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்,' நிறுவனத்திற்கு, முக்கிய பங்கு இருப்பதாக,' அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, மனைவி விஜயலட்சுமி, மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், உள்ளிட்டோர் மீது, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய, பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவுப்படி, ஏழு தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, மதுரை எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று முன்தினம், பழனிச்சாமி சரணடைந்தார். அப்பன் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில், டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தியது; நேற்றும், விசாரணை தொடர்ந்தது. காலை 9 மணிக்கு, மதுரை-மேலூர் ரோடு, தெற்குத்தெருவில் உள்ள, பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, பழனிச்சாமியை அழைத்துச் சென்றனர்; அங்குள்ள ஆவணங்களை, அவர் முன்னிலையில் சரிபார்த்தனர்.
காலை 11.20 மணிக்கு, அப்பன் திருப்பதி போலீஸ் ஸ்டேஷன் திரும்பிய போலீசார், மீண்டும் பழனிச்சாமியிடம் விசாரணையை தொடர்ந்தனர். போலீசாரின் கேள்விகளுக்கு, பழனிச்சாமியின் பதில் முரணாக இருந்தால், விசாரணை நீடித்தது. திடீரென, "தனக்கு உடல்நிலை சரியில்லை,' என, பழனிச்சாமி தெரிவித்தார். பகல் 12.15 மணிக்கு, அவரது டாக்டர் பாரி பாலஜியை வரவழைத்த போலீசார், சிகிச்சைக்கு அனுமதித்தனர்; பின், விசாரணை தொடர்ந்தது. போலீசாரிடம், "தனக்கு ஓய்வு தருமாறு,' பழனிச்சாமி கேட்டார். போலீசார் அனுமதித்ததை தொடர்ந்து, சிறிது நேரம் உறங்கினார். அதன் பின், ஆவணங்களை தயார் செய்த போலீசார், இரவு 7.30 மணிக்கு, மதுரை ஜே.எம்.5 மாஜிஸ்திரேட் கண்ணன் (பொறுப்பு) வீட்டில், பழனிச்சாமியை ஆஜர்படுத்தினர்.""ஆக.,18 மதியம் 1 மணிக்கு கைது செய்தவரை, 24 மணி நேரம் கடந்து ஆஜர் செய்தது ஏன்?'' என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, இரவு 8.45 மணி வரை விசாரணை நடந்தது. அதன் பின், விசாரணையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட், மீண்டும் விசாரித்தார்.
அனைத்திற்கும் மறுப்பு:
பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு, போலீஸாருக்கும் கூட இருந்தது. அரசியல் புள்ளிகளின் பெயர்களை அவர், சர்ச்சையில் இழுத்து விடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணையில், அனைத்து புகார்களையும் அவர் மறுத்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
பி.ஆர்.பி.,க்கு சிறை:
""ஆக.,18 மதியம் 1 மணிக்கு கைது செய்தவரை, 24 மணி நேரம் கடந்து ஆஜர் செய்தது ஏன்?'' என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, இரவு 8.45 மணி வரை விசாரணை நடந்தது. அதன் பின், விசாரணையை ஒத்தி வைத்தார். இரவு 10.15க்கு தொடர்ந்த விசாரணையில், ஆக., 31 வரை ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மாஜிஸ்தி@ரட் அனுமதித்தார். சிறை கண்காணிப்பாளர் அனுமதிக்கும்பட்சத்தில். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அனுமதி அளிக்கப்பட்டது.
மலைக்க வைத்த "மலை'ச்சாமி:
நேற்று, கோர்ட் விடுமுறை நாள் என்பதால், "மாஜிஸ்திரேட் வீட்டில் தான், பி.ஆர்.பழனிச்சாமியை ஆஜர்படுத்துவார்கள்,' என்ற பேச்சு இருந்தது. நீதிபதிகள் குடியிருப்பு உள்ள, மதுரை பாரதிவீதி உலா ரோட்டில், காலை 8 மணி முதலே, பி.ஆர்.பி., ஆதரவாளர்கள் கூடினர். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை, விதவிதமான கார்கள், அப்பகுதியை வட்டமிட்டன. வந்தவை அனைத்தும், "பேன்சி' எண் கொண்ட, உயர் ரக கார்கள். அனைத்திலும், "ஸ்ரீ மலைச்சாமி துணை' என, எழுதியிருந்தது. வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் வீடு, அப்பகுதியில் இல்லை என்பது, பகல் 12 மணிக்கு பிறகு தெரிந்ததால், கார்கள், மதுரை கோர்ட்டிற்கு திரும்பின. வள்ளுவர் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டிற்கு , பி.ஆர்.பி.,யை கொண்டு வருவது, மாலை 6 மணிக்கு மேல் தெரியவந்தது; கோர்ட்டில் இருந்த கார்கள் அனைத்தும், வள்ளுவர் நகருக்கு பறந்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குவாரி முறைகேடு நடைபெற்றதாக சொல்லும் அரசு இவ்வளவு வருடமாக கனிமவளத்துறை என்ன செய்தது??. இவர் தவறு செய்தார் என்று கைது செய்துள்ள போலீஸ் இவர் தவறுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?? . வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கிய அரசு பொதுபணிதுறை,கனிமவளத்துறை,வருவாய்துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்??.அரசியல் தலையீடு என்று அரசு அதிகாரிகள் சொல்லுவதை ஏற்க முடியாது. காணாமல் போன கண்மாய் ,குவாரி பக்கம் எட்டி பார்க்காத அரசு அதிகாரிகளை என்ன சொல்லுவது??
ஸ்ரீ மலைச்சாமி துணையால் தான் சாதாரண கூலி தொழிலாளி இந்த அளவிற்கு வளர முடிந்தது. அவர் கிரானைட் தோண்டிய மலைகளில் புல் கூட முளைத்தது இல்லை. எல்லாம் வெறும் பாறைகள் தான். இந்த மலை உடைப்பு பண்டைய காலத்தில் இருந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது, இது தொடரவும் செய்யும். யாராலும் நிறுத்த முடியாது. அரசுக்கு இதில் நல்ல வருமானம் உண்டு. அடுத்தவனை பார்த்து வயிறு எறியக்கூடாது....
இவருக்கு ஒடம்பு சரியில்லைன்னு "டாக்டர்" புரட்சித் தலைவி சொல்லியிருக்கும்... அதான் 24 மணி நேரம் கால தாமதம்... எல்லாம் திட்டம் போட்டு செயல்படுத்த வேண்டாமா ??? போலீஸ் சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கி.. ஒரு டுபாக்கூர் டாக்டர், ஆமாம் இவருக்கு .....ஞ்சு வலி தான்னு சர்டிபிகேட் தருவான்.. ஆமாம் அதனால் இவரை ஜாமீனில் விட்டு விசாரிக்கலாமுன்னு தீர்ப்பு சொல்லுவான்.. எடுத்ததுக்கு எல்லாம் எதிர் வழக்கு போடும் மம்மி அரசு, இதை மட்டும் அரசு தரப்பில் இருந்து ஒத்துக் கொண்டு விடுவார்கள்... பழனிச்சாமி கொஞ்ச நாள் கமுக்கமாக இருந்து விட்டு, மீண்டும் மலை ஏறி விடுவார்.. இல்லை இல்லை இன்னும் பல மலைகளை முழுங்கி விடுவார்... அல்லக்கைகள் விரலை சூப்பிக்கிட்டு கை தட்டுவார்கள்.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.