தி.மு.க.,வில், மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்துவதற்கு முன்பே, திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை, மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.,யும் தேர்வு செய்து விட்டனர். இது தொடர்பாக, கட்சித் தொண்டர்கள், தலைமைக் கழகத்தில் புகார் கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க, கடந்த, 15ம் தேதி கடைசி நாள். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 40 பேர் பதவி வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.இதில், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலர்களின் வாரிசுகளும் விண்ணப்பித்துள்ளனர். கழக பொருளாளர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பித்தவர்களை நேரில் அழைத்து, நேர்காணல் நடத்தி, இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமிக்க உள்ளார்.
ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் நேர்காணல் நடத்துவதற்கு முன்பே, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி ஆகியோர் தேர்வு செய்து வருகின்றனர். "இவர்களுக்குத் தான் பதவி கொடுக்கப் போகிறோம்' என, கூறி வருகின்றனர்.இதில், 40 வயதுள்ள தொழிலதிபர்களும் அடங்கியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை சேர்ந்த லாரி அதிபரின் மகன் ஒருவர் உடந்தையாக உள்ளார். இவருக்கு சொந்தமாக, 20 லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் மண், மணல் கடத்தி வருவதாக சில கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.
லாரி அதிபரின் மகன், மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் எம்.பி., கார்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு ஒரு பெட்ரோல் பங்கில் சொல்லி வைத்து, இலவசமாக வழங்கி வருகிறார்.
இப்படி, மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் எம்.பி., சொல்லும் நபர்களை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளராக நியமனம் செய்தால், கட்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபடும் தொண்டர்கள், பதவி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்த நியமனத்தில் கழக பொருளாளர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, கட்சிக்கு உண்மையாக பாடுபட்ட தொண்டர்களுக்கு வழங்க வேண்டும் என, தலைமை கழகத்தில் புகார் கொடுக்கவும், திருவள்ளூர் மாவட்ட, தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.
தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க.,வினர் பல கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். இளைஞர் அணி அமைப்பாளர் நியமனமும் முறையாக நடக்காவிட்டால், மாவட்டத்தில், தி.மு.க., பெரும் சரிவை நோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திமுக வை பொருத்தமட்டில் கட்சி என்பது குடும்ப சொத்து. அதை யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதை குடும்ப தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். மிச்சம் மீதி இருக்கும் பதவிகளை மற்றவர்களுக்கு கொடுப்பார்கள். கட்சி மீது அதீதமான விசுவாசம் கொண்டுள்ள அன்பழகன் போன்ற வர்களுக்கு முன்னுரிமை - மீதி உள்ளவர்களுக்கு நேர்காணல் போன்ற சம்பிரதாயங்கள். சுதந்திரம் வாங்கி இவ்வளவு நாட்கள் ஆகியும் கூட மக்களுக்கு அறிவு வரவில்லை (ஜனநாயக முதிர்ச்சி) என்பதை நினைத்தால் - இதுவரை ஆண்டவர்கள் நாட்டை சரியான பாதையில் எடுத்துசெல்லவில்லை என்பது தெளிவாக புரியும். பேராசை, சுயநலம், குடும்ப ஆதிக்கம், மன்னராட்சி போன்ற இன்னும் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்கிற நிலை என்று வருகிறதோ அன்றுதான் இந்தியாவுக்கு விடிவு காலம்.
தி மு க ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொள்ளை,,,அபகரித்தல்,,, தற்போது கல்லில் கொள்ளை.. அதற்கு தி மு க கட்சியை சேர்ந்த, தனது மகளின் திருமணத்திற்கு ஸ்டாலினை வரவழைத்த வக்கீல் வாதாடுகிறார்,, கேட்டால் தி மு க விற்கும் இதற்கும சம்பந்தம் இல்லை என மக்களுக்கு காது குத்துகிறார்கள்,அந்திம காலத்தில் கிடைததெல்லாம் சுருட்டலாம் என திட்டம் போட்டு சுருட்டி இருக்கிறார்கள், அதை காப்பாற்ற வேண்டியவர்களுக்கு மட்டும் பதவி , தொண்டனுக்கு நாமம்,,
நச் கமெண்ட் . தலைவர விட்டு தள்ளுங்க , தொண்டர்கள் கொள்கைக்கு அடிமையானவர்கள் . அவர்களே பதவிக்கு ஆசைபடுவது , கட்சியின் அஸ்தமனத்திற்கு பயணம் . இது தொண்டனுக்கு தெரிய வாய்ப்பில்லை பாவம் . தலைவர்களுக்கும் தெரியவில்லையே . ஐயோ பாவம் . இது இந்த கட்சிக்கு மட்டுமில்லை , இருக்கிற எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் . இதை உறுவாக்கிய புகழ் மட்டுமே இந்த கட்சியை சாரும்...
நண்பரே . உங்கள் கருத்து மிகவும் சரி . ஆனால் பாவம் தொண்டனுக்கும் பங்கு வேண்டுமென்று நிற்பானென்று யாரும் நினைக்கவில்லை போலிருக்கிறது . ஏன் மீண்டுமொரு சுதந்திர போராட்டம் உருவாகக்கூடாது . இம்முறை சற்று தாமதமாக உருவாகும் . ஏன் தெரியுமா சுதந்திரத்தை சுரண்ட உன் நண்பனும் ஏன் நண்பனும் , ஏன் எல்லோருமே காத்திருக்கிறோம்...
நண்பா கட்சி என்பதே அடிமைகளுக்காக . கல்லாமை, இல்லாமை ஒழிக்கவே நவீன இந்தியாவில் கட்சி உருவாக்கப்பட்டது . பிற்காலத்தில் , காலத்தின்கட்டாயத்திற்காக தீவிர வாத இயக்கங்கள் போல மாறிப்போனது . உடனே உயிர் போகும் விஷம் தீவிர வாதம். சிறுக உயிர் போவது கட்சி . வலிய பொறுக்கமுடியாம வாத்து கிட்ட இருந்து விலகிடலாம் . மெல்ல கொள்ளும் விஷம் கட்சி என்பது தொண்டனுக்கு விளங்கிடும் காலம் தொலைவில்லை...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.