நெடுந்தூரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், உணவுக்காக நிறுத்தப்படும், சாலையோர, “மோட்டல்களில், டிரைவர், நடத்துனர்களுக்கு, குவாட்டர் வழங்குவதாக, பகீர் தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள், தொலைதூர பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, நகர, கிராமப் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை - சென்னை, சேலம் - பெங்களூரு, மதுரை - கோவை, கோவை - திருப்பதி என, பல வழித்தடங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையிலும், பயணிகளின் உணவு மற்றும் கழிவறை வசதிக்காக, மோட்டல்கள் செயல்படுகின்றன. இங்கு, பஸ் டிரைவர், நடத்துனருக்கு இலவசமாக உணவு வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான சிகரெட், ஹான்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன.
அரசு போக்குவரத்து கழகம், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, பஸ் டிரைவர், நடத்துனர்களிடம், குறிப்பட்ட மோட்டல்களில் மட்டுமே, நிறுத்த வேண்டும், மற்ற இடங்களில், நிறுத்தக்கூடாது என்ற கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அரசு பஸ் டிரைவர்களில் பலர், அதை கடைபடிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு, அந்த கட்டுப்பாடு இல்லை.
“டிரைவர்கள் தங்களுக்கு விருப்பமான, பாதுகாப்பு இல்லாத இடங்களில், பஸ்சை நிறுத்துகின்றனர். அவர்கள் பஸ் நிறுத்தும் இடத்தில், தரமற்ற உணவு கிடைக்கிறது. பெண்கள் கழிவறைக்கு செல்வதற்கான வசதியில்லை என, பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, சில, மோட்டல் உரிமையாளர்கள், பஸ் தங்களுடைய இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காக, மது சப்ளை செய்வதாக கூறப்படுகிறது. மதுவைப் பெறும் டிரைவர்களில் சிலர், அங்கேயே பாதியை அருந்திவிட்டு, பஸ்சை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
தனியார் பஸ்களை இயக்கும் நிறுவனங்கள், எந்த, மோட்டலில் பஸ்களை நிறுத்த வேண்டும் என்று எவ்வித கட்டுப்பாடுகளும் விதிப்பது இல்லை. தனியார் பஸ்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அதில் பயணிக்கும் பயணிகளை கவர, டிரைவர்களுக்கு, மோட்டல் உரிமையாளர்கள், சரக்கு வழங்குகின்றனர்.அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை, பயணத்தின் போது, போக்குவரத்துத் துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டால், உண்மை தெரியவரும்.
- நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நேற்று நான் திருச்சியில் இருந்து சென்னைக்கு S R T C இல் பயணம் மேற்கொண்டேன். விக்கிரவாண்டியில் வண்டி நிறுத்தப்பட்டது. மதியஉணவு தோசை மற்றும் முட்டை கொடுக்கப்பட்டது. சட்னி, சாம்பார்,குருமா இல்லை ஏதோ கடமைக்கு ஒரு குழம்பு கொடுத்தார்கள். விலை 70 ருபாய். டிப்ஸ் அவர்களாகவே 10 ருபாய் எடுத்து கொண்டார்கள். மிகவும் தரக்குறைவான உணவு மற்றும் தரமற்ற ஹோட்டல். தயவுசெய்து கவனிக்கவும்.
இந்த அரசு மற்றும் தனியார் வாகன ஓட்டுனர்(ன்)கள் முக்கியமாக அரசு வாகன ஓட்டுனர்(ன்)கள் முக்கால்வாசிப்பேர் நாசாவில் ராக்கெட் ஒட்ட வேண்டியவர்(ன்)கள். அவ்வளவு வேகமாக வண்டி ஓடுகிறார்(ன்)கள். போக்குவரத்து விதிகளை மதிப்பதே இல்லை. அப்படி ஏதாவது கண்டிப்புடன் கேட்டால் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டியது. அதற்கு துணையாக மற்ற பேருந்து ஓட்டுனர்(ன்)களும் ஜால்ராவை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்(ன்)கள். இருசக்கர வாகனங்கள் கார்களில் மட்டும்தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்(ன்)களா என்று சோதனை செய்கிறார்கள். பேருந்து ஓட்டுனர்(ன்)களை முக்கியமாக அரசு பேருந்து ஓட்டுனர்(ன்)களை கண்டுகொள்வதில்லை. அவர்களை கண்டுகொண்டாலும் ஒன்றும் தேறாது என்பதால் போக்குவரத்து காவலர்(ன்)களும் அவர்களை சீண்டுவதில்லை வாகனம் மோதி மரணத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்(ன்)கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் அப்படி செய்தால் திருந்துவார்(ன்)களா என்று கேட்கிறீர்களா? இல்லை இல்லை இவர்(ன்)கள் திருந்தவே மாட்டார்(ன்)கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அவ்வளவே.
TASMAC வருமானத்தை அதிகப்படுத்தினால் தான் விலையில்லா பொருட்கள் கொடுக்க முடியும் என்பது ஏன் மக்களுக்கு புரியவில்லை? ஒரே நாளில் 2500 லிட்டர் மது விற்பனை - மிக எளிதாக. இதில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டாலுமே 1000 லிட்டர் என்பது நல்ல வியாபாரம். இதையும் மறு பயனீடு (குடிக்காத ஓட்டுனர்களிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கி) செய்தால் சாராயம் காச்சுபவர்களுக்கு கொள்ளை லாபம். எல்லா கழகங்களும் சேர்ந்து அடித்தால் காட்டிக்கொடுக்கவா போகிறார்கள்?
இதை விட பெரிய கொடுமை பேருந்து நிலையத்தில் கூட வண்டிகளை ஒழுங்காக நிறுத்த மாட்டார்கள். ஆனா இந்த மோட்டல்களில் வண்டிகளை வரிசையாக நிறுத்தி வைப்பார்கள். தாங்கள் மணிகணக்கில் தின்பார்கள் ஆனா ஒரு பயணி வர கொஞ்சம் நேரம் ஆனால் சண்டைக்கு வந்து விடுவார்கள் ,,,இடையில் இப்படி வண்டிகளை நிறுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா இந்த இடத்தில கொள்ளை நடந்தால் அதுக்கு யார் பொறுப்பு ,,குடித்து விட்டு வண்டி ஒட்டி அதன விபத்து ஏற்பட்டால் யார் poreuppu
இந்த செய்தியை படிக்கும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.மக்கள் மீது அக்கறைகொண்டு ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிடுகிறது.இதைப்படித்துவிட்டு நமக்கென்ன வந்தது என்று ஒவ்வொருவரும் சென்றால் என்ன அர்த்தம்? போக்குவரத்துதுறை அமைச்சர் இதைப்படிக்கவில்லையா? அல்லது முதல்வர்,எதிர்க்கட்சி தலைவர்கள் யாருமே இதைப்படிக்கவில்லையா? ஆளுங்கட்சியிலே இதுபோன்று நடக்கின்ற மக்கள் பிரச்சைகளை எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்திலே பேசவேண்டும் அல்லது பத்திரிக்கையிலாவது ஒரு அறிக்கை வரவேண்டும். விஜயகாந்த் இதை கவனிக்க வேண்டும். இதற்கும் யாராவது ஒரு நேர்மையான சகாயம் போன்ற அதிகாரிகள் அறிக்கை தயார் பண்ணி அரசுக்கு அனுப்பினால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? அப்படி என்றால் போக்குவரத்து துறை அமைச்சரின் பணிதான் என்ன?எதற்கு இத்தனை அமைச்சர்கள் தேவையேயில்லையே இதற்கு தீர்வுதான் என்ன? இச்செய்தியைப்படிக்கும்போது என் மனசு வலிக்கிறது..கடவுளே அப்பாவி தமிழ்நாட்டு மக்களை நீதான் காப்பாற்றவேண்டும். தினமலர் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியவத்துவம் அளித்து தொடர்ந்து தினமும் வெளியிடவேண்டும்...அல்லது இது உங்கள் இடம் என்ற பகுதியைப்போன்று முதல்வரின் பார்வைக்கு என்று ஒரு தனி பகுதியை ஆரம்பித்தால் மக்களுக்கு புண்ணியமாய் போகும்..
இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அரசு எப்படி சரி செய்யும் ? முதல்வர் அனுதாப செய்தி வெளியிட்டு விட்டு தலைக்கு ஒரு லட்சம் நிவாரணம் என்று அறிவித்தால் மட்டும் போதுமா? உடனே இந்த செய்திக்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள். குடித்து விட்டு அரசு பேருந்தை இயககும் ஓட்டுனர்களை கடுமையாக தண்டியுங்கள். இலாகாபூர்வ நடவடிக்கை எடுத்து பதவி உயர்வு, ஆண்டு இன்க்ரிமென்ட், போன்றவற்றை நிறுத்துங்கள். பத்து ஆண்டுகள் கொடுக்க கூடாது ,தனியார் பேருந்து ஓட்டுனர்கள் குடித்து விட்டு பேருந்து ஓட்டுவது கண்டுபிடிக்க பட்டால் ஓட்டுனர் உரிமம் அப்போதே பறித்து கொள்ளுங்கள் ,குறைந்தது ஐந்தாண்டுக்கு மீண்டும் கொடுக்காதிர்கள் ,விபத்து ஏற்படுத்தினால் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ,ஐந்து லட்சம் அபராதமும் விதியுங்கள் ,அந்த குடிகார ஓட்டுனரை கண்காணிக்காத பேருந்து உரிமையாளருக்கு 25 லட்சம் அபராதம் விதியுங்கள் அதற்க்கு பிறகு பாருங்கள் அனைவருக்கும் பயம் வரும் ஒழுங்காக இருப்பார்கள் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.