மின்சாரத்தை திருடும் மாநிலங்களின்தலைமை செயலர்களுக்கு சிறைத் தண்டனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""மின் தொகுப்புகளில் (பவர் கிரீட்) இருந்து, தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக மின்சாரத்தை எடுக்கும் மாநில அரசுகள் மீது, கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில், விதிமுறைகளை மீறி செயல்படும் மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலர்களுக்கு, சிறைத் தண்டனை விதிப்பது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது,'' என, மத்திய மின் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய மின் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தனியார், "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில், கடந்த மாதம், கோளாறு ஏற்பட்டது. இதனால், தலைநகர் டில்லி உட்பட, 21 மாநிலங்கள், இருளில் மூழ்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஒரு சில மாநிலங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான அளவு மின்சாரத்தை திருடியதே, இதற்கு காரணம் என, புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையிலும், "சில மாநிலங்கள், அதிகமான அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டதே, கோளாறுக்கு காரணம்' என்பது உறுதி செய்யப்பட்டது.

மின் தொகுப்புகளில், அளவுக்கு அதிகமான மின்சாரம் பாய்ந்ததும், கோளாறுக்கு முக்கிய காரணமாகி விட்டது. எதிர்காலத்தில், இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, சில கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, மின்சாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை எடுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலர்களுக்கு, பெரிய அளவில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிப்பது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.மின் தொகுப்புகளில் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க, சுதந்திரமாகச் செயல்படக் கூடிய, ஒழுங்குமுறை ஆணையத்தை, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், அமைக்க வேண்டும். எதிர்காலத்தில், மின் தொகுப்புகளில் கோளாறு ஏற்பட்டால், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், ரயில்வே போன்ற இடங்களுக்கு, பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.நாட்டில் தற்போது உள்ள மின் வினியோக முறை, உரிய முறையில் இல்லை; அதை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.


கூடுதல் மின்சாரம் கேட்கிறது கர்நாடகா:

""கர்நாடகாவில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால், மத்திய அரசு, கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டும்,'' என, அம்மாநில மின் துறை அமைச்சர் ஷோபா கூறினார்

அவர் மேலும் கூறியதாவது:அண்டை மாநிலங்களான, தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு, 3,000 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படும் நிலையில், எங்களுக்கு, 1,674 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் விஷயத்தில், மத்திய அரசு, எங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.எங்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வலியுறுத்தி, மத்திய மின் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வடக்கு மின் தொகுப்புடன், எங்களுக்கு நேரடி இணைப்பு இல்லாததால், போதிய அளவு மின்சாரம் கிடைப்பதில்லை. இவ்வாறு ஷோபா கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201214:40:32 IST Report Abuse
periya gundoosi இந்தியாவில இருக்கிற அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அம்ம்ம்புட்ட்ட்டுப் பேரும் திருடன், ஊழல் பேர்வழி (யோக்கியர்களும், நல்லவர்களும் உண்டு அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களையும் தனது பணியைச் செவ்வனே செய்ய விடாமல் தடுப்பதும் அரசியல் வாதிகளே). ஊழல் பற்றியோ, திருட்டைப் பற்றியோ செய்தி வராத நாள் உண்டா? நீங்க சொன்ன மாதிரி எதிர்காலத்தில் மின்தொகுப்பில் கோளாறு ஏற்பட்டால், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், ரயில்வே துறை இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களல்லவா அதை முதலில் செய்யுங்க, மின்சாரத் திருடனை தண்டிப்பதை அப்புறம் வச்சிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
20-ஆக-201213:32:25 IST Report Abuse
Kavee யார் சொல்லுறா இதை ஒரு யோக்கியதை இல்லாமல் போச்சு .... எவனும் எதுவும் பேசலாம் என்றாகி விட்டது நம் நாட்டில். எல்லாம் நம்ம தலை எழுத்துடா சாமி
Rate this:
Share this comment
Cancel
SIVAKUMAR NEYVELI - kuwait,குவைத்
20-ஆக-201213:31:32 IST Report Abuse
SIVAKUMAR NEYVELI அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை எடுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலர்களுக்கு, பெரிய அளவில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிப்பது குறித்தும், ................................................................................................................ ஐயா...தலைமைச்செயலரும் ,மின்துறை அதிகாரிகளும் மின்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில்தானே செய்கிறார்கள்.மின்துறை அமைச்சர் முதல்வரின் உத்தரவின் பேரில் செயல்படுகிறார்.எனவே அம்பை எய்தவன் இருக்க அம்பை ஏன் குறைசொல்வதேன்தண்டனை அளிக்கவேண்டும் எனறால் ஏவலர்களை விட்டுவிட்டு முதலாளியை அதாவது முதல்வரை தண்டிக்க ஏதுவாக சட்டம் கொண்டுவாருங்கள். அப்படி செய்ய உங்களால் முடியுமா? முடியவே முடியாது. ஏனென்றால் சட்டம், நீதி,தண்டனை இவைகளெல்லாம் சாதாரண குடிமக்களுக்கு மட்டுமே ஒழிய உங்களைப்போன்ற கடவுளின் மறு அவதாரங்களான அரசியல்வாதிகளுக்கு இல்லையே இல்லையென்றால் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தராமல் ஏமாற்றுகி்ற கர்நாடக அரசை கோரட் அவமதிப்பு என்று எங்கே தண்டியுங்க பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
20-ஆக-201212:31:10 IST Report Abuse
Ravichandran எங்க தலிவர், டண்டனக்கா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருங்க.
Rate this:
Share this comment
Cancel
kalan - chennai,இந்தியா
20-ஆக-201212:07:20 IST Report Abuse
kalan என்ன தலைமை செயலர்களுக்கு சிறை தண்டனையா? அப்போ 2G, நிலக்கரி கொள்ளை அடித்தவர்களை ஏன் கைது செய்து சிறை தண்டனை கொடுக்கவில்லை? உனக்கு தைரியம் இருந்தால் செய் பார்க்கலாம். 40 வருடங்களாக நாட்டை ஆள்வதாக சொல்லி சுரன்டிய காங்கிரஸ்காரனுக்கு என்ன தண்டனை? 2014 ல் காங்கிரஸ் படுதோல்வி நிச்சயம். இளைஞர்களே இந்த சண்டாளர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள் வாழ்க பாரதம்
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
20-ஆக-201209:51:09 IST Report Abuse
Nandu யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா? அவரவர் மனச்சாடியின் படி நடந்துகொள்ள வேண்டும் என்கிறாரா - அதுவும் சோனியாவின் கட்டளைகளின் படி செயல்படும் காங்கிரஸ் அமைச்சர்? அப்படியென்றால் மின்சார பகிர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை? அவரவர் இழ்டத்துக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்கிறார்... தமிழகம் தனக்கு வேண்டிய மின்சாரத்தைக் கேட்டு கடிதம் மேல் கடிதம் எழுதிவிட்டது, ஆனால் அதைக்கேட்க மத்திய அரசில் யாருக்கும் செவியில்லை, பார்க்க கண்களில்லை... உலகிலேயே மிகப்பெரிய மின்வெட்டை ஏற்படுத்தியவருக்கு உள்துறை அமைச்சர் பதவி உயர்வு வழங்கப்பட்டதை உலகத்திலுள்ள பத்திரிக்கைகள் கிண்டல் செய்தது பிரதமருக்கும் சோனியாவிற்கும் தெரியாமலா இருக்கும்? என்ன அரசாங்கமோ என்ன நிர்வாகமோ
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
20-ஆக-201209:43:14 IST Report Abuse
villupuram jeevithan மாநில மின்சார அமைச்சருக்கு தண்டனை கிடையாது மாநில முதலமைச்சருக்கும் தண்டனை கிடையாது. மறுபடியும் தேர்தலில் நிற்கவேண்டுமே?
Rate this:
Share this comment
Cancel
எமதர்மா - - CHENNAI,இந்தியா
20-ஆக-201209:22:14 IST Report Abuse
எமதர்மா - எப்போதும் போலதான். திருடுவது மந்திரி. தண்டனை அதிகாரிக்கு. அதிகாரி, மந்திரிடம் திருடாதே என்று சொல்ல முடியுமா? சொன்னால் அடுத்தநாளே டிரான்ஸ்பர். . வீரத்துக்கு விவேகமும் வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Baski - Gurgoan,இந்தியா
20-ஆக-201207:50:48 IST Report Abuse
Baski அது எப்படிங்க சார், முதல்வர் அல்லது மந்திரிக்கு தெரியாமல் இது நடக்காது அல்லது அவர்களுடைய உத்தரவு படி தான் அதிகமான மின்சாரம் எடுக்கப்படுகிறது ஆனால் தண்டனை அதிகாரிகளுக்கா. நல்லா இருக்கு சார் உங்க நியாயம். தண்டனையை தரவேண்டிய ஆளுக்கு தர மாட்டிங்களா. 2G ல தயாளு அம்மாளை விட்டுடிங்க, ரத்தன் டாட்டா வை, அம்பானியை எல்லாம் விட்டுவிட்டு அல்லக்கைகளை கைது பண்றிங்க. என்னவோ போங்க..... 2014 பதில் சொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
20-ஆக-201207:43:13 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் அய்யா மொதல்ல நீங்க திருடுவதை நிறுத்தங்க... பெரிய பெரிய ஊழல் எல்லாம்வற்றிற்கும் சங்கு ஊத தயாராகி விட்டிர்கள் ..இத போய் சீரியஸ்யாக எடுத்துக்க போறீங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்