மதுரை: போலீஸ் உடற்தகுதித் தேர்வில், வேலைக்கு சேர்ப்பதாகக் கூறி, பணம் பெற்று, சிலர் மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. "இதுகுறித்து தகவல் தெரிவித்தால், மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வு அதிகாரியான, மதுரை மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கிரேடு 1 கான்ஸ்டபிளாக போலீஸ் பணியில் சேர, ஜூன் 24ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் உடற்தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இதில், போட்டியாளர்களை அணுகும் சில போலீசார், போலீஸ் வேலையில் சேர்ப்பதாகக் கூறி, 20 ஆயிரம் ரூபாய் வரை "கறக்கின்றனர்'. இது, சக போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பின், பணம் செலுத்திய போட்டியாளருடன், சக போலீஸ்காரர் ஒருவரை அனுப்பி வைக்கின்றனர். ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதலில், செ.மீ., வித்தியாசம் ஏற்படும்போது, அவர் "சிக்னல்' கொடுக்க, வித்தியாசம் "சரிகட்டப்படுகிறது'.இதில், குறிப்பிட்ட சிலருக்கு பங்கு இருப்பதாகவும், "சரிசெய்ய' முடியாத வித்தியாசம் எனில், குறிப்பிட்ட தொகையை மட்டும் இழுபறிக்குப் பின், போட்டியாளரிடம் திருப்பி கொடுப்பதாகவும், நேற்று புகார் எழுந்தது.
தேர்வு அதிகாரியான எஸ்.பி., பாலகிருஷ்ணன், நமது நிருபரிடம் கூறியதாவது:இத்தேர்வு நூறு சதவீதம் நேர்மையாக நடத்தப்படுகிறது. இதில், பணம் பெற்றுக்கொண்டு, தேர்வுப் பட்டியலில் சேர்க்க வாய்ப்பே இல்லை. அப்படி பணம் கொடுத்திருந்தால், நிச்சயமாக அது மோசடியாகத் தான் இருக்கும். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் நேரிலோ, போனிலோ புகார் கூறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மக்கா, இதை விட பெரிய ஊழல் ஒன்னு நடக்குது தமிழகத்துல. SPCA இன்ச்பெக்டோர்னு ஒரு போஸ்டிங்குக்கு 5-6 லட்சம் வரை விலை வைத்து கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்களுக்கு வேலை வழங்க படுகிறது. SPCA inspector போஸ்டிங்குக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் க்கு உண்டான அதே சம்பளம் மற்றும் வசதிகள் அனால் வேலை தான் இல்லை என்று கூறபடுகிறது. இதை பற்றி தெரிந்தவர்கள் இங்கே மேலும் கூறவும். இந்த வலையில் சிக்கி பணத்தை இலகதீர்கள்.
இது போன்ற செய்திகள் வாடிக்கையாகி விட்டன. நாட்டில் தொடரும் அவலங்கள் பற்றி பரவலாக பேசப்படுகிறது. பத்திரிக்கையில் அவ்வப்போது செய்தி வெளியிடப்படுகின்றது. ஆனால், அவலங்கள் தொடர்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பணியில் இருந்தவர்கள் மீது சமூகத்தில் மரியாதை இருந்தது. ஆனால் அனைத்து அலுவலர்களையும் சமூகம் சந்தேகக் கண்ணோடுதான் பார்கின்றது. ஏன் இந்த நிலை. எங்கும் அரசியல் தலையீடு. அராஜக அரசியல்வாதிகளுக்கு தனி மரியாதை என்ற நிலை என்றுதான் மாறும். பத்திரிகைகள் மக்களிடையே நேர்மையான அதிகாரிகள் செயல்பாடுகளை வெளியிடுவதுடன் அவர்கள் அராஜக அரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் நிகழ்வில் உறுதுணையாக நின்று செய்தி வெளியிட்டு வந்தால் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நம்பிக்கை பிறக்கும். நாடு நலம் பெறும்.
வடிவேலு, மனோ பாலாவைப் பார்த்து - என்னை அடிச்சுப்புட்டேன்னு ரொம்ப பீத்திக்காதே, உன் உடம்பு ரொம்ப வீக்காயிருக்கு, நல்ல டாக்டரைப் போய் பார் என்பார். சில போலிஸாரைப் பார்த்தால் இவர்கள் இந்த மாதிரி கோல்மால் செய்து தான் வேலைக்கு வந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றும். பணம் கொடுத்து வேலை பெறுவதால் தான் காலம் முழுதும் மக்களிடம் கையேந்துகிறார்கள் போலிருக்கிறது. என்றும் ஊழல் எதிலும் ஊழல்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.