புதுடில்லி:""இணையதளங்கள் மூலமாக வதந்தியை பரப்புவோரை அடையாளம் காண்பது, மிகவும் சிரமமாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, சமூக வலைத்தளங்களுடன் சேர்ந்து, அமைப்பு ரீதியான நடைமுறையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,''என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:இணையதளங்கள் மூலமாக, தவறான தகவல்களை வெளியிடுவதோடு, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான வதந்தியையும் பரவவிடும் நடைமுறை அதிகரித்து விட்டது. தவறான தகவல்களை இணையங்கள் மூலமாக, பரப்புவோரை அடையாளம் காண்பது, மிகவும் சிரமமாக உள்ளது. இதற்காக, சமூக வலைத்தளங்களுடன், இணைந்து செயல்பட வேண்டிய, அவசியம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, சமூக வலைத்தளங்களுடன் சேர்ந்து, ஒரு அமைப்பு ரீதியான நடைமுறையை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சில வலைத்தளங்கள், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க, சம்மதம் தெரிவித்துள்ளன.
இணையங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு, சட்ட ரீதியான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதற்குள்ள, சட்ட ரீதியான வாய்ப்புகள் குறித்து, அரசு ஆய்வு செய்து வருகிறது. எதிர்காலங்களில், இணையதளங்களை தவறாக பயன்படுத்துவோர், தண்டிக்கப்படுவர்.சில சமூக வலைத்தளங்கள், முக்கியமான தகவல்களை, அரசுக்கு அளிக்க மறுக்கின்றன. தங்களின் "சர்வர்'கள், வெளிநாடுகளில் உள்ளதால், இந்திய சட்ட விதிமுறைகளுக்கு, தாங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர். இதனால் பிரச்னை ஏற்படுகிறது.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
இதற்கிடையே, ஆட்சேபகரமான தகவல்களைக் கொண்ட இணைய பக்கங்களை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக, "ட்விட்டர்' சமூக வலைத்தளம், பிரதமர் அலுவலகத்திடம் உறுதி அளித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்படி சும்மா மிரட்டினால் தவறு செய்கிறவர்கள் பயந்து திருந்தி விடுவார்களா என்ன. வீணான வதந்தி பரப்புவதை உங்களுக்கு பயந்து விட்டு விடுவார்களா என்ன? நம் DAY TO DAY வாழ்க்கையில் நாம் பொது மக்களிடம் பார்க்கும் INDISCIPLINE மற்றும் ஒழுக்கமின்மையை யாருமே பெரிதாக தவறாக எடுத்து கொள்வதில்லை. அது அப்படி தான் இருக்கும் என்ற நினைப்பு மற்றும் நமக்கு என்ன வந்தது என்ற நினைப்பு தான் மேலும் மேலும் ஒழுக்கமின்மையை அதிகரிக்கிறது. அது தற்போது வளர்ந்து சட்டத்தை யாருமே மதிப்பதில்லை. அப்படி மதித்து நடப்பவர்கள் கேலி செய்ய படுகிறார்கள் அல்லது மிரட்ட படுகிறார்கள். இந்த மனபோக்கு TRAFFIC RULES AND REGULATIONS FOLLOW செய்யாமல் இருப்பதில் இருந்து எல்லா வற்றிலும் உண்டு.
நம் கலைஞர் FACE BOOK TWITTER என்று களத்தில் இறங்கி கலக்கலாம் என்று நினைக்கும்போது இது என்ன புது வித மிரட்டல்? மறைமுகமாக கலைஞருக்கு விடப்பட்ட மிரட்டலோ இந்த புதிய சட்டம் என்று தான் நினைக்க தோன்றுகிறது. அவர் தான் தற்போது புதிதாக பிறந்த மாதிரி வலைத்தளத்தில் புதிதாக நுழைந்து கழக கண்மணிகளின் துணை கொண்டு கலக்க வேண்டும் என்று முடிவு செய்து இணையதள உலகில் குதித்துள்ளார். அவர் தான் தற்போது அவர் செய்த மற்றும் செய்ய போகும் போராட்டங்களை பற்றியும் அது ஏற்படுத்தியதாக சொல்லப்படும் தாக்கத்தை பற்றியும் வதந்தி போல பரப்புரை செய்கிறார். ஒரு வேலை இதை எல்லாம் கபில் சிபல் படித்து மண்டை காய்ந்து முடியை பீய்த்து கொண்டிருந்திருப்பார். அப்பொழுது உதித்த ஐடியா தான் இதுவாக இருக்கும்.
நீங்கள் [ அரசியல்வாதிகள் ] மக்களுடன் இணைய மறுப்பதால் தான் மக்கள் இணைய தளங்கள் மூலம் இணைகிறார்கள்.... உண்மையா இல்லையா ? ..இப்போ வடகிழக்கு பூதம் கூட உங்கள் அரசால் கிழப்பி விடப்பட்ட இணைய தள கோளாறாக கூட இருக்கலாம் அல்லவா...? தேர்தல் நேரத்தில் மக்கள் இணைய தளம் மூலம் ஒன்றாக இணைந்து விடக்கூடும் என்ற ரகசிய தகவல் உங்கள் அரசுக்கு கிடைத்து இருந்திருக்கலாம்... அதன் முன்னெச்செரிக்கை நடவடிக்கை தானே தற்போதைய இணையதள முடக்கங்கள்....உண்மையா இல்லையா?
இன்டர்நெட் இணைப்பு மற்றும் மொபைல் SMS சேவைகளுக்கு நாங்கள் மாதா மாதம் பணம் செலுத்திக்கிட்டு இருக்கிறோம் . இதுல SMS சேவையில் மண்ண அள்ளி போட்டாங்க . எவன் வதந்தி SMS குடுத்தானோ அவன புடிக்க முடியல . இதுல ஒரு நாளைக்கு 5க்கு மேல அனுப்ப முடியாம போறது என்ன மாதிரி அடிகடி SMS USE பண்றவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். மெசேஜ் கார்டு போட்டவங்களுக்கு எல்லாம் 15 DAYS நஷ்டம் தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.