அதன் விவரம்:
வழக்கறிஞருக்குப் படிப்பதாகக் கூறிய செகாநாத், மேற்படிப்புக்கு பணம் தேவை என கூறினார். எங்களைக் காதலிப்பதாகக் கூறியதால், வருங்கால மனைவி என நினைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்தோம். எங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மொபைல் எண்ணை மாற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார். அவர், எங்களைப் போன்று பல வாலிபர்களை ஏமாற்றி, திருமணம் செய்து நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட 6 மொழிகளில் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க"நான் அவள் இல்லை':
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மணிகண்டன் கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த செகாநாத், 25 என்னிடம் மொபைல் போனில் அடிக்கடி பேசி காதலிப்பதாகக் கூறினார். வீட்டிற்கு தெரியாமல் நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம்.எனது பெற்றோருக்குத் தெரிய வந்ததும், கடந்த 2011 ல், எங்களுக்கு குன்றத்தூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னுடன் 2 மாதம் தான் வாழ்ந்தார்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதால், வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை என தெரிவித்தார். சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு பின்புறமுள்ள மகளிர் விடுதியில் செகாநாத்தை சேர்த்து விட்டேன்.வாரம் ஒரு முறை சென்று அவரைப் பார்த்து வந்தேன். செகாநாத் வேறு சில ஆண்களுடன் பழகும் தகவல் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் அவள் இல்லை' என மறுத்தார்.ஒரு கட்டத்தில் என்னை விட்டு முழுமையாக விலகி விட்டார். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என போலீசில் புகார் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தேன். பத்திரிகையில் செகாநாத் விவகாரம் வெளி வந்ததால், என்னைப் போன்று வேறு யாரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புகார்கொடுத்துள்ளேன். செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார். 4 சவரன், 1.85 லட்சம் ரூபாய் அவருக்காக செலவு செய்துள்ளேன். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.ஏமாந்த கால்பந்து வீரர்:
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2006ம் ஆண்டு செகாநாத்தை சந்தித்தேன். பணம் பெறும் பிரிவில் இருந்தார். என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு அடிக்கடி பேசினார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார். கால்பந்து வீரரான நான், விளையாட்டில் கவனம் செலுத்தியதால், அவரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.இந்தாண்டு ஜனவரி மாதம் டூவீலரில் சென்ற செகாநாத்தை எதேச்சையாக சந்தித்தேன். என்னிடம் அவர், "உனக்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்யா விட்டால் உயிரை விட்டு விடுவேன்' எனக்கூறி, அவரது கையில் கத்தியால் கீறிக் கொண்டார்.அதன் பிறகு தான் அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். புளியந்தோப்பில் உள்ள எனது வீட்டில் என்னுடன் 5 மாதம் வாழ்ந்தார்.கணவன், மனைவியாக அன்யோன்யமாக வாழ்ந்தோம். அசைவபார் கவுன்சிலில் செகாநாத் மீது புகார்:
திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம், வழக்கறிஞருக்கு படிப்பதாகக் கூறி பணத்தை செகாநாத் கறந்துள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்த சரவணன், அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை ஐகோர்ட் பார் கவுன்சிலில், "வழக்கறிஞர் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் செகாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.கமிஷனர் திரிபாதி அதிரடி காட்டுவாரா
?சென்னை நகரில் பல போலீஸ் நிலையங்களில் மோசடி பெண் செகாநாத் மீது புகார்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. செகாநாத் மீது புகார் கொடுக்கச் சென்ற வாலிபர்களிடம் போலீசார், "அப்பெண்ணை நாங்கள் எங்கே போய் தேடுவோம். நீங்கள் பிடித்துக் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறி தட்டிக் கழித்துள்ளனர். செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர். பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள புகார் மனுக்களை எல்லாம், ஒன்றாகச் சேர்த்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
hai guys ..... no worry... tamilnadu police also ...had a great expreance.... then public...never mind ...but this guys dont have any expreance in sex...ok ....they know now.... fine..plss can u go to GH .....check it your blood..... then you have right to marry other girl....if she got boy & girl plss ....as soon as possible... separated the child from her... good for them life....plssss girls think and do....still we respect womens,,..this is one of the caution for....girls and boys....some of the parents...also worry,,,about the news.....very sad and shame too aswell.....
hello maappillinagala yellarayum kalyanam pannithan pirinthiruku, so yellar kiteyum divorce case potu antha pen claim panna chance namma naatu sattathuley irukku. Athaan namma naatu sattam and olungu. ithey oru aan paninalum paathipu aanukku than pen panninalum ilappu aanukkuthaan. Yenna kodumai sir ithu ?????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.