சென்னை : மின் தட்டுப்பாடு குறித்து, முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச்செயலகத்தில் மின்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவைக்கு 11,500 மெகாவாட்ஸ் மி்ன்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நாளொன்றிற்கு 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் வரை மின் பற்றாக்குறை தற்போதைய அளவில் உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மின்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பணிகள் ஆய்வு
550 மெகாவாட்ஸ் திறன் கொண்ட வல்லூர் மின் உற்பத்தி நிலையம், 600 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் மின் நிலையம் மற்றும் 600 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி திறன் கொண்ட வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதல்வர் உத்தரவு
வல்லூர், மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலைய பணிகளை துரிதமாக மேற்கொண்டு, மின் உற்பத்தியை விரைந்து துவக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா, மின்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.