Political parties stand on Quary scheme | மலை முழுங்கிய மகாதேவன்களும்... வாய்மூடி மவுனிகளும்..| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலை முழுங்கிய மகாதேவன்களும்... வாய்மூடி மவுனிகளும்..

Added : ஆக 25, 2012 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 மலை முழுங்கிய மகாதேவன்களும்... வாய்மூடி மவுனிகளும்..

மதுரை மாவட்டத்தில், அரசுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, கிரானைட் கற்களை வெட்டி எடுத்தவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் முன்வரவில்லை. சில கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கிரானைட் நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு, "மலை முழுங்கிய மகாதேவன்'களாக (பினாமிகள்) செயல்பட்டனர். இதனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாய்மூடி மவுனியாகி விட்டனர் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில், சந்தேகத்திற்கு இடம் அளிக்காமல், நேர்மையான விசாரணை நடத்தி முறைகேடு புரிந்தவர்கள், சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா கவனமாக உள்ளார். அதன் அடிப்படையில் தான் மாவட்ட கலெக்டர், போலீசார் விசாரணை, வருவாய் துறை ஆய்வு பணிகள் என பல கோணங்களில் தீவிரம் அடைந்துள்ளன.கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, எழுந்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாதக, பாதகங்களையும் முதல்வர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தி.மு.க.,வை பொருத்தவரை அப்பிரச்னையில் வாய்திறக்காமல் மவுனமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தி.மு.க., அறிவித்த போரட்டங்களுக்கான காரணங்களில் கூட கிரானைட் முறைகேடு இடம் பெறவில்லை.

இது குறித்து கனிமவளத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சியில் கிரானைட் முறைகேடுகள் கொடிக்கட்டி பறந்தது. குவாரி உரிமையாளர்கள், சட்டவரம்பு மீறி, "மலை முழுங்கும் மகாதேவன்களாக' செயல்பட்டனர். தங்களுக்கு கிடைக்கும் 100 சதவீத மொத்த வருவாயில் 40 சதவீதம் தங்களுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் அரசு அதிகாரிகளுக்கும், மீதமுள்ள 40 சதவீதம் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதில் கட்சி பாகுபாடு கிடையாது. சின்டிகேட் முறையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தேசிய கட்சிகளும் இதில் விதி விலக்கு அல்ல. அவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.சிவப்புக் கொடி கட்சியில் ஒரு கட்சி தான் போர்க்கொடி தூக்கியுள்ளதே தவிர, மற்றொரு கட்சி வாய் திறக்க முடியாமல் தவிக்கிறது. ஜாதிக் கட்சியின் தலைவர் ஒருவரும் குரல் கொடுத்தார். திடீரென தற்போது அவரது சுருதியும் குறைந்து விட்டது. முறைகேடுக்கு துணை போன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு எதிர்க்கட்சி குரல் கொடுத்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் பவர்புல்லாக விளங்கிய ஒரு உயர் அதிகாரியின் சம்பந்தி, கிரானைட் குவாரியின் உரிமையாளராக இருந்ததால் இன்னும் அவர்களுக்கு வசதியாக இருந்தது. அதேபோல் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் இருவரும், கிரானைட் தொழிலில் பினாமிகளாக செயல்பட்டுள்ளனர். இதனால் தான் தி.மு.க.,வும் மவுனம் காத்து வருகிறது. மாவட்ட வாரியாக பொதுமக்கள் பிரச்னை மற்றும் உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, தி.மு.க.,வினர், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. ஆனால், போராட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை குறிப்பிடவில்லை. மதுரை மாவட்டத்தில் கிரானைட் பிரச்னையையும் மையப்படுத்தி போõரட்டம் நடத்த வேண்டும் என, தி.மு.க., வலியுறுத்த வில்லை. இதிலிருந்து அக்கட்சிக்கும் கிரானைட் விவகாரத்தில் குரல் கொடுக்க விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gbrittojaccob Jaccob - Madurai,இந்தியா
26-ஆக-201212:30:44 IST Report Abuse
Gbrittojaccob Jaccob ஜெயலலிதா அவர்கள் நல்ல நேர்மையான முறைப்படி பீ ஆர் பீ மீது நடவடிக்கை எடுக்கணும் இலை என்றால் அவருக்கும் கடைசி காலத்துல நல்லதே நடக்காது.அவரு ஆட்சி இருக்கவே இருக்காது.கடவுள் மேல சொல்றனே இவன் இவனுக்கு துணை போன எவனும் உருப்புடவே மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஆக-201211:42:16 IST Report Abuse
periya gundoosi ஊழலுக்கு அஸ்த்திவாரம் போடுவதில் மஞ்சத்துண்டு மற்றவர்களை மண்ணைக்கவ்வ வைப்பார் இதை யாரும் மறுக்க முடியாது. உண்மை எப்போதும் கசக்கும்.ஒன்றுமில்லாத முட்டை, ஈமு கோழிப் பிரச்சினையும், கிரானைட் கல் பிரச்சினையும் ஒன்றா? இதில் பெரும் கொள்ளைக் கூட்டமே அடங்கியிருக்கிறது. நுணிமுதல் அடிவரை தோண்டி துப்பறிவதற்கே பல மாதங்கள் ஆகும். எந்த மாபாதக செயலுக்கு மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர், அப்படி போர்க் கொடி தூக்கினால் அதற்கு தலைமை ஏற்பது யார்? தலைமை ஏற்கும் தைரியம் உள்ளவர்களெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதில் எடுத்தோம், கவிழ்தோம் என்று முடிவு எடுக்க முடியாது. முழுவீச்சில் விசாரணை முடுக்கி விட்டு, எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு இந்த வியாபாரத்தை அரசே ஏற்று நடத்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இது ஒன்றும் அவ்வளவு எளிதில் முற்றுப் பெரும் விஷயமல்ல. விரல் சொடுக்கினால் வீரம் விளையாடும், சாட்டையை சுழற்றினால் விதியே மாறும். அது தி பவர்ஃபுல் அம்மா,மம்மி,புரட்சித்தலைவி, நீர் இல்லாததைச் சொல்லவில்லையே.நடந்ததா இல்லையா?, இனியும் நடக்கும். திமுக மதுரை விருமாண்டி அவர்களே.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201212:34:13 IST Report Abuse
மதுரை விருமாண்டிஎன்ன நடக்கும்...? இப்பவே தற்காலிக வேலை நீக்கம், கொள்ளை அடித்த கற்களின் அளவு கணக்கிடுதல் இவைகளில் தில்லாலங்கடி வேலை நடக்குது (ஆதாரம் தினமலர்)... உண்மைகள் மறைக்கப்படுகின்றது.. இதுக்கப்புறம் என்ன நடக்கும் ?? என்ன மம்மியின் தயவில் கொஞ்ச நாளில் இந்த கேசுக்கு நல்லடக்கம் நடக்கும்... ஆமென்.....
Rate this:
Share this comment
Cancel
மொக்கை - madurai,இந்தியா
26-ஆக-201210:32:19 IST Report Abuse
மொக்கை அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் எல்லாரும் கூட்டமா கூட்டணி அமைச்சு திட்டம் போட்டு ஆட்டைய போட்டிருக்காய்ங்க..இது தேச துரோகம்..இவனுங்களை தேசிய பாதுகாப்பு சட்டத்துல ஜாமீன்ல வெளிய வரமுடியாதபடி உள்ளே வச்சு பிதுக்கணும்..ஏன்டா டேய்..பத்தாயிரம் சம்பளத்துக்கு பொண்டாட்டி புள்ளைகளை பிரிஞ்சு எந்நேரமும் சாவு வரலாம்ன்ர சூழ்நிலைல வெயில் மழை குளிர்னு பார்க்காம, எல்லைல காவல் காக்குற ராணுவ வீரனை கொஞ்சம் நினைச்சு பாருங்கடா..தாய் மண்ணை காப்பாத்துற ராணுவ வீரன் வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டாலும் ஒரு வீடு கட்டுறதுக்கே முக்க வேண்டியிருக்கு..தாய் மண்ணை கொள்ளையடிக்கிற நீங்க என்ன பகட்டா இருக்கீங்கடா..ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்டா..உங்களை இந்த அரசாங்கத்தால தண்டிக்க முடியாம போகலாம்..பூமித்தாய் கண்டிப்பா உங்களை சும்மா விடமாட்டா..
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201212:25:38 IST Report Abuse
மதுரை விருமாண்டிதிருடினவ(ங்க) கிட்டேயே பிடிக்கச் சொன்னா எப்படி? அதான் நடக்கிறது இங்கே.... அதாவது ஒண்ணும் சீரியசாக நடக்கவில்லை... சும்மா உள்ளே போடு, உள்ளே போடுன்னா உங்களைப் பிடிச்சு உள்ளே போட்ருவாங்க......
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஆக-201208:27:10 IST Report Abuse
villupuram jeevithan மத்தியில் வருமானவரி துறையை கையில் வைத்திருக்கும் திமுக எளிதாக குற்றவாளிகளை நெருங்கலாமே? அதை விட்டு விட்டு நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசை ஏன் குற்றம் சொல்லவேண்டும்?
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201212:18:10 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇதுவும் நல்ல ஐடியா தான்... தும்பை விட்டு வாலைப் பிடிப்பதும் நல்ல ஐடியா தான்.. ஆனால் ரொம்ப பேர் இதை முட்டாள்தனம் என்று சொல்வார்கள்.. பரவாயில்லை... மூளை இல்லாதவர்கள் ஆட்சியில் முட்டாள்தனம் பரவாயில்ல... பாவம், வருவாய்த்துறை, போலீஸ் துறை, பொதுப்பணித் துறை , கனிமவளத் துறை, முதல் அமைச்சர் பதவி என்று இந்த அதிகாரம் எல்லாம் வைத்திருப்பவர்களுக்கு திராணி இல்லை பாருங்கள்... சாட்டையை முட்டை திருடுறவனையும், ஈமு கோழி திருடுறவனையும் பிடிக்க மட்டும் சுழட்டுவாங்க.. கோடியில் லஞ்சம் கிடைக்கும் இதை ... ஐயோ.... முடியவில்லையா ?? கொடநாட்டில் ஏதாவது மூலையில் குப்புறக் கவுந்தடிச்சு படுக்க வேண்டியது தானே.....
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
26-ஆக-201208:21:10 IST Report Abuse
யமதர்மன் கிரானைட் பதித்த தரை ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. மிக மென்மையான தூசுகளை தரையில் படிய விடாமல் (நுண்ணிய இடுக்குகள் இல்லாததால் ) அவை காற்றில் மிதந்து கொண்டே இருக்கும். சுவாசத்தில் உடலின் உள்ளே செல்லும். நுரையீரல் சம்பத மான நோய்கள் வரும். ஏ சியில் இருப்பவர்க்கு அதிக குளுமையால் வியர்வை சுரப்பிகள் வேலை செய்யாமல் அந்த செயலை சிறுநீரகமே செய்யும் பொது அதிக பளுவால் அதுவும் பாதிக்கப்படும்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201212:40:58 IST Report Abuse
மதுரை விருமாண்டிடாக்டர் ராஜசேகரன்... எங்கேய்யா இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்றீங்க.. ஒருத்தன் என்னடான்னா பஸ்சுக்கு வேப்பிலை பாவாடை கட்றது தப்பிலைன்னு திட்டுறான்.. இவரு என்னடானா கிரானைட் வச்சா ஆஸ்த்மா வரும் என்கிறார்.. கடவுளே ... கடவுளே......
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஆக-201215:20:20 IST Report Abuse
villupuram jeevithanஎந்த ஆராச்சியும் செய்யாமலேயே குறை சொல்லுவது நம் வழக்கமாகிவிட்டது. வெளிநாட்டினர் இந்த மூடப்பழக்கவழக்கங்களை ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றாக அதில் உண்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறான்....
Rate this:
Share this comment
யமதர்மன் - Chennai,இந்தியா
26-ஆக-201217:18:32 IST Report Abuse
யமதர்மன்மதுரை விறுமாண்டி அவர்களே, கிரனைட்டில் இருந்து வெளியாகும் ராடன் என்ற வாயு உடலுக்கு தீங்கானது என்பது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். இது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்- கொஞ்சம் இந்த வலைதளத்தை பார்க்கிறீர்களா? ://www.ehow.com/facts_6017579_granite-lung-cancer.html...
Rate this:
Share this comment
Cancel
shajahan kasim - thanjavur,இந்தியா
26-ஆக-201207:46:02 IST Report Abuse
shajahan kasim கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் அடுத்து தவறு செய்பவர்களுக்கு இது ஒரு படமஹா அமையனும்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
26-ஆக-201207:38:05 IST Report Abuse
rajan திருகுவளை மன்னா சுரங்க ஊழலில் ஏன் இத்தனை மௌனம் அமைதி. பொங்கி எழுந்து நெஞ்சுக்கு நீதியாய் அஞ்சா நெஞ்சனாய் குரல் கொடு. உனக்கு தெரியாம் ஒரு மேலூர் ஊழலா அதை இந்த பூ உலகு மன்னிக்குமா.
Rate this:
Share this comment
Cancel
NVRAMANAN - chennai ,இந்தியா
26-ஆக-201207:24:51 IST Report Abuse
NVRAMANAN மேலை நாடுகளில், சாரி நாட்டின் சட்டங்களை மதிச்சு மனிதர்களை மதிக்கும் நாடுகளில் , வாகன ஓட்டிகள் தவறு செய்தல் கடுமையான தண்டனை இருக்கு, udhaaranathirkku , அமெரிக்காவில் ரெட் லைட் மதிக்காமல் , அல்லது speed limit ஐ தாண்டினால் usd 400 , அத்துடன் இல்லாமல், கடுமைய எச்சரிக்கை செய்து அவரை அனுப்பி வைப்பார்கள் மீண்டும் அந்த தவறை செய்ய நினைத்துகூட பார்க்கமாட்டார்கள் -இங்கிலாந்தில் வேகத்தடையை மீறினால் விதிக்க படும் பைன் 800 பவுண்ட்ஸ், அத்துடன் அவரது வகை ஓட்டும் உரிமத்தில் 6 points - குறைக்க படுகிறது, மீதி உள்ள 6 pointugalai வைத்தே பயத்துடன், vaganangali ஓட்ட வேண்டும், இவை போன்ற சட்டங்களை நம் நாட்டில் இல்லை, எவ்வளுவு வேண்டுமானாலும்,வேகமா வண்டி ஒட்டி மக்களை சாகடிக்கலாம் - கொள்ளை அடிக்கலாம்,கொலை செயலாம் தவறு செய்பவன் தனக்கு irukkum பண பலத்தால், கிடைக்கும் தண்டனைகளில் இருந்து தப்பித்து வெளியே வந்து விடலாம் , இது நம்ப நாட்டின் சாதாரண வழக்கம், அப்படிப்பட்ட நாட்டில்,நடக்கும் உழல்களை கண்டு வெளிநாட்டவர்களும் நம்ப நாட்டை கேலி செய்யும் அளவுக்கு நாம் மிக kevalamaga வாழ்கிறோம் - சுரங்களில் இருந்து கறியே வெளியே எடுக்கவில்லை பின் எங்கிருந்து நாட்டுக்கு நஷ்டம் என்கிறார் நாட்டின் மிக பெரிய பொறுப்பில் இருக்கும் மந்திரி .2G வந்த பாடு, இல்லை, அனால் மேலை நாடுகளில் 4G மக்கள் பயன் பாட்டுக்கு வண்டு விட்டது - granite உழல் நம்ப நாட்டின் கனிம வளம், ஒரு சில பாவிகளால் கொள்ளை போனது போகிறது என்பதை நினைத்தால் நாட்டிலே என்ன நடக்குது என்பதே தெரியலை கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்து விடும் பிறகு என்ன நடக்கும் என்று அனைவரும் அறிந்ததே - கடவுளை தவிர நம்ப நாட்ட காப்பாற்ற யாரும் இல்லை அதுதான் உண்மை , ந வ ரமணன் CA ,USA
Rate this:
Share this comment
rajan - kerala,இந்தியா
26-ஆக-201211:04:57 IST Report Abuse
rajanஇந்தியாவில் தான் சட்டம் ஒரு இருட்டறை....
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201212:22:26 IST Report Abuse
மதுரை விருமாண்டிசட்டம் ஒரு இருட்டறை... அதில் கலர் கலரா சீரியல் செட்டு போட்டு, தினுசு தினுசா நாடகம் நடத்துவார் நம்ம மம்மி .....
Rate this:
Share this comment
Cancel
bavan - uganda,அங்கோலா
26-ஆக-201207:03:08 IST Report Abuse
bavan எல்லா கட்சிகளுக்கும் பங்கு இருக்கும்போது எப்படி வாய திறப்பார்கள் சகாயம் இல்லையென்றால் இது இவ்வளவு பெரிது ஆகி இருக்காது எல்லா கட்சிகளுக்கும் பங்கு இருப்பதால் இது அப்படியே அமுங்கி விடும் மக்கள் எதையும் தாங்கி கொள்வார்கள்
Rate this:
Share this comment
sugumar - tuticorin,இந்தியா
26-ஆக-201218:19:40 IST Report Abuse
sugumarmr .bavan ...தாங்கிகொள்வார்கள் என்பதை விட..சினிமா,கிரிக்கெட்-ய் பார்த்துகொண்டு மறந்து விடுவார்கள் என்பதே சரியானதாக இருக்கும்...என்று நினைக்கிறேன்.......
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
26-ஆக-201205:39:37 IST Report Abuse
kundalakesi அழகு மிக்க தமிழக மலைகளை கூறுபோட்டு அந்நிய நாட்டிற்கும், உள்ளூர் மாளிகைத் தரைகளுக்கும் விற்று விட்டார்களே. இனி வருமா? கிரனைட் தரைக்கு மவுசாம். வேறு எவ்வளவு தரை செய் பொருட்களும், போதாதாம். தன்னையே கடித்து தின்று கொண்டிருக்கிறார்கள். அடித்து திருத்தினால்தான் உண்டு. இதில் சம்பாதித்த காசை இவர்கள் அனுபவிக்கப் போவதுமில்லை. பயனற்ற புல்லுரிவிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை