Advertisement
தண்ணீரில் மட்டுமல்ல... : தக்காளி விஷயத்திலும் தமிழகத்தை ஏமாற்றும் கர்நாடகா...!
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

27 ஆக
2012
00:29
பதிவு செய்த நாள்
ஆக 25,2012 23:43

காவிரியில் தண்ணீர் தராமல் ஏமாற்றுவது மட்டுமல்லாமல், தக்காளி விஷயத்திலும், தமிழகத்தை கர்நாடக விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள் ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்திற்கு தேவையான காய்கறிகளில் 50 சதவீத அளவிற்கு, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தின் 70 சதவீத தேவையை பூர்த்தி செய்வதில் கர்நாடக மாநில தக்காளி பெரும் பங்கு வகிக்கிறது.

நாட்டு தக்காளி, நவீன் தக்காளி என்று தக்காளியில் இரண்டு வகைகள் உள்ளன. நாட்டு தக்காளி கோலிகுண்டு வடிவில் பெரிதாக இருக்கும். நவீன் தக்காளி என்பது, உருளையை போன்ற வடிவில் நீளமாக இருக்கும். நாட்டு தக்காளியில் புளிப்பு தன்மை அதிகம் இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா மக்கள் அவற்றை விரும்பி சுவைக்கின்றனர்.பெங்களூரு தக்காளி எனப்படும் நவீன் தக்காளியில், புளிப்பு தன்மை மிகவும் குறைவு என்பதால், அவற்றை, வடமாநில மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மேலும், வட மாநிலத்தவர்கள் தக்காளியை பயன்படுத்துவது மிகவும் குறைவு. அதற்கு பதிலாக வெங்காயம், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு போன்றவற்றைதான் பயன்படுத்துகின்றனர்.

கர்நாடகாவில் நாட்டு தக்காளிக்கு இணையாக நவீன் தக்காளி விளைவிக்கப்பட்டாலும், அவை விலை போவதில்லை. இதனால், சமயோஜிதமாக செயல்படும், கர்நாடக மாநில விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள், நாட்டு தக்காளியுடன், நவீன் தக்காளியை கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் 14 கிலோ அளவிற்கு அடைத்து, தக்காளிகள், லாரிகள் மூலம் விற்பனைக்கு வருகின்றன. பெட்டியில் இரண்டு முதல் அதிகபட்சமாக மூன்று கிலோ அளவிற்கு நாட்டு தக்காளியுடன் நவீன் தக்காளியும் உள்ளது. இந்த விஷயம் தெரிந்தாலும், வியாபார நோக்கம் கருதி, தமிழக தக்காளி மொத்த வியாபாரிகளும், கமிஷன் ஏஜன்டுகளும், அவற்றை கண்டும், காணாமலும், இருந்து வருகின்றனர். இவற்றை வாங்கிச் செல்லும், மற்ற மார்க்கெட் வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும், நவீன் தக்காளி விற்பனை ஆகாததால், நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த தக்காளி வியாபாரி கணேசன் கூறும்போது, "14 கிலோ எடைக்கொண்ட நாட்டு தக்காளி அதிகபட்சமாக 220 ரூபாய் வரையிலும், நவீன் தக்காளி 260 ரூபாய் வரையிலும், விற்பனை ஆகிறது. நாங்கள் பெட்டியாக வாங்கிச் சென்று கடையில் கொட்டி விற்கிறோம்.

அதில் நாட்டு தக்காளியை மட்டும் மக்கள் பொறுக்கி எடுக்கின்றனர். நவீன் தக்காளியை விட்டுச் செல்கின்றனர். பெட்டிக்கு மூன்று கிலோ அளவிற்கு நவீன் தக்காளி மீதம் ஆவதால், 50 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. கர்நாடகாவில் இருந்து தக்காளியை மொத்தமாக வரவழைக்கும், வியாபாரிகள், இந்த மோசடியை கண்டிக்க வேண்டும். அப்போதுதான் கர்நாடக விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள் வழிக்கு வருவார்கள்.இப்போது கர்நாடக பாணியில் கலப்படத்தை, ஆந்திர மாநில தக்காளி விவசாயிகளும், கமிஷன் ஏஜன்டுகளும் அரங்கேற்றத் துவங்கியுள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழக்கமாக தரவேண்டிய தண்ணீரை தராமல், கர்நாடகா தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதே பாணியில் தக்காளி விஷயத்திலும், கலப்படம் செய்து, தமிழர்களை ஏமாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்,'' என்றார்.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vayalum vazhvum-saravanakumar - Basra,ஈராக்
26-ஆக-201218:51:16 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar ஆமாண்டா மடயனுங்கள விளையிற நிலத்தை எல்லாம் கூறு (பிளாட் ) போட்டு நாசம் பண்ணுங்க இப்ப தக்காளி தான் பிரச்னை இன்னமும் கொஞ்ச நாள் போவட்டும் சோத்துக்கும் அலைய வேண்டியது தான் முன்ன இந்த வியாபாரிகள் நமது விவசாயிகளிடம் ஞாயமாக நடக்கட்டும் அப்புறம் போய் ஆந்திரா மற்றும் கர்நாடகாகாரனை கிழிக்கட்டும் பொது மக்களே நீங்க நல்லா பார்த்து வாங்குங்கள் போயும் போயும் இந்த வியாபாரிகளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க இவனுன்களால் விவசாயிகளுக்கும் லாபம் இல்ல உங்களுக்கும் லாபம் இல்ல அப்புறம் ஏன் நீங்க கவலைபடறீங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
26-ஆக-201215:45:45 IST Report Abuse
Kavee ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பான் ..... தமிழன் ஏமாளிதான். என்று நாம் ஒன்று பட்டு திருந்தி வரும்வரை ஏமாளிதான். இந்த கூத்தாடி அரசியலை விட்டு வெளியில் வரும் வரை ஏமாளிதான். சினிமா மோகத்தில் இருந்து வெளியேறி உலக அறிவை பெரும் வரை நாம் ஏமாளிதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஆக-201215:34:26 IST Report Abuse
villupuram jeevithan தமிழ்நாட்டில் செய்யப் படும் வத்தி, சோப்புகளை வாங்கி, கர்நாடகா பொருட்களை தவிருங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
26-ஆக-201213:17:54 IST Report Abuse
Natarajan Ramanathan மக்குப்பசங்களா...நாட்டுத்தக்காளியை விட நவீன் தக்காளி விலை கூட (14 கிலோ எடைக்கொண்ட நாட்டு தக்காளி அதிகபட்சமாக 220 ரூபாய் வரையிலும், நவீன் தக்காளி 260 ரூபாய் வரையிலும், விற்பனை ஆகிறது.) பிறகு ஏன் நாட்டுத்தக்காளியில் நவீன் தக்காளியை கலக்கவேண்டும்? நான் நவீன் தக்காளிதான் வாங்குவேன், அதுதான் ஒருவாரம் ஆனாலும் கெடாது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
26-ஆக-201211:13:45 IST Report Abuse
Daniel Joseph அங்கு நடப்பது நல்லவங்க ஆட்சி ரொம்ப தேச மயம் மிகுந்தவங்க இப்படி தான் வியாபாரம் செய்வாங்க .................. குடிக்க தண்ணீர் கொடுக்க மறுக்கும் இவர்களை என்ன சொல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Venkat - Bangalore,இந்தியா
26-ஆக-201211:09:25 IST Report Abuse
Venkat Atrocious news item just to sensationalize and kindle inter-state enmity. Please keep in mind that all traders are alike and profit-greedy You can&39t blame a state just for these things
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஆக-201208:29:04 IST Report Abuse
villupuram jeevithan சோம்பேறி தமிழனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
26-ஆக-201207:40:18 IST Report Abuse
ஆரூர் ரங வக்காளி இவிங்களை சும்மா விடகூடாது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kavee - Jeddah,சவுதி அரேபியா
26-ஆக-201215:47:22 IST Report Abuse
Kaveeநம்மளாலே ஒன்னும் பண்ண முடியாது இவனுங்களை .... இவனுங்களுக்கு கூஜா தூக்குறது ஐடியா கொடுக்குறது எல்லாமே நம்ம பசங்கதான் ... கோடரி காம்புகள் இருக்கும் வரை குளம் கெடும். ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஆக-201203:24:34 IST Report Abuse
மதுரை விருமாண்டி தக்காளி... ..தக்காளியிலே கூட தகராறு பண்றாங்களா... அப்போ, அதுக்கும் தண்ணியைப் போட்டு அலப்பரை பண்ணனுமுன்னு நிருபர் சொல்றாரா ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
26-ஆக-201201:03:03 IST Report Abuse
Thangairaja தண்ணீரும் தக்காளியும் தராவிட்டால் என்ன ஜெயா, ரஜினி என நம்மை ஆளப்பிறந்தவர்களை தந்திருக்கிறார்களே அது போதாதா....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
K.Sugavanam - Sengkang,Singapore,இந்தியா
26-ஆக-201219:34:58 IST Report Abuse
K.Sugavanamஆமாங்க தெலுங்கு தேசத்தவங்க கூட நம்மை ஆண்டுவிட்டார்கள்.புரியலே......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.