சென்னை: இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை, மத்திய அரசு மறைப்பது அற்பதனமான செயல் என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கை ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 16ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதினேன். இதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். என் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து, சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படை வீரர்கள், 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள, எலகங்கா விமானப்படை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை விடுத்து, பெங்களூரில் பயிற்சி அளிக்க மேற்கொண்ட நடவடிக்கை சரியானது அல்ல. எனவே, நாட்டின் எவ்வித பகுதியிலும் இலங்கையைச் சேர்ந்த ஆயுதப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று, முந்தைய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.
தொடர் எதிர்ப்புக்கு பின்னும், இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் திசநாயகா மொஹட்டலாலகே வெங்க்ரா, ஹேவ வாசம் கண்டாடகே ஆகியோர் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், 11 மாத பயிற்சி எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், அவர்கள் இருவரும் கடந்த, மே 19ம் தேதி முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அதாவது, மே மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி குறித்த உண்மைகள், என் தலைமையிலான அரசுக்கு தெரிவிக்காமலேயே மறைக்கப்பட்டுள்ளது. இச்செயல், மத்திய அரசு அற்பதனமாக செயல்பட்டு வருவதையே காட்டுகிறது.
மேலும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட, மதிப்பளிக்கபடவில்லை என்பதையும் காட்டுகிறது. தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை, உடனே நிறுத்த வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். மேலும் அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ அமைச்சகம் பரிசீலனை:
""தமிழக முதல்வர் வேண்டுகோளிற்கு ஏற்ப, நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரை, அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக ராணுவ அமைச்சகம் பரிசீலித்து வருகிறது,'' என, வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் டில்லியில் நேற்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
""இலங்கை ராணுவ அதிகாரிகளை, அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது என்பது ராணுவ அமைச்சகம் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே, இந்த விஷயத்தில், அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இருப்பினும், இந்த விவகாரத்தை வெளியுறவு அமைச்சகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடிதம் எழுதி கொண்டிருந்தால் மட்டும் முடிவுகிடைக்காது ஏனென்றால் மன்மோகன் ஏற்கனவே ராஜபக்ஷேவிடம் அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டார் தமிழ் நாடும் தமிழர்களும் உங்களுக்கு அடிமை நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் நானும் என் தலைவியும் உங்களுக்கு உதவியும் தமிழனுக்கு கெடுதலும் செய்வோம் இது சத்தியம். விரைவில் உங்களுக்கு தமிழ் நாட்டை விற்றுவிடுவாம் இது உண்மை.
ஏய் நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரௌடினு வடிவேலு கத்ர மாதிரி. இந்தம்மா ஏய் நான்தான் முதலமைச்சர் நான்தான் முதலமைச்சர்னு ஞாபக படுத்துய்யா யானய்யா? கூட்டத்த சேக்குரிங்க.. போ..போ..போ..கூட்டம் போடாத டயத்த வேஸ்ட் பண்ணாத.....காலையில எழுந்தாச்சி, பேப்பர் படிச்சாச்சி, சாப்புட்டாச்சி, அடுத்து என்ன? தூக்கம்தான். ஓகே. bye .....
மரியா கமென்ட் எழுதவர்க்காக ஏதோ எழுதாதீர்கள் . ஒரு மாநில முதல்வரின் பார்வைக்கு இல்லாமல் , அவருடைய மாநில மக்களுக்கு பிடிக்காத விஷயத்தை ஒரு மத்திய அரசு தொடர்ந்து செய்து வந்தால் அதை கண்டிக்க வேண்டாமா ?? . ஜெயாவுக்கு 2 G பயமோ . கிரானைட் ஊழல் பயமோ கிடையாது . மடியில் கணம் இல்லை . வழியில் பயம் இல்லை . ஒன்றை நினைவில் வையுங்கள் . இனி திமுகவால் யாரை எதிர்த்தும் அரசியல் செய்ய முடியாது . தமிழனுக்கு எந்த துரோகம் நடந்தாலும் , திமுக இனிமேல் கைகட்டி வாய் மூடி தான் நிற்க வேண்டும் . சோனியா போட்டதில் இவர்கள் பிழைப்பு ஓடி கொண்டு உள்ளது. இருக்கும் ஆதாரங்களுக்கு சிபியைக்கு ஒரு மாதம் போதும் . ராசாத்தி , தயாளு , மாறன்ஸ் , கனிமொழி , அமிர்தம் போன்றவர்களை உள்ளே தள்ள . கலைஞர் டிவி திருப்பி செலுத்திய 200 கோடி , லெட்டர் பேட் போலி கம்பெனிகளால் கொடுக்க பட்ட விஷயம் enforcement directorate விசாரணையில் உள்ளது . இது 2g யை விட பெரிய fraud . இதில் மாட்டினால் முதல் குடும்பம் மொத்தமும் திஹாரில்தான் . இந்த நிலையில் திமுக காங்கிரசையோ , பிஜபியை யோ எதிர்த்து முனக கூட முடியாது . அரசன் அன்று கொல்வான் . தெய்வம் நின்று கொல்லும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் . தர்மம் மறுபடி வெல்லும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.