பதிவு செய்த நாள் :
கருத்துகள் (19)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கல்வித் தரத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பின்னடைவில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர், டி.இ.டி., தேர்வில், அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 25ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு வெளியிடப்பட்டது. 6.72 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், மாவட்ட வாரியாகவும், ஆண், பெண் வாரியாகவும் அலசி ஆராய்ந்து, நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எப்போதுமே கடைசி இடங்களில் அணி வகுக்கும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்கள், டி.இ.டி., தேர்வில் அபார சாதனை படைத்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வரே, அதிக இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.

கல்வியில் சிறந்து விளங்கும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.

சேலம், "டாப்':
இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து, 121 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 116 பேர்; வேலூரில், 99; திருவண்ணாமலையில், 65; விழுப்புரம் மாவட்டத்தில், 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுவே, கன்னியாகுமரி மாவட்டத்தில், 26 பேர், நெல்லையில், 62 பேர், தூத்துக்குடியில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக, நீலகிரி மாவட்டத்தில், நான்கு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த நான்கு பேருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற மாவட்டங்களில், சராசரியாக, 25 பேர் வீதம் தேர்ச்சி

பெற்றனர். தலைநகர்
சென்னையில், 69 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.

கணிதத்தில் கடலூர்:
பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடங்களில், கடலூர் மாவட்டத்தில் இருந்து, 70 பேர் தேர்ச்சி பெற்று, அபார சாதனை படைத்தனர். இதற்கு அடுத்த இடங்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 23 பேர்; தர்மபுரியில், 22 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில், முதலிடத்தை பிடிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், கணிதம் - அறிவியல் பாடத்தில், ஒரே ஒரு பெண் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். ராமநாதபுரத்தில்இரண்டு பேர், தூத்துக்குடி, திருவாரூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்.

சமூக அறிவியலில்...:
டி.இ.டி., இரண்டாம் தாளில், சமூக அறிவியல் பாடத்தில், சேலம் மாவட்டமே முதலிடம் பிடித்தது. இந்த மாவட்டத்தில், 39 பேர் தேர்ச்சி பெற்றனர். 29 இடங்களைப் பிடித்து, கடலூர், தர்மபுரி மாவட்டங்கள், இரண்டாவது இடத்திலும்; 24 இடங்களைப் பிடித்து, விழுப்புரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பாடத்திலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடிக்கவில்லை. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில், தலா, 11 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில், ஏழு பேர், விருது நகரில், 12 பேர், கோவையில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர்.கடினமாக அமைந்த, டி.இ.டி., தேர்வில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்திருப்பதைக் கண்டு, கல்வித்துறை அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

"முட்டை' வாங்கிய சிவகங்கை :
டி.இ.டி., இரண்டாம் தாள், கணிதம் - அறிவியல் பாடத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கையில் இருந்து, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், ஒருவர் கூட

Advertisement

தேர்வு பெறவில்லை. இந்தப் பாடத்தில், புதுக்கோட்டை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து, தலா ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டாம் தாள் தேர்வில், சமூக அறிவியல் பாடத்திலும்,நீலகிரி மாவட்டத்தில், ஒருவர் கூட தேர்வு பெறவில்லை. சிவகங்கை மாவட்டத்தில், இருவர் தேர்ச்சி பெற்றனர்.

இளைஞர்கள் அபார சாதனை:
டி.இ.டி., தேர்வில், 25 வயது முதல், 30 வரையிலான இளைஞர்கள், 77.81 சதவீத இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், 30 வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கை, 1,905.இதில், 25 வயது முதல், 30 வயது வரையிலான இளைஞர்கள், படித்து முடித்து வெளியே வந்த வேகத்தில், தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு, சாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதிய, 40 முதல், 45 வரையிலான, 5,653 பேரில், 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.முந்தைய ஆட்சியில், அனைத்து வகை ஆசிரியருமே, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், 50 வயதிற்கு மேற்பட்டவர் அதிகளவில் தேர்வு பெற்றனர். வயதான நிலையில் தேர்வு பெறும் ஆசிரியருக்கு, பணியில் ஈடுபாடோ, கல்வித்துறை அளிக்கும் பயிற்சிகளில், பிடிப்புடன் ஈடுபடவோ மாட்டார்கள் என்பது, பலரது கருத்து.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan SA - Thiruthangal,இந்தியா
31-ஆக-201200:36:09 IST Report Abuse
Kannan SA வருடத்திற்கு இரண்டு முறை நமது அரசுக்கு வருமானம் தரும் நல்ல வழி. கற்றுக்கொடுப்பதற்கு பொறுமையும் அறிவும் அவசியம். 18 - 23 க்குள் உள்ளவர்கள் இப்பொழுதுதான் படிப்பை முடித்துள்ளனர் அவர்கள் மனப்பாடம் செய்ததையே ஒப்புவித்துள்ளனர். ஆசிரியருக்குள்ள பொறுமை உண்டா என்பது சந்தேகமே
Rate this:
Share this comment
Cancel
Jayasankar Sankar - Sharjah,இந்தியா
29-ஆக-201222:44:38 IST Report Abuse
Jayasankar Sankar this all drama . tamil nadu govt why the employment. the exam only collecting money from the people.
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
29-ஆக-201219:25:12 IST Report Abuse
T.C.MAHENDRAN இவர்கள் செய்தது அபார சாதனையா ?. இந்த லட்சணத்தில் இவர்கள் பாடம் நடத்தினால் மாணவர்களின் கதி அதோகதிதான் .
Rate this:
Share this comment
Mannar - Athippatty,இந்தியா
30-ஆக-201220:08:50 IST Report Abuse
Mannarஅவங்க சாதனையை பத்தி சொல்லல, question paper அவளோ கஷ்டமா எடுத்திருகான்கலாம் அந்த பெருமையா பத்தி சொல்றனுங்க........
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஆக-201217:41:45 IST Report Abuse
Sivakumar Manikandan தென் மாவட்டங்களில் 75 % பள்ளி கூடங்கள் தனியார் ஜாதி நிறுவனத்தால் நடத்தப் படுபவை....எப்படியாவது காசு கொடுத்து வேலை வாங்கி விடுகின்றனர் ........ஆனால் வட மாவட்டங்களில் 75 % பள்ளி கூடங்கள் அரசால் நடத்தப் படுபவை.....வேலை அரசாங்கம் மூலம் தான்.....தனியார் பள்ளியில் ஒரு கருமமும் தேவை இல்லை ....ஜாதி & பணம் இருந்தால் போதும் ......
Rate this:
Share this comment
Cancel
Balan R - karaikal,இந்தியா
29-ஆக-201217:02:33 IST Report Abuse
Balan R நீங்கள் அளித்துள்ள சதவிகித கணக்கை முழுவதும் தாருங்கள் . காரணம் நாற்பது வயதுக்கு மேல் இருபத்து நபர் மட்டும் வென்றதாக சொன்ன நிங்கள் அதை எழுதியவர்கள் வெறும் ஐயா யிரம் மட்டுமே . ஐந்து லட்சம் பேரில் வெற்றி பெற்ற வர்கள் எல்லா வயதிலும் சதவிகத கணக்கை வெளியிட்டு இருந்தால் எதனை பேரில் எந்த வயதில் எத்தனை சதவிகித இடங்கள் பாஸ் செய்து உள்ளனர் என்ற விபரம் வெளி இட முடியுமா ? ஆறு லட்சம் பேரில் வெற்றி பெற்ற வர்கள் இரண்டு ஆயிரம் மட்டுமே . இதன் சதவிகிதம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
29-ஆக-201213:56:17 IST Report Abuse
mk கொசுடீன் பேப்பர் அவுட் ஆயிருச்சோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel
Ashokkumar Asu - salem,இந்தியா
29-ஆக-201213:15:17 IST Report Abuse
Ashokkumar Asu இந்த தகுதி தேர்வு என்பதே டோடல் வேஸ்ட் .ஏட்டு சுரைக்காய் ,கறிக்கு உதவாது . அனுபவம் தான், முக்கியம் . ஒரு டிகிரி படித்து , அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வைக்கும் BEd தேர்வு எழுதி , தற்போது தனியார் பள்ளிகளில் அரசு ஆசிரியர் சம்பளத்தில் , பத்தில் ஒருமடங்கு சம்பளம் வாங்கி கொண்டு, அரசு பள்ளி மாணவர்களை விட , தனியார் பள்ளி மாணவர்களின் தரத்தையும் , தேர்ச்சி விகிதத்தையும் எப்போதும் உயர் தரத்தில் வைத்திருக்கும் அந்த கற்பித்தல் திறமை சாலிகளை அவமானபடுத்துவதாக உள்ளது . அனுபவத்துக்கு மரியாதை கொடுங்கள் . கல்வி துறை மட்ற துறை போல அல்ல . சேலம் அசோக்குமார்
Rate this:
Share this comment
முகேஷ் - TIRUPUR,இந்தியா
29-ஆக-201218:02:04 IST Report Abuse
முகேஷ்உங்கள் கருத்தை ஏற்றுகொள்ள முடியாது. தகுதி தேர்வில் பாஸ் ஆனவர்கள் எல்லாம் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் எல்லாம் தேர்ந்து எடுக்கப்பட்ட நல் முத்துகள். இதன் மூலம் மாணவர்களின் தரத்தை நிச்சயமாக உலக தரத்திற்கு சவால் விடும் ஒரு தைரியம் நமக்கு வரும்....
Rate this:
Share this comment
Mannar - Athippatty,இந்தியா
30-ஆக-201220:04:44 IST Report Abuse
Mannarயோவ் முகேஷ், TET Exam ல படிச்சு மார்க் வாங்குனாலும், இருக்குற பிரச்னை என்ன தெரியுமா, பிரச்னை தெரிஞ்சுடு கமெண்ட் போடணும் சரியா.?...
Rate this:
Share this comment
Cancel
pullatpandi - uae,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஆக-201212:47:20 IST Report Abuse
pullatpandi தமிழ் நாட்டில் தென் மாவட்டங்கல் என்று ஒன்றும் கிடையாது நம்ம அதிகாரிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் சென்னையும் அதனை சுற்றி இருக்குற மாவட்டம்களும் தான் தமிழ்நாடுநு நேனைசுகிட்டு இருக்குறாங்க, அதை மாத்த சொல்லுங்க மொதல்ல , தென் மாவட்டங்கள் தானாக முன்னேறிடும்.
Rate this:
Share this comment
Cancel
karthik r - coimbatore,இந்தியா
29-ஆக-201212:01:44 IST Report Abuse
karthik r எல்லாம் திரு மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 15 ஆண்டு உழைப்பின் பலன் ,
Rate this:
Share this comment
Cancel
S.ARIVALAGAN - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஆக-201211:19:17 IST Report Abuse
S.ARIVALAGAN தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் கற்பிக்கும் ஆற்றல் வுள்ளவர்கள் என்று நம்பமுடியாது.... தற்போது நடந்த தகுதி தேர்வை நன்கு +2 படித்த மாணவர்களை எழுதசொன்னல் அவர்கள் கூட தேர்ச்சி பெற வாய்ப்பு வுள்ளது. எனவே கற்பிக்கும் திறன் வேறு.. தகுதி திறன் வேறு... இப்போது வுள்ள பெரும்பாலான கல்விநிலையங்கள் கோச்சிங் மட்டுமே அதிகம் தருகின்றன டீச்சிங் குறைவு.... இதற்கு பக்குவமான பொறுமையான அன்பான ஆசிரியர் இருந்தால் போதுமானது... இதற்கு வயதான ஆசிரியர்கள், அவர்களின் அனுபவங்கள் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.