தொல்லை தரும் அழைப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக, டிராய் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத, மொபைல்போன் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொபைல்போன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, தொல்லை கொடுக்கும் விளம்பர அழைப்புகள், மோசடி லாட்டரி பரிசு, எஸ்.எம்.எஸ்.,க்களும் அதிகரித்து வருகின்றன. வர்த்தக ரீதியான எஸ்.எம்.எஸ்.,க்கள் மற்றும் அழைப்புகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திற்கு (டிராய்) புகார் வந்ததையடுத்து, இவற்றை தடுக்க, பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.எனினும், தொல்லை தரும் அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,க்கள், தொடர்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய செயலில் ஈடுபடும் நிறுவனங்களை தண்டிக்கும் புதிய வழியை, சமீபத்தில், "டிராய்' அறிவித்தது.
எஸ்.எம்.எஸ்., புகார்:
அதன்படி, தேவையில்லாத அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,க்களை அனுப்பும், "டெலி மார்க்கெட்டிங்' நிறுவனத்தின் மொபைல் எண்ணை, "1909' என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ அல்லது தொலைபேசி மூலமோ புகார் தெரிவிக்கலாம்; இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. புகார் பதிவானதற்கான அடையாளமாக, புகார் எண் ஒன்றை, சம்பந்தப்பட்ட மொபைல்போன் சேவை நிறுவனங்கள், புகார்தாரருக்கு வழங்க வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல்., உட்பட பெரும்பாலான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், புகார் பதிவுக்கான எண்ணை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடவடிக்கை தேவை:
இதுகுறித்து, தொலைத் தொடர்பு ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் சத்தியபாலன் கூறியதாவது:இத்தகைய அழைப்புகளை கட்டுப்படுத்த, ஏற்கனவே, "டோன்ட் கால்' என்ற வசதியை, "டிராய்' வழங்கி உள்ளது. இருப்பினும், தொல்லை தரும் அழைப்புகளில் இருந்து, வாடிக்கையாளர்களால் தப்பிக்க முடியவில்லை.புகாருக்கான புதிவு எண்ணை தராதது; புகார் அளிக்கும் முறை ஆகியவை குறித்து, பி.பி.ஓ., நபர்களிடம் கேட்டால், தவறான தகவல்களை அளிக்கின்றனர். "தொல்லை அழைப்பு குறித்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, புகார் பதிவு செய்ய வேண்டும்' என, அறிவுறுத்துகின்றனர்.இதுபோன்ற எந்தவித அறிவிப்பையும், "டிராய்' வெளியிடவில்லை. சில நிறுவனங்களின் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.,க்களில், மொபைல் எண் வருவதில்லை. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து, "டிராய்' உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிக அபராதம் :"
டிராய்' பதிவேட்டில் பதியாமல், சட்ட விரோதமான அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது தெரிய வந்தால், அதை அனுப்பிய நபர் அல்லது நிறுவனத்துக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட, "டெலி மார்க்கெட்டிங்' நிறுவனத்தின் மீது, 10க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டால், அந்த நிறுவனத்தின் மொபைல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, "டிராய்' அறிவித்துள்ளது.இருப்பினும், இவற்றை பின்பற்றாத, "டெலி மார்க்கெட்டிங்' நிறுவனங்களுக்கு, அதிக அபராதம் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தொடர் கதையாகும் தொல்லை தரும் அழைப்புகள்: நடவடிக்கை எப்போது? நன்றி
இதனுடன் பாட்டு கேட்பதற்கு அடிக்கடி போன் வருகிறது. அதனையும் நிறுத்த வேண்டும், ஏனெனில் அதை பத்தி தெரியாதவர்கள் ஒகே செய்து விடுகிறார்கள், அதனால் 30 ருபாய் பிடித்து விடுகிறாக்கள். அவர்களிடம் நாம் கேட்கும் பொது போன் வந்தது நான் ஒகே செய்தேன் அவ்வளவுதான் என்கிறார்கள். அவர்களுக்கு பாடல் தேவை இல்லை. பாடல்கள் தேவை என்றல் அவர்களே வைத்து கொள்வார்கள். இதற்கு உங்களலால் எதாவது செய்ய முடியுமா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.