E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சூரிய ஒளி மூலம் மின்சாரம்: வழிகாட்டுகிறது ஜெர்மனி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஆக
2012
00:51
பதிவு செய்த நாள்
ஆக 28,2012 23:48

"இந்தியாவும், ஜெர்மனியும், 2011-12: எண்ணற்ற வாய்ப்புகள்' என்ற சிறப்பு நிகழ்ச்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஆக., 24ம் தேதியிலிருந்து, செப்., 2ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நகரங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.

விமானத்திற்கு, அதிக அளவில் ஏற்படும் எரிபொருள் தேவையை சமாளிக்க, புதிய உத்தியை கண்டுபிடித்திருக்கிறது, ஜெர்மனி. அங்கு, விமானத்தின் இரு இறக்கைகளிலும், சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் வானத்தில் மிதப்பதால், தரைமட்டத்தில் கிடைக்கும் அளவை விட, சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும்.இரண்டு பக்க இறக்கைகளிலும் சூரிய ஒளி படுவதால், அதன் சக்தியை பெரிய அளவில் தேக்கி வைக்கலாம். தேக்கி வைக்கப்பட்ட சூரிய சக்தியை, இரவில் பயன்படுத்தலாம். இதனால், விமானம் இடைவிடாமல் இயங்கும். தற்போது கண்டுபிடித்துள்ளவற்றை, அடுத்தாண்டு முதல் பயன்படுத்த, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சூரிய ஒளி வீடு:



இந்தியாவை விட, அதிகளவில் அணுசக்தியை பயன்படுத்தி வரும் ஜெர்மனி, சூரியசக்தியையும் அதிகளவில் ஊக்குவிக்கிறது; அதில் முக்கியமானது, சூரிய ஒளி வீடு.வீட்டின் கூரையில், சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகளை பொருத்தி, வீட்டிற்குள் உள்ள கருவி மூலம் சேகரித்து, வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பூர்த்தி செய்கிறது. அதிலும், வீட்டில் சூரிய ஒளிபடும் பிற பகுதிகளிலும் தகடுகளை வைத்து, மொபைல்போன்களுக்கு, "சார்ஜ்' செய்யப்படுகிறது.பெரும்பாலான அலுவலகங்களில், சூரிய ஒளியை உள்வாங்கும் தகடுகளை பதிப்பித்து, மின்சாரம் சேகரிக்க, பெரும் முயற்சி எடுத்து வருகிறது. சூரிய சக்தியை உள்வாங்கி, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:



இருபது அணுசக்தி நிலையங்கள் முழு வீச்சில் தயாரிக்கக்கூடிய, 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம், ஒரு மணி நேரத்தில் தயாரித்து, உலக சாதனை படைத்தோம். இந்த அளவு மின்சாரம், நாட்டின் பகல் நேர மின்சார தேவையில் பாதியை பூர்த்தி செய்யக் கூடியது. உலகில் வேறு எந்த நாட்டிலும், சூரியசக்தி மூலம், இவ்வளவு அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.ஜெர்மனியில், புதுப்பிக்க தக்க எரிசக்தி மூலம், 20 சதவீத மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தியை அதிகரித்து, அதிக புகையை வெளியிடும் அனல்மின் உற்பத்தியை குறைக்க, ஜெர்மன் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை இந்தியாவும் கடைபிடிப்பதற்கு பரிசீலிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Shanmugavadivelu - Chennai,இந்தியா
30-ஆக-201206:49:20 IST Report Abuse
Rajendran Shanmugavadivelu நாமும் சூரிய ஆற்றலிலுருந்து மின்சாரத்தைத் தயாரித்து பயனடையலாமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
29-ஆக-201208:36:21 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN Exploring Solar power will lead the state to be prone to quakes. We have already ever clicking bombs in the form of Nuclear Plants. Both do not gel with. Intruding in cycle of Nature will be disastrous.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sundar Ramachandran - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-201207:00:40 IST Report Abuse
Sundar Ramachandran why dont our govt encourage these types of new innovation and inventions rather encouraging sri lanka to so many peoples and price hike
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Manohar - Trichy,இந்தியா
29-ஆக-201202:04:18 IST Report Abuse
Manohar இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும். இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 150 நாட்களுக்கும் குறைவாக‌ சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாட்டை மக்களிடையே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் இருளில் தவிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் நிச்சயம் பிரகாசிக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
29-ஆக-201200:57:57 IST Report Abuse
Thangairaja இந்தியா வேற, ஜெர்மனி வேற. இங்க நடக்குறதுக்கு சாத்தியமுள்ள விஷயங்களா பேசுங்கப்பா......இவ்வளவு காசு செலவழிச்சு .......போங்கப்பா......மாற்றம் தேவைப்படற சிலரு செஞ்சு பார்க்கலாம். நடுத்தரவாசிகளுக்கு ......ம்ஹூம். அரசாங்கம் தான் மின்சாரத்துக்கு பொறுப்பு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-201204:28:52 IST Report Abuse
Kasimani Baskaranசீனா தனது ஆதிக்கத்தை இந்தத்துரயிலும் செலுத்துகிறது. சென்ற ஆண்டு அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்து solar cell களின் விலையை தரை மட்டத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஜெர்மனி போன்ற நாடுகள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டன. நாம் மட்டும் வெட்டித்தனமான காரணங்களை சொல்லி தட்டிக்களித்து விட்டோம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
29-ஆக-201200:33:49 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை சட்டமாக்க வேண்டும். முன்பு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சட்டமாகியதுபோல, இதையும் சட்டமாக்கணும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vijay - chennai,இந்தியா
29-ஆக-201201:20:53 IST Report Abuse
Vijayஇதற்க்கு அதிக செலவு ஆகுமே நண்பரே, வசதி படைத்தோர் வீடுகளுக்கு கட்டாயமாக்கலாம்...... வீடுகள் தவிர்த்து மற்ற அணைத்து கட்டிடங்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்து ரயில் விமான நிலையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பிற கட்டடங்களுக்கு இதை சட்டமாக கொண்டுவரலாம், இதில் ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும்... வீடுகளுக்கு மின்சார சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம்.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
29-ஆக-201200:31:02 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) "22 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, சூரிய சக்தி மூலம், ஒரு மணி நேரத்தில் தயாரித்து, உலக சாதனை படைத்தோம்" - இதுவல்லவா நாடு.. இரண்டு உலகப்போரில் தோற்றாலும், மீண்டும் எழுந்து வீறுநடை போடும் நாடு.. நம்மள ஆட்சிசெய்யிற அரசியல்வாதிகளும்தான் இருக்காங்களே..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kalan - chennai,இந்தியா
29-ஆக-201207:33:44 IST Report Abuse
kalanநம் அரசியல்வாதிகள் கொள்ளையடிபதில் தான் உலக சாதனை படைத்து இருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கொள்ளை அடிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். இந்த சண்டாளர்களை வரும் தேர்தலில் தோற்கடித்து ஒழித்துக்கட்டுவோம். vazhga பாரதம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.