பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலையில் அமர்த்தினால் மூன்று ஆண்டு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்களை, எந்த விதமான வேலையில் ஈடுபடுத்தினாலும், அந்த நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதுதொடர்பான, சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், "குழந்தை தொழிலாளர் தடை மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், 1986'ல் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்தச் சட்டத்தின்படி, அபாயமான அல்லது அபாயமற்ற எந்த விதமான தொழில்களிலும், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. அப்படி ஈடுபடுத்த முழுமையான தடை விதிக்கப்படுகிறது.அதை மீறி, எந்தத் தொழிலில், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தினாலும், அவர்களை ஈடுபடுத்தும் நபர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய், அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சுரங்கம் போன்ற அபாயகரமான தொழில்களில், 18 வயதிற்கு குறைவானவர்களை ஈடுபடுத்தவும், இந்தச் சட்ட மசோதா தடை விதிக்கிறது.

தற்போது, அபாயகரமான தொழில்களில் மட்டுமே, 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்த தடையுள்ளது. மேலும், புதிய சட்ட மசோதா அமலுக்கு வந்தால், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும், பள்ளிக்கு செல்வது உறுதி செய்யப்படும்.சுரங்கம் போன்ற அபாயகரமான தொழில்களில், 18 வயதிற்கு குறைவானவர்களை வேலையில் ஈடுபடுத்தினால், அவர்களை பணியில் ஈடுபடுத்தும் நபருக்கு, ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றத்தை செய்யும் நபர்களுக்கு, மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.இதுதவிர, பீகாரில், இரண்டு மத்திய பல்கலை கழகங்கள் அமைக்க, மத்திய பல்கலை கழகங்கள் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-201221:48:33 IST Report Abuse
ரெட்முத்து ஆட்சியை சரியாக செய்தால் எல்லாம் சரியாக நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
29-ஆக-201217:09:26 IST Report Abuse
maran அரசே பல துறைகளில் சிறுவர்களைத்தான் ஈடு படுத்துகிறது .......... பெற்றோர்களை இழந்து வறுமையில் வாடும் குழந்தையை காப்பாட்ட்ருவார் யாரோ ..? அப்படியே அரசு காப்பகத்துக்கோ ,மறுவாழ்வு மையத்துக்கோ போனால் நிறைய நடைமுறைகளை செய்ய சொல்கிறார்கள் .....எனவே பல குழப்பத்தினால் தான் சிறுவர்கள் இப்படி வேலை தேடி பிழைக்கிறார்கள். .... ஆனால் சில குடும்ப பெற்றோர்கள் ....வேணுமென்றே வேலையில் அமர்த்துகிறார்கள் ...அவர்களை மட்டும் கண்டித்தால் நல்லது ...
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Ramanujam - Chennai,இந்தியா
29-ஆக-201210:53:39 IST Report Abuse
Venkatesan Ramanujam இந்த சிறுவர்கள் தங்கள் பசியாற வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு வேலை கொடுப்போரையும் சிறையில் தள்ளுவர். அந்த சிறுவன் படிக்கவும் வழியில்லாமல் வேலையும் செய்யமுடியாமல் பட்டினியால் வாடுவான். வேலைக்கு சென்றாலாவது நல்ல தெளிவுள்ளவனாக இருந்தால் அவனே அந்த சொந்த தொழிலாக வளர்த்ததும் தொடங்குவான். உதாரணம் டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள் பலர் பின்னாளில் சொந்தமாக டீ கடை வைத்து பிழைக்கின்றனர். ஆனால், இந்த சட்டத்தால் இவர்கள் பசியோடு படிப்பிலும் கவனம் செலுத்த முடியாது, வேலையும் கற்றுக்கொள்ளமுடியாது. இச் சட்டத்தை திருத்தி வேலை கொடுப்போரே அச் சிறுவர்களின் படிப்பிற்கும் ஏற்பாடு செய்யவேண்டும், அவ்வப்போது அரசு அச் சிறுவர்களுக்கு தேர்வு வைத்து அவர்களின் தரத்தினை சோதிக்கும் என மாற்றலாம். ஏனெனில், இந்தியாவின் இளம் CEO சரவணன் (10 வயது) மற்றும் சஞ்சய் குமரன் (12 வயது) இவர்களும் குழந்தை தொழிலர்களே. இவர்களுக்கு கம்பெனி வைத்து தந்தவர்களை கைது செய்வார்களா? முடியாது, ஏனெனில் இது திறமை என்று எடுத்துக்கொள்ளப்படும். மேலும் பணம் படைத்தவர்கள், அவர்கள் அடுத்த வேலை சோற்றுக்காக தொழில் நடத்தவில்லை. அதனால் அவர்கள் குழந்தை தொழிலாளர்களின் வரிசையில் வரமாட்டார்கள். ஆனால் பசி என்று வந்தவனுக்கு வேலை கொடுத்தாலோ அது குற்றமா? கொடுமைகள் நடக்கும் இடத்தினை இடைவிடாத சோதனைகள் மூலம் கண்டறிந்து களைவதை விட்டு, இப்படி செய்தல் நன்றா? தீர்வினை யோசியுங்கள் நண்பர்களே
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
29-ஆக-201210:25:43 IST Report Abuse
yila சினிமாவில் அல்லது தொலைக்காட்சியில் நடிக்க வைத்தால்? அதுவும் காதலிக்கும் பள்ளிச் சிறுவர்களாக, பள்ளிச் சீருடையில்
Rate this:
Share this comment
Cancel
gurusamy - pudukkottai,இந்தியா
29-ஆக-201209:25:01 IST Report Abuse
gurusamy இந்த சட்டம் எல்லாம் கால் வயித்து கஞ்சிக்கு அலையும் சிறுவர்களை பிடித்து அடைத்து வைக்க மட்டுமே. டி.வி. யில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கி அசிங்க டான்ஸ் ஆடும் குழந்தைகளுக்கு கிடையாது இல்லையா.? வாழ்க சட்டம் வாழ்க ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
Jagannathan Narayanan - Tirupur ,இந்தியா
29-ஆக-201207:51:27 IST Report Abuse
Jagannathan Narayanan பதினான்கு வயதிற்கு பிறகு மட்டுமே ஒரு குழந்தையால் வாழ்வு மேலுற கல்வி கற்க இயலும். ஆனால் இவர்களோ அந்த வயதில் வேலைக்கு சென்றால் தப்பில்லை என்கிறார்கள். இவர்களையெல்லாம் அந்த செங்கற்சூளையில் இட்டு பொசுக்க வேண்டும்.. இவர்கள் பிள்ளையெல்லாம் வெளிநாட்டில் படிக்க வேண்டும். நம் குழந்தைகளெல்லாம் இவர்கள் வசதியாக வாழ கல் செய்து தரவேண்டும்..இந்த ஆட்சி இருக்கும் வரை இந்திய திருந்த போவதும் இல்லை. ஜால்ரா அட்டிகும், கம்யூனிஸ்ட், தி. மு. க அண்ட் உதிரிகட்சிகள் காங்கிரசுக்கு என்றும் பங்கம் வாறது. வாழ்க அன்னை சோனியா அவர் குடும்பத்தினரும்.. ஜே. நாராயணன் திருப்பூர்
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-ஆக-201202:08:31 IST Report Abuse
மதுரை விருமாண்டி போட்டோ படம் அப்படியே "வாகை சூடவா" சினிமாவில் இருந்து எடுத்த ஸ்டில் ஷாட் மாதிரி இருக்கு... யாராவது கேள்வி கேட்டா, "அரசுக்கு எந்த விதமான முறையீடும் (கம்ப்ளைன்ட்) வரவில்லை".. என்று அழகாக அறிக்கை விடுவாங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்