மதுரை : ""குவாரிகள் முறைகேடு தொடர்பாக, அரசிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என, மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறினார்.இதுவரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, அரசுக்கு, 1,800 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பணம், யார், யாருக்கு போனது என்பது, விசாரணை கமிஷன் வைத்து, அரசு விசாரித்தால் உண்மை வெளிவரும்.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில், கிரானைட் குவாரிகளில் நடந்த மோசடியால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 26 நாட்களுக்கும் மேலாக, வருவாய்த் துறை உட்பட பல்வேறு துறையினரும், இவற்றை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில், 175 கிரானைட் குவாரிகள் உள்ளன. இவற்றில், விதிமீறிய வகையில், இதுவரை, 1,800 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பாக, ஆய்வுப் பணியில் உள்ள அலுவலர்கள், கலெக்டருக்கு விவரம் அளித்து வருகின்றனர். கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, தினமும் அரசுக்கு தகவல் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர், அரசுக்கு ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதில், இதுவரை நடந்துள்ள ஆய்வுப் பணிகள், கண்மாய் நீராதார பாதிப்பு, கிரானைட் கற்களால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து, விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:அரசுக்கு தினமும் தகவல் அனுப்பினாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை அனுப்பப்படுகிறது. தற்போது அனுப்பப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, எதுவும் கூற இயலாது. முதற்கட்டப் பணியில், 175 குவாரிகளில், பலவற்றில் ஆய்வுப் பணி நடந்தது. இரண்டாம் கட்டப் பணியில், "டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம், எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன, அதன் மதிப்பு எவ்வளவு என கணக்கிட்டு வருகிறோம். வருவாய் உட்பட பிற துறை அலுவலர்கள் கடினமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கெங்கு கிரானைட் கற்களுக்கு, "ஸ்டாக் யார்டு' வைத்துள்ளனர் என, அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை கணக்கெடுக்கும் பணியும் நடக்கிறது. இப்பணி முடிந்த பின், மொத்த மதிப்பு குறித்து கூற முடியும்.
கிரானைட் மதிப்பு குறித்து, இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர், நிபுணர்களிடம் மார்க்கெட் மதிப்பை கேட்டு அறிவோம். ஒரு கனமீட்டருக்கு, 30 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ளது; கழிவு கற்களும் உள்ளன. எனவே, தரம் பார்த்து அறிந்த பின், இழப்பை அறிய முடியும். தற்போது எண்ணிக்கை, அதன் தரம் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இப்பணிக்கு, மேலும், 15 முதல், 20 நாட்கள் ஆகலாம்.கடந்த, 10 முதல், 15 ஆண்டுகளில், முறைகேடான பட்டா மாறுதல், ஆவணங்கள் காணாமல் போனது போன்ற காரணங்களுக்காக, சில வருவாய் அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிற துறையினர் மீது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பர்.நீராதாரங்கள் அழிப்பு தொடர்பாக, பொதுப்பணித்துறையினர் இதுவரை, 700 ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஆக்கிரமிப்பை பொறுத்தவரை, மொத்தம், 175ல், 89 குவாரிகளில் விதிமீறல் உள்ளது; 51ல் சட்ட விரோதமாக கற்களை வெட்டியுள்ளனர். கற்பாறைகளை உடைக்க, அளவுக்கு மீறி வெடிபொருட்கள் வைக்கப்பட்டு இருந்தால், அதன் மீதும் கடும் நடவடிக்கை இருக்கும். தற்போது வரை, 45 ஆயிரம் கற்கள் கணக்கிடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
"தயாநிதி அழகிரி மீது நடவடிக்கை உண்டா?' என, ஒரு நிருபர் கேட்டதற்கு, "யார் யார் மீது, எப்.ஐ.ஆர்., உள்ளதோ, அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது சரண்டர் ஆகலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பர்' என்றார்.
தமிழகத்தை உலுக்கி வரும், இந்த கிரானைட் மோசடி குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதில், பல ஆண்டுகளாக மோசடி நடந்து வருகிறது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பினாமி பெயரில் அரசியல்வாதிகள், இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய், யார், யாருக்கு எப்படி போனது என்பதை கண்டுபிடிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும். முழுமையாக விசாரித்தால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அரசு இது குறித்து ஆலோசித்து வருகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மோசடியில் ஈடுபட்ட அழகிரி, அழகிரி மகன், ஒ பன்னீர்செல்வம ( 2002 ) PRP கம்பெனி ஆரம்பிக்க உதவியவர் தனியார் நிலத்தில் குவாரி நடத்தலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வந்தவர், மேலூர் ADMK MLA சாமி, ராஜா கண்ணப்பன், பொன்முடி, சசி குடும்ப உறுப்பினர் அனைவரும் கைது செய்ய படவேண்டும். நடக்குமா? இது ஒரு கூட்டு கொள்ளை.
மக்களுக்கு சேர வேண்டிய நன்மையை தடுத்து ஊழல் செய்வதில் கட்சி பாகுபாடு எல்லாம் நம்ம நாட்டில் கிடையாது..இதில் ஒருவருக்கொருவர் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல ..இதை செய்வதில் எல்லா கட்சிகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத ஒரு கூட்டணி எப்போதும் உள்ளது..இது புரியாமல் சிலர் என் கட்சி பெருசு என்று பேசுவது நகைப்புக்கு உரியதே..
நாடே ஊழலில் மூழ்கிக்கிடக்கிறது, இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. ஊழலை ஒழிப்போம் என்று கோஷ்ட்டி கோஷ்ட்டியாக சேர்ந்து கோஷம் இடுகிறார்கள். தலைவர்களின் வீடுகளை முற்றுகை இடுகிறார்கள். இவர்களெல்லாம் யோக்கியர்களா என்பது வேறு விஷயம்?. ஆனால் இங்கு ஒருவர் ஊழலைக் கண்டு பிடித்து வெளியில் சொன்ன கலெக்டர் சகாயத்தை பிழைக்கத் தெரியாதவர் என்று சான்றிதழ் கொடுக்கிறார். பின்னர் ஊழல் எப்படி ஒழியும். ஊழலுக்கு துணை போனால் புத்திசாலி அப்படித்தானே? இது தான் உலகம். எலும்பில்லாத நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசும். அடக்கி வாசித்தல் நல்லது.
இங்கு கருத்து சொல்லியுள்ள தி.மு.க. சொம்புகளை பார்த்து எனக்கு ஒன்றே ஒன்றுதான் கேட்க தோன்றுகிறது. ....... தானும் படுக்க மாட்டான் ( நடவடிக்கை எடுக்க மாட்டங்க ) தள்ளியும் படுக்க மாட்டாங்க ( நடவடிக்கை எடுப்பதிலும் நொட்டாங்கு )....... இவங்க கருத்துக்கு பதில் சொல்வதை விட, ஏதாவது கிரானைட் கல்லில் முட்டிக்கலாம்.
இங்கே,கருத்துகள் சொல்லியுள்ள மரியா,தன்கைராஜா,மற்றும் சொம்புகள் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தனும். கடந்த தி.மு.க ஆட்சியில் இந்த கிரானைட் கொள்ளையை பற்றி விசாரிக்க கேட்ட ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்கு என்ன நடந்தது? ஏன் கருணா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஜெயலலிதா கொடநாடு போனதை பற்றி நாளொரு அறிக்கையும்,பொழுதொரு பேட்டியும் கொடுத்த தி.மு.க.தலைவரும்,அவரது மகன்களும் ஏன் தமிழகத்தின் மிக பெரிய மோசடி பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்? கண்டிப்பாக தா.கி.வழக்கு போலவோ,தினகரன் வழக்கு போலவோ கண்டிப்பாக நடக்காது இந்த வழக்கு நடக்காது .......கண்டுபிடிகப்பட்ட கற்களின் எண்ணிக்கை 50 000 - தை தாண்டிஉள்ளது.இந்த தொழிலில் உள்ள தயாநிதியை கேட்டு பாருங்கள் கற்களின் தரம் பிரித்து அதன் விலை மதிப்பிட்டு,அதன் அளவுகள் மதிப்பிட பட வேண்டும்.அதன் பின்னரே முழுமையாக கைப்பற்ற பட்ட பொருட்களின் மதிப்பு தெரியும்.மேலும்,தயாநிதி,பழனிசாமி போன்றவர்கள் கற்கள் வெட்டப்பட்ட இடங்களை மண் போட்டு மூடி வைத்துள்ளார்கள்.அந்த இடங்கள் கண்டறியப்பட்டு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்ட அளவுகள் கணக்கிட்ட பின்னரே முழுமையான இழப்பிடு தெரியவரும்.தயவு செய்து சொம்புகள் அடக்கி வாசிக்கும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன்.................

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.