சென்னை:"இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, மத்திய ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு அளித்துள்ள பதிலால், தமிழகத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும், மத்திய அரசு காயப்படுத்தியுள்ளது' என, கருணாநிதி தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் பயிற்சி கொடுப்பது பற்றி தமிழகத்தின் சார்பில் முறையிடும் போதெல்லாம், அந்த ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், சில நாட்களுக்குப் பின் மீண்டும் பயிற்சி கொடுப்பதும் தொடர் கதையாக நீடிக்கிறது. இந்த போக்கை மத்திய அரசு இனியும் நீடிக்காமல், உடனடியாக இலங்கை அரசுடன் இந்த பயிற்சி குறித்தும், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கடுமையாகப் பேசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழக முதல்வரும், மத்திய அரசுக்கு இது குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கு முன், ஓரிரு முறை இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்தில் பயிற்சி அளித்த போது, அது பற்றி, தி.மு.க., ஆட்சியிலும், அ.தி.மு.க., ஆட்சியிலும் மத்திய அரசிடம் முறையிட்டதும், உடனடியாக அப்படி பயிற்சிக்கு வந்தவர்கள் தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஒருதலை நட்பு:
ஆனால், இப்போது அதற்கு மாறாக, மத்திய ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறும்போது, "இலங்கை நமது நட்பு நாடு. எனவே, இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம்' என கூறியிருக்கிறார். இந்த பதிலால், தமிழகத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும், மத்திய அரசு காயப்படுத்தியுள்ளது.இந்தியாவை விட, ஆறு மடங்கு அதிகமாக பல்வேறு உதவிகளை சீன நாடு, இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கிற நிலையில், இந்தியா எதை நம்பி இன்னமும், "இலங்கை நட்பு நாடு' என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ? இதை ஒரு தலை நட்பு என்று தான் சொல்ல முடியுமே தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான சுமுகமான நட்பு என்று எப்படி சொல்ல முடியும்?பிரதமர் உடனடியாக, இந்த பிரச்னையில் தலையிட்டு, ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும்.
மீண்டும், இப்படிப்பட்ட ராணுவ பயிற்சிகள் இலங்கை ராணுவத்தினருக்கு, இந்தியாவிலே அளிப்பதை உறுதியாகத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோ எச்சரிக்கை:
இலங்கை ராணு வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்போம் என, மத்திய அமைச்சர் ராஜு பேசியிருப்பது அவரது குரல் அல்ல. மன்மோகன் சிங், சோனியாவின் குரல். அவரது பேச்சு தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீ எப்படியோ போ நாங்கள் தமிழனே இல்லாத நாட்டில் தான் இந்த அறிக்கை விடுகிறோம் பராக் பராக் முபாராக் கதயெல்லாம் என்ன வாச்சு, இங்கு எவன் எடுத்தாலும் அறிக்கை போடுகிறான், தமிழ் மீனவர்கள் துரத்த படும் போது இலங்கை படையை திருப்பி விரட்டி பாடம் புகட்டுவோம் என்று சொல்ல வக்கில்லை. எதுகாபா உங்களுக்கு இந்த மாதிரி பதவி
யாருக்கு என்ன ஆனாலும் நாங்க எங்க பதவியை மத்தியில் விட மாட்டோம். எவன் எப்படி பேசினாலும் இவன் இப்படி பேசியும் நீ இப்படி தான் இருப்ப என்றாலும் நம்மவர்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம், ஒன்று நான் சொன்னாலும் அவுங்க வெளிய வரமாட்டாங்க. எதோ அறிக்கை மேல் அறிக்கை விட இப்படி எவனாவது எதையாவது பேசட்டுமே அவன் என்ன தமிழனா தமிழனுக்கு ஒரு மாநிலம் அவனுக்கோ தமிழனை கொன்றவனே நட்பு நாடு, தமிழன் எதை இழந்தாலும் மானத்தை இழக்க மாட்டான் நாம் மானத்தை விட்டாலும் சரி அவமானமே பட்டாலும் பதவி இழக்க மாட்டோம். மானத்தை விட பதவி முக்கியம். நம்ம அறிக்கை தான் மானத்திற்கு சட்ட போட மாதிரி, நம்மை பற்றி யாருமே தப்பா நினைக்க மாட்டாங்கோ
இலங்கை விசயமா கையைக் காலை ஒதைச்சுக்கினு,,,,, பொரண்டு பொரண்டு எத்தனை நாள் வேணா அழுது பொலம்பலாம் நைனா. சப்போர்ட்டை வாபஸ் வாங்கினாலும் மம்தா தீ முட்டுக் கொடுக்கும் ஆனா 2G கேசுல கதை கந்தலாயிடும் அது பெரியவருக்கும் தெரியும் மூக்கைச் சிந்திக்கினே,,,, கண்ணைத் தொடச்சுட்டுப் போய்க்கினே இருக்க சொல்லோ கில்லிதான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.