சென்னை:"தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், பயிற்சிக்கு வந்துள்ள இலங்கை ராணுவ வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதிஉள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில், நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில், இலங்கையைச் சேர்ந்த, இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு அளித்து வரும் ராணுவ பயிற்சியை, உடனே நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என, தங்களுக்கு கடந்த, 25ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்.என் வேண்டுகோளை புறக்கணிக்கும் வகையில், மத்திய அரசு வெளிப்படையாக, இலங்கை ஒரு நட்பு நாடு என்றும், அதன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசின் கொள்கைக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் துரோகம் விளைவிக்கும் வகையிலுள்ள, மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. நான் மீண்டும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது; எனவே உடனே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்போ திமுக ஆட்சியில் இருந்து, கருணாநிதி இது போல கடிதம் எழுதினால் நீங்கள் அவரை "மக்கள் இங்கு பெரும் அவதிக்கு உள்ளாகும் பொது, இங்கேயே உட்கார்ந்து கொண்டு மதிய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவியோ வேறு எதுவோ வேண்டும் என்றால் மட்டும் தில்லிக்கு நேராக செல்லுகிறார்" என்று கிழி கிழி என்று கிழிப்பீர்கள். ஏன், மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெறுவதற்கும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் ஒரு முறை தில்லி சென்று ஒரு வாங்கு வாங்கி விட்டு வாருங்களேன் பார்க்கலாம்.
ஆமாம் நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா? மறந்தே விட்டது. அடிக்கடி இதை போல எதையாவது எழுதி எங்களுக்கும் மத்திய அரசுக்கும் ""இங்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி"" நடக்கிறது என்பதை நியாபகபடுதுங்கள். அந்த பக்கம் கருணா இந்த இலங்கை விஷயத்தில் OVERDRIVE செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் சும்மா TYPE செய்யப்பட்ட கடிதத்தில் கையெழுத்து போட்டு அனுப்புகிறீர்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.