Sonia plan to convene UPA meet | எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிக்க சோனியா திட்டம்| Dinamalar

எதிர்க்கட்சிகளின் சவாலை முறியடிக்க சோனியா திட்டம்

Updated : செப் 03, 2012 | Added : செப் 01, 2012 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னையில், பார்லி மென்டை நடத்த விடாமல், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதால், ஐ.மு., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா திட்டமிட்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் முலாயம் சிங்கின் கோரிக்கை உட்பட, பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்க தீர்மானித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,), சமர்ப்பித்த அறிக்கை, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னையை தீவிரமாக கிளப்பி, எட்டு நாட்களுக்கு மேலாக பார்லிமென்டை முடக்கி யுள்ளது, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா. "சுரங்க ஒதுக்கீடு ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும் வரை, பார்லிமென்டை நடத்த விட மாட்டோம்' என்றும் கூறி வருகிறது. வரும், 8ம் தேதி, நாடு தழுவிய அளவில் போராட்டத்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், "சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான குழுவை நியமித்து, விசாரிக்க வேண்டும்' என, கோரி வருகிறார். அவரின் கோரிக்கைக்கு இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், மிகுந்த தர்ம சங்கடத்தில் உள்ளார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா. இனி வரும் நாட்களிலும், பார்லிமென்டை தொடர்ந்து முடக்கினால், அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவே அமையும், காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி விடும் என, நம்புகிறார். எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார். அப்போது, "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான குழு மூலம், நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்ற முலாயம் சிங்கின், கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவெடுக்கவும், எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தை முறியடிக்கத் தேவையான செயல்திட்டம் குறித்தும் ஆலோசிக்க உள்ளார். மேலும், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பின், மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். அப்போது, கூட்டணி கட்சிகளுக்கு, சில அமைச்சர் பதவிகளை வழங்குவதன் மூலம், அவர்களை திருப்திபடுத்தலாம் என, சோனியா நம்புகிறார். எனவே, அது தொடர்பான சில யோசனைகளையும், கூட்டணி கட்சிகளிடம் அவர் கேட்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
03-செப்-201201:45:09 IST Report Abuse
Madukkur S M Sajahan எதிர் கட்சிகளின் போராட்டத்தை முறியடித்து எதிர் கட்சியின் உறுபினர்களை அவை நடவடிக்கைகளில் பங்கடுக்க வைக்க தினமும் அவையில் (அந்த காலம் போல) சினிமா நட்ச்சத்திரங்களை கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தலாம்,அடுத்த தேர்தலில் அவர்கள் எந்த கட்சியில் நின்றாலும் சிலவுக்கு பணம் தருவோம் என சொல்லலாம்.இப்படி பல யோசனைகளை என்னிடம் உள்ளது யாராவது சோனியாவிடம் சொல்லி என்னை காண்டக்ட் பண்ண சொல்லுங்க.ஆலோசனை அள்ளிவிடப்படும் .
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
02-செப்-201219:59:46 IST Report Abuse
Ramesh Rajendiran டெல்லியில் கூடும் MP க்கள் என்ன சொன்னாலும், மக்கள், குறிப்பாக எல்லா மாநில காங்காரர்கள் தங்களுக்கு பங்கு வரவில்லை என்றால் வேலை செய்ய போவது இல்லை , இந்த முறை ஒரு பங்கு 1 கோடியை தாண்டினாலும் ஆச்சரிய பட வேண்டியதில்லை. காங் செய்யுமா ????
Rate this:
Share this comment
Cancel
Moorthi - Nellai,இந்தியா
02-செப்-201212:55:59 IST Report Abuse
Moorthi யார் என்ன சொன்னாலும், எது எப்படி இருந்தாலும் மீண்டும் 2014 ஆட்சி அமைக்க போவது காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாம் அணி, முலாயம் பிரதமராக இருப்பார், இது தான் நடக்க இருக்கிறது, இங்கு பிஜேபி ஆட்சிக்கு வரும் என்பதை யாரும் கனவிலும் நினைக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
02-செப்-201213:37:54 IST Report Abuse
villupuram jeevithanஜோசியர் சரியாத் தான் சொல்லி இருக்கார்....
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
02-செப்-201212:52:27 IST Report Abuse
periya gundoosi நாடு என்னடா நம்பாரதம், பணம் தானடா நிரந்தரம், காங்கிரஸில் இல்லாததா, கூட்டணி தலைவனிடம் இல்லாததா, நாட்டின் மதிப்பை இழக்க நினைக்கும் பணம், பணம், பணம் ஆ....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-செப்-201212:22:06 IST Report Abuse
Kasimani Baskaran திட்டமும் தேவை இல்லை ஒரு மண்ணும் தேவை இல்லை - பெட்டி போதும். பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-செப்-201209:51:50 IST Report Abuse
g.s,rajan ஆமாம் பாராளு மன்றத்தை இது வரை நடத்தி என்ன பெறுசா கிழிச்சுடீங்க,இனிமே என்னத்தை கிழிக்கப்போறீங்க ?ஏற்றிய எரிபொருள் விலையை குறைக்க போறீங்களா ?இல்லை விலை வாசியை பெரிய அளவுல குறைச்சு மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த போறீங்களா என்ன ?ஒன்றும் இல்லை அதனால் பாராளுமன்றம் நடந்தாலும் ஒன்றுதான், நடக்காவிட்டாலும் ஒன்றுதான். வெட்டியாக ஆட்சிக் காலத்தை கடத்துவதில், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதில் என்ன பயன்? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
02-செப்-201207:19:05 IST Report Abuse
villupuram jeevithan இவ்வளவு ஊழல் வெளிவந்த பிறகும், உங்களுடன் கூட்டணி அமைக்க தமிழக கட்சிகள் உட்பட பலகட்சிகள் போட்டியிடும்போது உங்களுக்கு கொண்டாட்டம் தானே? ?
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
02-செப்-201205:28:29 IST Report Abuse
Pannadai Pandian ஊழலுக்கு எதிராக முதலாக குரல் கொடுக்கும் தோழர்கள், தங்களின் வலிமை கேரளம், திரிபுரா, மேற்கு வங்கத்தில் குன்றிவிட்டதாலும், மம்தாவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் காங்கிரசின் சூழ்ச்சிக்கு அடி பணிந்து விட்டனர். இதன் மூலம் கம்யுனிஸ்டுகளும் அரசியலில் லாப கண்ணோடு மக்கள் தொண்டு செய்கிறார்களே அன்றி அவர்களுக்கும் 180000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறதே என்று கவலை இல்லை. முலாயம் சிங் சரியான நரி. முலாயம், லாலு, மாயாவதி போன்ற வட இந்திய அரசியல் கட்சிகளின் பாலிடிக்ஸ் ரொம்ப டீப் அதன் அடியில் இருப்பது சேரும் சகதியும் விஷ வாயுவும் தான். யாராவது மாட்டிக்கொண்டால் திரும்ப உயிருடன் வர முடியாது. இவர்களை நம்புவர்கள் கண்டிப்பாக ஏமாற்றப்படுவர் என்பதை முன்பு மம்தா உணர்ந்து கொண்டார் தற்போது சந்திர பாபு நாயிடு அறிந்து கொண்டார். முலாயம் ஒரு காங்கிரஸ் ஏஜன்ட் அவரின் ஊழல் ரெகார்ட் சிபிஐ வசம். அவரும் மாயாவதியும் ஒருகாலும் காங்கிரசுக்கு எதிராக திரும்ப மாட்டார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து சிறு பல உதவிகளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிடம் பெற்று மிகப்பெரிய திருட்டை மறைக்க பார்க்கிறார்கள். ஏலம் விடப்பட்டதை திரும்ப வாபஸ் பெற்றாலே ஓரளவுக்கு நஷ்டத்தை சரி கட்டலாம். ஆனால் சோனியாவின் திட்டமோ தங்கள் கட்சிக்கும் மொய் அளக்கும் GMR, அம்பானிகளை விட்டு விட்டு மற்ற சோப்லாங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட சுரங்கங்களை வாபஸ் பெறுவதே. இதுவும் 2G இல் நடந்த அதே டெக்னிக். நம் வாய் மூடி ஒற்றன் மண்ணு மூட்டையோ பதவி ஒன்றே பிரதானம், நாடு எக்கேடு கெட்டால் என்ன, சிறிது காலத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிடலாம், அதுவரை ஜமாய்க்கலாம் என்ற கீழ்த்தரமான புத்தியில் இன்னும் பதவியில் ஓட்டிக்கொண்டிருக்கிறார். மொத்தத்தில் இந்திய குடிமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நமது அரசியல், தக்ஸ் (THUGS) நிறைந்த கூட்டம். அவர்கள் எல்லோரையும் கபளீகரம் செய்வார்கள். வாயில் ஸ்வீட் பேச்சு கையில் இருப்பதோ முடிச்சுகள் போடப்பட்ட கயிறு. அதை கழுத்தில் போட்டு இருக்க எந்நேரமும் தயாராய் இருப்பார்கள். இவர்களை ஒழித்து கட்ட ஒரு பெண்டிங் பிரபு (LORD WILLIAM BENTINCH) எப்போது இந்திய அரசியல் வானில் உதிப்பாரோ தெரியவில்லை
Rate this:
Share this comment
anand - Thanjavur,சவுதி அரேபியா
02-செப்-201221:35:56 IST Report Abuse
anandஅந்த பெண்டிங் பிரபு நிச்சயமாக மோடிதான், இது காலத்தின் கட்டாயம்...
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
02-செப்-201204:01:32 IST Report Abuse
வைகை செல்வன் முறியடிப்பீங்கலோ.. உரியடிப்பீங்களோ.. 2014 -இல் மக்கள் உங்களுக்கு .......... அடிக்க தயார்...
Rate this:
Share this comment
Sundar Rajan - chennai,இந்தியா
02-செப்-201218:39:40 IST Report Abuse
Sundar Rajanஆப்பூ ...
Rate this:
Share this comment
Cancel
thala - madurai,இந்தியா
02-செப்-201201:32:29 IST Report Abuse
thala ஏழைகளின் குடிசை வீடு ஓட்டு வீடாக மாறும் திட்டம் ன்னு சொன்னீரே அந்த திட்டத்த மறந்துட்டு இப்போ என்ன ..?. ஏழைகளுக்கு குடிசைகளே இல்லை பின்பு எது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை