புதுடில்லி: மொபைல் போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, பத்தில் ஒரு பங்காக இன்று முதல் குறைகிறது. மேலும், மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சையும் குறைக்கும்படி தயாரிப்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய தொலைத்தொடர்பு துறையின் அதிரடி உத்தரவை அடுத்து, இக்கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இது குறித்து, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: மொபைல் போன் கோபுரத்துக்கும், அருகே அமையும் வீட்டிற்கும் இடையே, குறைந்த பட்சம், 35 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இவற்றில் இருந்து தற்போது வெளியாகும் கதிர்வீச்சு அளவில், பத்தில் ஒரு பங்கு இனி குறைக்கப்படும். நாடு முழுவதும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மொபைல் போன் கோபுரங்கள் உள்ளன. அவை அனைத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். மொபைல் போன் கோபுரங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மொபைல் போன் அலை அதிர்வால், மனித திசுக்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்ப மாற்றம் அவசியம் என்பதால் இன்று முதல் இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. "புளுடூத்' மற்றும் ஒயருடன் கூடிய, "ஹெட்செட்'களை பயன்படுத்துவதன் மூலம், மொபைல் போன் கதிர்வீச்சில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. மொபைல் போன் பேச்சை பொது மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். மாறாக, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கலாம் என்ற ஆலோசனையையும் அரசு தந்துள்ளது. மாடி வீடுகளின் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட, "ஆன்டெனா'க்களுடன் கோபுரங்கள் அமைக்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கண்ணுக்கு தெரியும் 2G, நிலகரி ஏலம் விடும்போது ஊழல் நடக்கிறது. அதை கேட்க நாதியில்லை. இது கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சு. அதை கட்டுபாட்டில் வைக்க நடவடிக்கை என்று சொன்னவுடன், ஒரு நாள், அல்லது சில நாள் கட்டுபாட்டில் இருக்கும். பின்னர் யார் அதை லஞ்சம் வாங்காமல் கண்காணித்து, மக்களுக்கு நல்லது செய்றது.. இது சாத்தியமா? ஒரே வழி ஒவ்வொரு மொபைலிலும் எவ்வளவு Strength யில் Signal இருக்கிறது, எவ்வளவு Radiation அந்த சமயத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, மென் பொருள் வேண்டும், அது குறிப்பிட்ட அளவை தாண்டினால், அரசாங்கத்திற்கு அதை அப்படியே SMS செய்ய வசதி வேண்டும். ஒரு Apple App or Android App or Microsoft Software கூட அரசு தயாரிக்க உத்தரவிடலாம். இப்படி எல்லாம் செய்ய மனதில்லையா, native solution - ஒவ்வொரு டவரிலும் Blue LED பொறுத்த வேண்டும். அதிக Radiation வரும் நேரத்தில், அந்த LED மினுங்க வேண்டும், அதை மக்கள் பார்த்து புகார் செய்யலாம். Blue LED ஏன் என்றால், Red Light யின் Wavelength அதிகம். வானில் பறக்கும் விமானங்கள், சிகப்பு LED யை கண்டு குழப்பம் அடையலாம். இதை அரசு கவனித்தால், இந்திய உயிரினங்களுக்கு நல்லது.
Krish, This is a very good suggestion. So that they can come up with BLUE LED SCANDAL. OK, what is the share for each parties: Party1-95%, Party2- .05%, Party3 - 0.00005%, Party4- 1%, Party5-2%, sorry while sharing the scandal, there is a scandal in scandal so....
Current successfully running SCANDAL projects in India: (State projects, National Projects, International Projects):
Because of the following projects, EXCEPT PUBLIC, all the politicians and their families are able to run their lives for another 100 years, these projects will run in the court for another 100 years.
List of INDIAN SCANDAL Project:
1 or 2 years ago the Rocket sent from research centre straightaway went into sea, later found many people involved in that because of some scandal- sorry I couldnt sp time to LEARN much about this project :)
COAL
GRANITE
SWISS BANK ACCOUNT - Source for the project fund
SAND
EEMU FARM
ELECTRICITY
WATER
URINE
TOILET
TREE
STONE
GRASS
PHONE
2G
SCHOOL
COLLEGE
COMPUTER
MOBILE
PAPER
EMPLOYMENT
PENCIL
RICE
EXPORT
IMPORT
FOOD
DOOR
WINDOW
CHAIR
ROAD
LORRY
BUS
AUTO
........
...............
....................
கிரீஸ், Radiation அளவை கணக்கிட கையடக்க உபகரணங்கள் ஏற்கனவே கடைகளில் கிடைகிறது, அரசு சட்ட பூர்வமாக கதிரியத்தைநிர்ணயித்த பின், யாரேனும் அதை மீறுவதை உங்களின் ஆய்வு மூலம் அறிந்தால் அதை ஆதாரமாக்கி அதற்க்கு அந்த நேரத்தில் சில நேரிடை சாட்சிகளை உருவாக்கி அதன் பேரில் நீங்கள் வழக்கு தொடரலாமே, எல்லாவற்றையும் அரசே செய்யவேண்டும் என்றால் என்ன அர்த்தம், மக்களுக்கு நாட்டில் பொறுப்புணர்வு இருக்கவேண்டுமே தவிர, சும்மா குறை மட்டும் சொல்ல கூடாது,...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.