சென்னை: "தானே' புயலால் வீடுகளை இழந்த, ஒரு லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தர, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த, 2011ல், தமிழகத்தை தாக்கிய, "தானே' புயலால், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கட்டமைப்புகள், பயிர்கள், வீடுகள், படகுகள் பலத்த சேதமடைந்தன. "புயலால் வீடு இழந்த மக்களின் துயர் துடைக்கும் வகையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், கடலூர் மாவட்டத்தில், 90 ஆயிரம்; விழுப்புரத்தில், 10 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்ட, 1,000 கோடி ரூபாயை, முதல்வர் தற்போது ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு வீடும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 200 சதுரடி அளவில் கட்டப்படும். குடியிருக்கும் அறை, சமையலறை மற்றும் கழிவறை வசதிகள் கொண்டதாக, வீடு அமைந்து இருக்கும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
200 சதுர அடிக்கு 1,00,000 Rs, அதாவது சதுர அடிக்கு 500 Rs, பார்த்து கொள்ளுங்கள், கமிசன் போக எவ்வளவு அந்த வீட்டிற்கு போய் சேரும். இப்போது சாதாரண சிமெண்ட் தரை தளதிற்கு, தரம் குறைந்த கலவைக்கே சதுர அடிக்கு (புறநகர் மற்றும் கிராம பகுதிக்கு மட்டுமே இந்த கணக்கு) 1000 Rs ஆகிறது, இந்நிலையில் 500 ரூபாயில் கமிசன் போக 300 ரூபாய் போட்டு வீடு கட்டினால் வீடு எந்த நிலையில் இருக்கும், இது வெறும் ரத்தத்தின் ரத்தங்கள் கொள்ளை அடிக்கவே உருவாக்கப்பட்ட திட்டம்.
ஜெயலலிதாவின் ஆட்சி நடை பெற்ற பல இயற்கை சீரழிவுகளுக்கு எப்பொழுதும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை போதுமான நிதி உதவி கிடைத்ததில்லை ,இனியும் கிடைக்குமா சந்தேகமே தமிழக மக்களுக்கு போதிய நிதி உதவி கிடைக்கக்கூடாது என்று மத்தியில் இருந்து கொண்டு தடுப்பதும் ,கொடுக்க விடாமல் சதி செய்வதும் சில புல்லுருவிகளின் முக்கிய வேலையாக உள்ளது . தமிழனே தமிழனுக்கு எதிரியாக செயல்படுவது தெள்ளத் தெளிவு மத்திய அரசு தமிழக மக்களிடம் இருந்து நேரடியாகவும் ,மறைமுகவாகவும் பல வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை வரிகள் மூலம் வசூலிக்கிறது ,ஆனால் தமிழக மக்களுக்கு உரிய நிவாரணத்தை தராமல் வெறும் வேடிக்கை பார்த்து வருகிறது .சுனாமி ,வரலாறு காணாத வறட்சி ,வெள்ளம் ,தானே புயல் மூலம் பெருத்த சேதம் ஏற்பட்ட போதிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவவில்லை .பின் மத்திய அரசு எதற்கு இருக்கிறது ?மாநில அரசே எல்லாவற்றையும் கவனித்து கொள்ளவேண்டும் என்றால் மத்திய அரசு இருந்து என்ன பயன் ? எதற்காக உதவி செய்யாத மத்திய அரசுக்கு மாநில மக்கள் வரி செலுத்த வேண்டும் ? ,
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
வெளிப்படையான,நேர்மையான .முறைகேடு இல்லாமல்,கழகங்களின் தலையீடு இல்லாமல்,இந்த வீடுகள் தரமுடன் கட்டப்பட வேண்டும்....அவ்வாறு செய்தால் உண்மையாலுமே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெறுவார்.....ஊழல்,கமிஷன்,முறைகேடு போன்றவற்றை கொள்கையாக கொண்டுள்ள உள்ளூர் காண்ட்ராக்டர்களிடம் இந்தப்பணியை தராமல் எல்.& டி போன்ற நல்ல தரமான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கொடுத்தால் பணி குறிப்பிட்ட காலத்தோடு முடிவதுடன் தரமாகவும் இருக்கும்.....
இங்கே கருத்துரைத்த திமுகவின் அல்லகைகள் கணக்கு போடுவதை பாருங்கள்..அப்படியே அவர்கள் தலைமையை போலவே "சுருட்டல்" கணக்கைத்தான் எண்ணுகின்றனர். 1000 வீடுகள் கட்டப்படுவதை எண்ணிக்கையில் குறைத்து காட்ட முடியுமா? ஒவ்வோர் வீட்டிற்கும் ஆகும் செலவை குறைக்க முடியுமா? அப்படி இருக்கையில் இவர்கள் எண்ணம் பாருங்கள்..தவறான கட்சியில் கீழ்த்தரமான தொண்டர்கள்..திமுகவின் ஆட்சியில் வேண்டுமானால் பாலம் கட்டாமலேயே..பாலம் கட்டியதாய் சொல்லி பணம் பட்டுவாடா செய்த கதையும்..ரோடு போடாமலேயே போட்டதாய் பணத்தை சுருட்டிய கதையும்..ஆட்களே இல்லை..வேலைக்கு வந்ததாய் கதை அளந்த "மஸ்டர்ரோல்" செய்திகளும் இவர்களின் சுயரூபத்தை காட்டியது. அதே நிலை இன்னமும் மாறவில்லை..ஒரு தலைமுறை தொண்டர்கள் ஓய்ந்து ஓரம் கட்டியதும்..புதிய தலைமுறை திமுக தொண்டர்களின் எண்ணத்தையும் பாருங்கள்...ஒ..ஒ..இப்போது இவர்கள் விஞ்ஞான ஊழல் செய்துவரும் விஞ்ஞானிகள் அல்லவா? அம்மாவின் திட்டம் அற்புதமான திட்டம்..ஒவ்வோர் ஏழையும் வரவேற்கும் மனம் குளிர்ந்து வாழ்த்தும் திட்டம்..காங்க்ரிட் வீட்டு கனவு திட்டம் மெய்ப்பிக்க இருப்பது அவர்கள் வாழ்வில் குதூகலிக்கும். நெஞ்சம் நிறைய வாழ்த்தினை பெரும் மாபெரும் திட்டம். எல்லா புகழும் அம்மாவிற்கே..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.