பூமியை பிரிந்த நிலா மனிதன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

" நிலா, நிலா, ஓடி வா... நில்லாமல் ஓடி வா...' என நாம் பாட்டு பாடிக்கொண்டிருந்த நேரத்தில், நிலவில் நடந்து, உலகையே வியக்க வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். 1930 ஆக., 5ம் நாள் அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். தனது 6ம் வயதிலேயே முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். கார் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே, "பைலட்' உரிமம் பெற்றவர். தொடர்ந்து "கடற்படை பைலட்' உரிமமும் பெற்றார். 1950ல் கொரிய போரின் போது, அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக பணியாற்றினார். 1955ல் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1958ல் நாசாவின் "விமானவியல் ஆலோசனை குழு'வில் சேர்ந்தார். உலகின் சிறந்த "சோதனை விமானி,' என பெயர் பெற்றார்.

நிலவில் மனிதன்: முதலில் நிலவில் மனிதனை இறக்குவது யார் என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போட்டி இருந்தது. இந்நிலையில், "அப்போலோ' என்ற விண்கலத்தை அமெரிக்கா தயாரித்து, அதில் பயணம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கை தேர்வு செய்தது. 1969, ஜூலை 16ம் தேதி நிலவுக்கு "அப்போலோ' பயணமானது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் கொலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய வீரர்கள் பயணமாகினர். நான்கு நாட்கள் பயணம் செய்து, ஜூலை 20ம் நாள் இரவு 8.17 மணிக்கு நிலவில் விண்கலம் இறங்கியது. விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதல் காலடி வைத்தார், நீல் ஆம்ஸ்ட்ராங். 20 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது, ஆம்ஸ்ட்ராங், ""மனிதனுக்கு இது சிறிய காலடி; மனித இனத்துக்கு மிகப்பெரிய பாய்ச்சல்'' எனக் குறிப்பிட்டார். இந்த வாசகம், பிற்காலத்தில் பிரபலம் அடைந்தது. தொடந்து பாறைகளை புகைப்படம் எடுத்தனர். பாறைகளின் மாதிரிகளை சேகரித்தனர். நிலவில் 2 மணி 32 நிமிடங்கள் இருந்த ஆம்ஸ்ட்ராங், சாதனையின் அடையாளமாக, அமெரிக்க தேசியக் கொடியையும் நட்டு வைத்தார்.

பூமி திரும்பிய ஆம்ஸ்ட்ராங், பேட்டி அளிக்கும்போது, ""நிலவில் நடந்தது, குழந்தை தவழ்வது போன்று இருந்தது,'' என்றார். ஆல்ட்ரின் கூறுகையில், ""நிலவில் இருந்தது பெரிய நிகழ்வாகவும், பெருமைக்குரிய தருணமாகவும் இருந்தது,'' என்றார். தொடர்ந்து, நாசாவில் ஆராய்ச்சி பிரிவில் ஆலோசகராக பணியாற்றினார். பின் நாசாவிலிருந்து விலகி சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அனைத்து நாட்டு மக்களையும் கவர்ந்த "நிலா மனிதன்' ஆர்ம்ஸ்ட்ராங், ஆக.25ம் தேதி, 82வது வயதில் இறந்தார். இவரது பிரிவு, மனித இனத்துக்கு பேரிழப்பு தான்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
02-செப்-201222:15:51 IST Report Abuse
babu அவர் ஆர்ம்ஸ் ஸ்ட்ராங் தான், மன உறுதி மிக்கவர்., தனியாக இருட்டுக்குள் போகவே திக் திக் திரும்பி வருமா வராதா பயம் இல்லாமல் முதலில் இறங்கி விடுவோம் என்று விழுந்தாலும் இருபது நிமிடங்கள் கழித்து நிலாவுக்கு படி இறங்கி ஒரு அடி கீழே வைத்தது மனித சமுதாயம் மட்டுமல்ல உலகமே எண்ணிய பல கட்டு கதைகளின் உடைத்தெறிந்து ஜீவ ராசிகள் அனைத்தும் இப்படியும் உண்டு, என்று கண் சிமிட்டும் நேரம், நியூட்டன் புவீர்ப்பு சக்தி கொண்டது. விசுவாமித்திரன் திரிசங்குவை புதிய உலகத்துக்கு தூக்கி எறிந்தான், அந்த கதையிலும் திரிசங்கு கீழே ஒரு முறை விழுந்தான். இந்திரன் திருப்பி தாக்கியதால், கதைக்கு அர்த்தம் பல உண்டு, அது தாங்கி நிறுக்கும் கருதும் பலமாக உள்ளது, எல்லாமே கதை என நம்பி இருந்த நாம் எதற்கும் வழி இருந்தால் மார்க்கம் உண்டு என்று நம்பி தான் ஆக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
kalavathi - doha,கத்தார்
02-செப்-201216:05:30 IST Report Abuse
kalavathi கிரேட் man
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்