அறிமுகம் இருந்தால் தான்...:
அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருப்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இங்கு, அலுவலக மேலாளர் தவிர, கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தனி அறைகள் உள்ளன. மாநில நிர்வாகிகளை, தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் மட்டுமே, அவர்களைச் சந்திக்கின்றனர். மற்றவர்கள், அலுவலக மேலாளரைச் சந்திக்கின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு உதவி வேண்டும்; ஊரில் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளுடன், இங்கு தொண்டர்கள் வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் மீது, சிலர் புகார்களையும் கொண்டு வருகின்றனர். மருத்துவ உதவி, ஊர்ப் பிரச்னைகள் குறித்து, மாவட்டச் செயலர்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலோடு வரும் கடிதங்களை ஏற்றுக் கொண்டு, அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம், அலுவலக மேலாளர் அனுப்புகிறார். இல்லாவிட்டால், "மாவட்டச் செயலரை பாருங்கள்' என திருப்பிகம்பெனி போல...:
தி.மு.க., அலுவலகமான, அறிவாலயத்தில் கட்சித் தலைவர் கருணாநிதியை, "மரியாதை நிமித்தமாக பார்க்கிறேன்' என்ற பெயரில் பலர் வருகின்றனர். அவர்களின் விவரங்களைக் கேட்டபின், மிகுந்த கட்டுப்பாடுகளுக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர். புகார்கள், உதவி தேவை என வருவோரிடம், கட்சி அலுவலக நிர்வாகிகள், மனுக்களைப் பெற்றுக் கொள்கின்றனர். கருணாநிதி அறிவாலயம் வரும்போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள், உடன் இருப்பதால், அவர்களைத் தாண்டித் தான், அவரைச் சந்திக்க முடியும். மிக முக்கியம் என, அலுவலக நிர்வாகிகள் கருதினால் தான், அந்த கோரிக்கைகள், தலைமைக்கு செல்கின்றன. தனியார் நிறுவனம் போல, கட்சி அலுவலகம் இயங்குவதாகக் கூறும் தி.மு.க.,வினர், வசதியுள்ள நிர்வாகிகளுக்கு மட்டும்தான், எப்போதும் மரியாதை கிடைக்கிறது என்கின்றனர். மத்தியில் ஆட்சியில் உள்ளதால், காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வரும் தொண்டர்கள், வங்கிக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கு உதவிகேட்டு வருகின்றனர். மாநிலத் தலைவர் வெளியூர் சென்றுவிட்டால், அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். கட்சி தலைவர் ஞானதேசிகன் அலுவலகத்தில் இருந்தாலோ, இதர கோஷ்டி தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தால் மட்டுமே கலகலப்பாய் இருக்கிறது காங்கிரஸ் அலுவலகம்.வாயிற்கதவில் நிறுத்தி...:
கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில், சென்னையில் இருக்கும் நாட்களில், காலை, 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை, கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த். முன்பெல்லாம், மற்ற நிர்வாகிகள் மீது, புகார் கொடுக்கவரும் கட்சியினர், வாயிற்கதவிற்கு வெளியே நிறுத்தப்பட்டு அலைகழிக்கப்படுவர். இப்போது, இதுபோன்று வரும் கட்சியினரை சந்தித்து புகார்களை பெறுவதற்காக, மாநில நிர்வாகிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், முன்பைபோல தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டமும் அதிகம் வராததால், வெறிச்சோடியே காணப்படுகிறது. வேலையோ, உதவியோ கேட்டு வருபவர்கள் யாரையும், ம.தி.மு.க., வின் தலைமை அலுவலகத்தில், பார்க்க முடிவதில்லை. கட்சிப் பிரச்னைகள் மற்றும் கட்சி செயல்பாடுகளுக்கு அனுமதி கேட்டுத் தான் பெரும்பாலானவர்கள் வருகின்றனர். மத்திய, மாநில ஆட்சிகளில் எந்த அங்கமும் இல்லாமல் இருப்பதால், "தாயகம்' வரும் கட்சித் தொண்டர்கள் மிகக் குறைவாக உள்ளனர்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அண்ணா அறிவாலயம் நல்ல இடத்தில் உள்ளது.இங்கு சரவணா பவன் ஓட்டலோ அல்லது குழந்தைகளுக்கு ஒரு மருத்துவ மனையோ அல்லது ஆண் பெண் இருவருக்குமான சலூனோ திறந்தால் நன்றாக இருக்கும்.இதை ஒன்று அவர்களே செய்ய வேண்டும்.அல்லது அரசு செய்ய வேண்டும்.மேலும் அண்ணா சாலையில் நல்ல கழிப்பறை கிடையாது நவீன மயமாக்கப் பட்ட கழிப்பறைகளை கட்டியானால் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.