பெட்ரோல், டீசல், காஸ் விலை செப்.7க்கு பிறகு உயர்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "மானியம் அளிக்க, எங்களிடம், போதிய நிதி இல்லை' என, நிதி அமைச்சகம் கை விரித்து விட்டதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை, வரும் 7ம் தேதிக்கு பிறகு அதிகரிக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே அனுமதி வழங்கியது. இதனால், அவ்வப்போது, பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள், மாற்றி அமைக்கின்றன. அதே நேரத்தில், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு மீதான அரசின், விலை கட்டுப்பாடு தொடர்கிறது. இதனால், இவற்றை, அடக்க விலைக்கு குறைவாகவே, எண்ணெய் நிறுவனங்கள், விற்பனை செய்து வருகின்றன. கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய, 32 ஆயிரத்து 750 கோடி ரூபாயை, ரொக்க மானியமாக வழங்கும்படி, மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், நிதி அமைச்சகம், கைவிரித்து விட்டது. இதனால், பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆளாகியுள்ளன. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும், 7ம் தேதியுடன் முடிவடைவதால், இதற்கு பின், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sarath - KL,மலேஷியா
05-செப்-201214:09:14 IST Report Abuse
sarath If you can revert the 1.86 lac cr and 1.76 lac cr from Cole and Spectrum, you can able to give Free petrol, Diesel & Gas to Entire India for another 20 years.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
05-செப்-201213:44:26 IST Report Abuse
K.Sugavanam எத்தரதுன்னு முடிவு எடுத்தாச்சு,அப்புறம் எதுக்கு 7 ஆம் தேதிவரை?ஏத்துங்க உடனே..
Rate this:
Share this comment
Cancel
geesenthil2000 - Bangalore,இந்தியா
05-செப்-201212:06:23 IST Report Abuse
geesenthil2000 சொலுறது சாரே இந்திய வாழ்கை கோவிந்தா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
05-செப்-201211:14:35 IST Report Abuse
மணிமேகலை  மக்கள் புரட்சி வெடிக்கும் ...................இந்திய சிதறும் .................இது நடக்கும் ...........
Rate this:
Share this comment
Cancel
Pakanati ramesh - chennai,இந்தியா
05-செப்-201211:08:50 IST Report Abuse
Pakanati ramesh நிலக்கரி வூழல், ஆதர்ஷ் வூழல், 2G spectrum வூழல், போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப இதுமாதிர் அன்பளிப்புகளை மத்ய அரசு அள்ளிக்கொடுக்கிறது. அந்த நயவஞ்சகர்கள் செய்த வூழல்களை மறைக்க பொதுமக்களுக்கு தண்டனை. இந்திய மக்களே, தேவைதான இந்த அன்பளிப்புகள்? அடுத்தமுறை வாக்களிக்கும்போது இதுபோன்ற அன்பளிப்புகள் நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் வாக்களியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
05-செப்-201211:08:14 IST Report Abuse
christ நாட்டு மக்களை அரசாங்கம் எங்க அழைத்து செல்கிறது ?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
05-செப்-201211:01:53 IST Report Abuse
rajan ஏத்துங்கோ பெட்ரோல் டிசல் எது எடுத்தாலும் லிட்டருக்கு 100 ருபைனு காஸ் ௧௦௦௦.. கூடவே இந்த டக்ஸ்ம் மறக்காம ஏத்துங்க. நிதி அமைச்சகம் பணம் இல்லாம் அல்லாடுது. சீமான் கஷ்டத்த போக்குங்க. அவரும் பாவம் நாட்டுக்காக உலகம் பூர இங்கிலிஸ் பேசி கடன வாங்கி கொட்டிட்டறு. இவரு காலத்தில நாடு திவாலான பரிகாரம் தேடி அலைவாருல
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
05-செப்-201210:57:45 IST Report Abuse
மணிமேகலை  நாட்டை அழிக்காம விடமாட்டங்க போலிருக்கு .
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
05-செப்-201210:55:44 IST Report Abuse
மணிமேகலை  இதை சொல்வதற்க்க பொருளாதார மேதையை உக்காரவச்சாங்க ............................இதுக்கு நரசிம்ம ராவே பரவாஇல்ல ..................இல்லன தேவகௌட கூட தேவலாம் ....................அட தேவுடா.
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
05-செப்-201210:52:28 IST Report Abuse
மணிமேகலை  2g , நிலக்கரி , பணம்மெல்லாம் ச்விச்ஸ் பாங்க்ல இருக்கு ................இப்ப எங்ககிட்ட பணம் இல்ல .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்