தேனி: தேனியில் நாள் வாடகைக்கு மொபைல் போன் வாங்கி, அதில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம், பள்ளி மாணவர்களிடம் பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் பல பள்ளிகளில், ஆபாச படத்துடன் கூடிய வாடகை மொபைல் போனுடன் மாணவர்கள் வலம் வருகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவனிடம் விலை உயர்ந்த மொபைல் போன் இருந்தது. ஏழ்மையில் இருக்கும் மாணவனிடம், எப்படி விலை உயர்ந்த மொபைல் போன் இருக்கும், என ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது, அதே மொபைல் போன் வேறு வகுப்பில் உள்ள மற்றொரு மாணவரிடம் இருந்தது. அதை பறிமுதல் செய்த ஆசிரியர், மாணவரிடம் அன்பாக விசாரித்து, சோதனை செய்த போது,பல ஆபாச வீடியோ படங்கள் இருந்தது.
இந்த மொபைல் போனை ஐ.டி.ஐ., மாணவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. இதை மாணவர்கள் போட்டி போட்டு, நாள் வாடகைக்கு வாங்கி படம் பார்த்து வரும் விவரம் தெரியவந்தது. இந்த கலாச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது என்பது கூடுதல் தகவல். மாணவர்களின் இந்த மொபைல் போன் ஆபாச படம் பார்க்கும் மோகத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணித்து, அவர்களை விளையாட்டு, படிப்பு என நல்வழிபடுத்த வேண்டும். மொபைல் போனில் ஆபாச படம் பதிந்து கொடுக்கும், கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலை நாட்டு கலாசாரம், தமிழ்நாட்டுக்கு தேவையா....அங்கு தான் சிறு பிள்ளைகளுக்கு, விளையாட்டு சாதனம் வாங்கி தருவது போல் , pc,laptop, t அப்படின்னு வாங்கி தராங்க...,அதனால சின்னதுலையே... கர்ப்பம் ஆகறதும், டேட்டிங் போகறதும், டிஸ்கொத் போறதும் சகஜமா வைத்திருக்கிறார்கள்...நம் நாடு உலளவில் அநேகருக்கு பிடிப்பதன் காரணம்.. மேலை நாட்டு கலாச்சாரத்திலிருந்து, நம் நாட்டு மக்கள் வேருபட்டிருப்ப்பதால் தான்.. ..
இப்படி பெற்றோர்கள் செல்போன் சாதனங்களையும், அதை விட நம்ம அருமை அரசாங்கம்..இலவச மடிகணினியையும்....கொடுப்பதால் குழந்தைகள் படிப்பை படித்து, முடிப்பதற்கு முன்பே...படுக்கையறை படிப்பை தேடுவது அதிக நிச்சயம் ......(அநேக வாலிப பிள்ளைகள் அப்படி தான் பொய் கொண்டு இருக்கின்றனர்...)
நமது கல்வி முறையே தப்பாக இருக்கிறது எடுத்துகாட்டாக வகுப்பில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் முதல் 10 மாணவனை மட்டுமே ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள் பின்தங்கிய மாணவனை கவனிக்கவேண்டும் என்ற அக்கறை பெரும்பாலும் இல்லை இதை அனுபவத்தால் சொல்கிறேன் எனவே மீதி 40 மாணவர்கள் கவனிப்பின்றி விடபடுகிறார்கள் அதில் பெரும்பாலோனோர் இதுமாதிரி தவறான பாதையில் செல்கிறார்கள் ஆசிரியர்கள் எல்லா மாணவர்களையும் சமமாக நடத்தவேண்டும் மிக முக்கியமாக படிப்பதை இனிமையாக்க வேண்டும் புறபாட நடவடிக்கைகள் விளையாட்டு கலை ஓவியம் ஆகியவைகளையும் சமமாக கற்று கொடுக்கவேண்டும் பள்ளிக்கு செல்வதென்றால் ஒரு ஆசையும் ஆர்வமும் வரவேண்டும்
பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் முழுமையாக கவனித்து வரல் வேண்டும். அவர்களுக்கு அளவுக்கும் மீறி காசு கொடுப்பதும் நல்லதல்ல. தேவை பட்டால் நாலு போடு போடுவதும் மிக அவசியம் தான். பள்ளி செல்லும் மாணவர்கள் தான் எடுத்த இலக்கை கருத்தில் கொண்டு பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற நாட்டங்களுக்கு ஒரு போதும் இடங்கொடுக்க கூடாது. அப்படி இடங்கொடுத்தால் மானம் அழிந்து மதி கெட்டு
போவது தான் மிஞ்சும். வாடகைக்கு விடும் அந்த மேதாவியை பிடித்து மக்கள் காண கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கே இந்த பழக்கம் இருக்கிறது. [சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேவலமான மஞ்சள் புத்தகங்களை ஆசிரியர்களே வைத்து படிப்பதை பார்த்து இருக்கிறேன்.] பிறகு மாணவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? concentration கேம்ப், போன்ற அமைப்புகள் முதலில் ஆசிரியர்களை சீர்திருத்தவே தேவை. ஆசிரிய சமுதாயம் ஒரு முன்னோடி சமுதாயமாக இருக்கவேண்டும். இன்றைய ஆசிரியர்களுக்கு திரை நடிகர்களும், பொறுக்கி அரசியல் வாதிகளுமே ஆதர்சங்கள். பிறகு மாணவன் எங்கே விளங்குவான்??
இந்த கலாசார சீரழிவு எல்லா மட்டத்திலும் உள்ளது.. இதை உணர்ந்து முதலில் பெற்றோர் பிள்ளைகளை முறையாய் வளர்ப்பது என்பது தெரியா விட்டால் கஷ்டந்தேன் ..சினிமா காரனையும் சீரியல் காரியையும் இந்த அளவுக்கு பின்னால் அலையும் வெக்கம் கெட்ட மக்கள் கூட்டம் நம்ம நாட்டில் தான் உள்ளது..அதை சரி செய்தால் கொஞ்சம் மாற வாய்ப்பு உள்ளது..
ஒன்பதாம் வகுப்பு பாடத்திலேயே பாலியல் தொடர்பான தகவல்களை சேர்க்கப்பட்டுவிட்டது. அது பற்றி மாணவ மாணவிகள் விவாதிக்கத் தொடங்கிய நிலையில் இது போன்ற நிழ்வுகள் வாடிக்கையாகிவிட்டன. அறிவு ஜிவிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொண்டு பாரம்பரியமாக நமது நாட்டின் மக்களால் ஏற்கொள்ளப்ட்டு நடைமுறைபடுத்தப்பட்ட கட்டுபாடுகளை தகர்த்து எறிந்ததன் விளைவு இது. இலைமறைவு காய்மறைவாக வைக்கப்பட இவ்விஷயங்களை வெளிப்படையாக பேசுவதும் விவாதிப்பதும்தான் மேதாவித்தனம் என்ற தவறான எண்ணம் விதைக்கப்பட்டுவிட்டது. பள்ளி பாட நுல்களில் இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக கடைபிக்கப்பட்டவற்றை அசிங்கப்படுத்தும் நோக்கில் பாடங்கள் அமைக்கப்பட்டு நம்மை அடிமைபடுத்திய வெள்ளையனின் அறிவின்வழி சிந்திப்பதுதான் நாகரீகம் பகுத்தறிவு என்ற எண்ணத்தை புகட்டியதன் பரிணாம வளர்ச்சி இது. நமது கலாச்சாரத்தின் நுண்ணிய விழுமங்களை புறந்தள்ளிதன் வாயிலாக ஏற்பட்டுள்ள புற்று நோய் இது. பலகீனங்களுக்கு அடிமையாகிவிட்ட அவலமான சமுதாயமாக நம் சமுதாயம் மாற்றிப்பட்டுவிட்டது. இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.