வரும் 20ம் தேதி கூடுகிறது காவிரி நதிநீர் ஆணையம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ""காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம், வரும், 19 அல்லது 20ம் தேதி நடைபெறும்,'' என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். "காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும் விஷயத்தில், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மெத்தனமாக செயல்படுகின்றனர்' என, நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர், பவன்குமார் பன்சால், டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தில், உறுப்பினர்களாக உள்ள, மாநில முதல்வர்களுடன் இது தொடர்பாக பேசியுள்ளோம். வரும், 19 அல்லது 20ம் தேதி, ஆணையத்தின் கூட்டம் நடைபெறலாம். கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்பர் என, நம்புகிறோம். இவ்வாறு பன்சால் கூறினார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைக்கு, தீர்வு காண்பதற்காக, 1997ல் காவிரி நதி நீர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் கூட்டம், கடைசியாக, 2003 பிப்ரவரி, 10ம் தேதி, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், ஆணையம் மீண்டும் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Bangalore,இந்தியா
05-செப்-201215:27:35 IST Report Abuse
Raj I don’t know how many of you know the truth and fact of the water pollution of Cauvery River in Tamilnadu. Once the water enters into TN from KA, the water color changes to Brown and when it reaches Trichy, it will be completely become black and useless. If you touch the Cauvery water in Kodumudi you will get skin allergy and need to get treatment for it.
Rate this:
Share this comment
Cancel
மன்னைபாரதி - காட்டுமன்னார்கோயில்,இந்தியா
05-செப்-201211:14:17 IST Report Abuse
மன்னைபாரதி காவேரி நதிநீர் ஆணையமும் கூட்டமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சம்பிரதாயமாக கழகம் மற்றும் மத்திய அரசு செய்கிறதே தவிர, விவசாயத்தையும் விவாசாயியையும் நினைப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Neelaambari Rani - Kumbakonam,இந்தியா
05-செப்-201210:57:39 IST Report Abuse
Neelaambari Rani ஏலே சின்ராசு, நம்ம நிலத்தை எல்லாம் உழுதுடு, உரம் மூட்டை எல்லாம் வாங்கிடு, பூச்சி கொல்லி மருந்தெல்லாம் வாங்கிடு, நெல்லு விதை எல்லாம் வாங்கிடு நம்ம ஊருக்கு காவேரி தண்ணி வரப்போகுது. அதாண்டா, டெல்லில போயி பேச போராகலாம். நமக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
05-செப்-201210:45:18 IST Report Abuse
yila இந்த பிரச்சனையால், பெங்களூருக்குச் சென்றால் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, கோர்ட்டில் வாய்தா வாங்க மனு போடுவதற்கான திட்டமோ இது என்று தோன்றுகிறது. பெங்களூரு விஷயத்தில் தனக்கு உதவாத கர்நாடக அரசின் மீது தனது கோபத்தைக் காட்டும் வாய்ப்பாகவும் இது பயன்படுத்தப் படுகிறதோ என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம். தண்ணீர் வருகிறதா..அல்லது கோர்ட்டிற்கு வாய்தா விண்ணப்பம் வருகிறதா என்று..
Rate this:
Share this comment
Cancel
bala - Fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201209:46:43 IST Report Abuse
bala ஏவ்... புளிச்ச ஏப்பம் வருது
Rate this:
Share this comment
Cancel
05-செப்-201208:01:03 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் காவிரி உற்பத்தியாவதால் அதன் நீர் தனதே எனக் கூறும் , கர்நாடகம் போன்றே முழு பிரமபுத்ரா, சிந்து ஆற்றுத் தண்ணீரும் தனதே என சீன கூறினால் இந்தியா ஏற்றுக் கொள்ளுமா ?
Rate this:
Share this comment
Cancel
05-செப்-201206:59:46 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் பல லட்சம் ரூ செலவில் கூட்டம் போட்டு தீர்மானத்தைக் குப்பையில் போடுவர். இனி தமிழன் இந்தியாவில் தனமானத்துடன் வாழ்வது கடினமே
Rate this:
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
05-செப்-201204:55:21 IST Report Abuse
Bala Subramani கோர்ட் சொன்னாதான் புத்தி வரும் போல. இந்த தேதி வரைக்கும் கர்நாடகாவ நீங்கள் செய்வது தவறுன்னு எந்த பிரதமரும் சொன்னது கிடையாது. எல்லைய பிரிக்கும் போதே இத யோசிச்சு இருக்கணும். அதென்னவோ தமிழ்நாட பார்த்தாலே பக்கத்து மாநிலத்து காரங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது.
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
05-செப்-201204:40:17 IST Report Abuse
Nandu ஆக இந்த அம்மையார் முதல்வராக இருக்கும்போது மட்டும் இந்த ஆணையம் கூடுகிறது. அதற்க்கான நடவடிக்கைகளை இந்த முதல்வர் எடுக்கிறார். சிலபேர் நட்பாக கேட்டுப் பாருங்கள் கெஞ்சிப் பாருங்கள் என்று கூறுவது வேதனையான ஒன்று. நமக்கான உரிமையை நாம் பெறுவது நமது கடமை. யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை. நட்பின்றி நட்பை பேசி சிலை பரிவர்த்தனை தேவையில்லை, குடத்தில் நீர் வாங்கவும் தேவையில்லை. இது தலைக்கனமில்லை சுயமரியாதை நமக்குரிய மரியாதையை உரிமையை நாம் விட்டுக்கொடுக்ககூடாது. பிறரை அவமதிக்கவும் கூடாது அவரிடமிருந்து எதையும் தட்டிப்பறிக்கவும் கூடாது. இதுதான் தமிழ் நூல்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தது. கர்னாடக முதல்வர் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறார் தமிழக அரசு கர்நாடகாவிடம் அநியாயமாக எதுவும் பேசவில்லையே. நீதியை நீதிமன்றத்திடம் தானே கேட்டது. நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையில் பிழையிருந்தால் கண்டிக்கட்டும். வாய் வழியே செல்லும் உணவு எல்லாம் தனக்கே சொந்தம் என்று வாய் வாதிடுவது போல உள்ளது இந்த நதிநீர் பிரச்சனயில் மற்றவர்களின் நிலை.
Rate this:
Share this comment
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
05-செப்-201207:30:23 IST Report Abuse
Balasubramanian Ramamoorthyவாய் வழியாக கேட்டு கேட்டு இப்போது மஞ்சள் துண்டை தலைல போட்டுண்டு கெட்டு சீரழிஞ்சு அனாதையா நாதி இல்லாமல் நடு ரோட்டில நம்ம விவசாயிகளை நிற்க வைதுட்டார். அம்மா எடுத்த ஆயுதம் பிரம்மாஸ்திரம் எதிரி வீழ்வது நிச்சயம் BJP yudan நிச்சயம் எந்த சோசோனு வந்தாலும் வைக்கமாட்டார் 40 தொகுதியிலும் ஜெயிப்பார். அடுத்த ஆட்சியை தீர்மானிப்பார். அப்போது பாருங்கள் இவனுகளுடைய கதைய. இன்னொரு அரசியல் அனாதை பேசி தீர்கனும்னு சொல்லுது. ஏன் பேசணும் நாம்? நமக்கு என்ன கொடுக்கணும்னு ஏற்கனவே சொல்லியாச்சு செயல்படுத்தலன்னா படுத்த வைக்கணும். அதுவும் நீதிக்கு உட்பட்டு அம்மாவின் உண்ணாவிரதத்தால் வந்ததோ 11 tmc நீர் என்று மறந்துடாதீர்கள். தன்னுடைய குடும்பநலம் கெட்டுவிடகூடாதேன்னு கிழவர் பேசமாட்டார். அதான் பெங்களுரு கோர்ட்டுக்கு போககூடதுன்னு இப்படி இந்தவிஷயத்தை பெரிதாக்குகிரார்னு வியாக்கியானம் செய்கிறார் துரோகி மொட்டை தலைக்கும் முழங்கலுக்கும் முடுச்சு போட்டே பழகியாச்சு இன்னொரு குடிகார நடிகன் அல்பத்துக்கு பவுசு வந்தா கதையா என்ன என்னமோ உளறுது வெற்றி அம்மாவுக்கே அவர் ஜயா இல்லை ஜெயலலிதா ஜெயம் தான் அவருடைய வழியில்...
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
05-செப்-201200:41:35 IST Report Abuse
Kunjumani எதற்கு கூடுகிறது..?? அரசு செலவில் மசால்வடை, டீ சாப்பிடுவதற்க்கா?
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
05-செப்-201205:18:32 IST Report Abuse
K.Sugavanamசமோசா,புஜியா சாப்டுட்டு சாய் குடிக்க..காலங்காத்தாலயிலேயா இங்கிலீஷ் குஞ்சு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்