Proposals for SC/ST reservation in job promotions cleared | பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 05, 2012 | Added : செப் 04, 2012 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: அரசுப் பணியில் உள்ள, தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு (எஸ்.சி., - எஸ்.டி.,), பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அரசுப் பணியில் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க, உ.பி., முதல்வராக மாயாவதி பதவி வகித்தபோது, அம் மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தை ஏப்ரல், 28ம் தேதி, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது. அதனால், இந்தப் பிரச்னையை, சமீபத்தில், பார்லிமென்டில் எழுப்பிய சில கட்சிகள், "அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவர வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தின. இதையடுத்து, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க, ஆகஸ்ட், 21ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை, பிரதமர் மன்மோகன்சிங் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்தில், எஸ்.டி., - எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்திற்கும், அது தொடர்பாக, அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வருவதற்கும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.


இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்திற்கு, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான, அரசியல் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், "எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தில், இதர பிற்பட்ட வகுப்பினரையும் சேர்க்க வேண்டும்' என, ஆந்திராவைச் சேர்ந்த, ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., ஹனுமந்தராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
05-செப்-201216:34:47 IST Report Abuse
s.r.ramkrushna sastri இனி வரும் காலங்களில் எந்த ஊழலோ, விபத்தோ, குற்றமோ, மோசடியோ, கொலையோ, கொள்ளையோ, எதுவானாலும், குற்றம் நிரூபணம் ஆகும் பட்சத்தில், குற்றவாளியின் மொத்த பின்னணியும், அதாவது எதன அடிப்படையில் சீட் பெற்றார்,எதன் அடிப்படையில் உத்தியோகம் பெற்றார், மற்றும் எஸ்.சி யா, எஸ்.டி.யா ( அல்லது எந்த ஜாதியானாலும் ) போன்ற விபரங்களை கண்டிப்பாக வெளியிடவேண்டும். பிரமோஷனுக்கு மட்டும் நான் எஸ். சி. / எஸ். டி எனவே எனக்கு முன்னுரிமை உண்டு என்று சட்டத்தை காண்பித்து விட்டு, பிறகு ஏதாவது வழக்கில் வசமாக மாட்டிகொண்ட பிறகு, "ஐயோ, நான் ஒரு எஸ். சி. / எஸ்.டி. என்பதினால் என்னை அநியாயமாக சட்டத்தின் முன் நிறுத்தி கேவலப்படுத்துகிறார்கள்" என்று கூப்பாடு போடகூடாது. உத்தியோகத்தில் முன்னுரிமை எஸ்சி. / எஸ்.டி. க்கு அளிக்க பட வேண்டியது நியாயம். அது அவர்களின் உரிமை. ஆனால், பதவி உயர்வு என்பது அவரால் சீனியாரிட்டி மூலம் பெறப்பட வேண்டுமே தவிர ஒரு ஒதுக்கீட்டின் மூலமாக அல்ல அவர்களே இதனை ஒரு நாள் உணர்வார்கள். இதன் சிக்கல்கள் இப்போது தான் ஆரம்பித்துள்ளன. மேன் மேலும் பல சிக்கல்களை இந்த அரசு சந்திக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
05-செப்-201216:21:31 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA அடுத்த இடஒதுக்கீடு சட்டம் ரெடி : ரேஷன் கடை க்யு, சினிமா பார்க்க க்யு, ராணுவம், பைலட் (விமான ஓட்டி), மற்ற பொது துறை போல் இல்லாமல் நன்கு இயங்கி வரும் துறை ஆகியவற்றில்.. (விட்டால் "எல்ல்ல்லாத்துக்கும்" இட ஒதுக்கீடு குடுப்பார்கள்) வெறும் வோட்டு அரசியல்... பலிகடா திறமைசாலிகள்..வாழ்க இந்தியா....
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
05-செப்-201215:11:56 IST Report Abuse
ganapathy நான் எப்போதும் சொல்லுவது மாதிரி அரசியல்வாதி யாராவது இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற டாக்டரிடம் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்வாரா. மாயாவதியையும் சேர்த்து. ? அல்லது இவர்களை பாதுகாக்கும் படை வீரர் சுட தெரியாமல் இட ஒதுக்கீட்டில் சீருடை மற்றும் துப்பாக்கி மட்டும் பிடித்து கொண்டு இருந்தால் போதுமா. அல்லது இவர்கள் செல்லும் விமான பைலட் திறமை குறைவானவராக இருந்தால் தைரியமாக அதில் இந்த அரசியவாதிகள் செல்லுவரா? மக்களுக்கு படிக்க வசதி, நல்ல குடிநீர், சுகாதாரம், தரமான சாலை வசதி, நல்ல உணவு (நியாயமான விலையில்) காய்கறிகள், கீரை பயிர்கள் ( பூச்சி கொல்லி இல்லாமல்) எல்லோருக்கும் வேலைவாய்ப்பு ( கூலி தொழிலாளியாக இருந்தாலும் பரவாயில்லை - சாரயகடையை மூடுதல்) போன்றவை செய்தால் மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
Gnanavel - Kaveripakkam, Vellore,இந்தியா
05-செப்-201214:46:13 IST Report Abuse
Gnanavel அரசியல் சட்டப்படி, இடஒதுக்கீடு என்பது வேலை பெறுவதற்கு மட்டுமே என்கிறது நீதிமன்றம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தாலும்கூட, அவர் வேலையில் சேர்ந்துவிட்ட பிறகு அரசு இயந்திரத்தின் அங்கமாக ஆகிவிடுகிறார். அரசு ஊழியர் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு உரியது. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அரசு ஊழியராகத்தான் அவர் பணியாற்ற வேண்டும். அந்த உறுதிமொழியுடன்தான் அவர் பணியில் சேருகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக ஒரு ஆதிதிராவிட அலுவலர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அதேபோல, ஒரு முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி, நான் ஆதிதிராவிட நலத்துறைக்கு தலைமை ஏற்க மாட்டேன் என்றும் சொல்ல முடியாது. காரணம், அரசு ஊழியர்கள் சாதி, மத, இன, மொழி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மதநம்பிக்கை இல்லாதவர், அல்லது மாற்று மதத்தைச் சேர்ந்தவர், இந்து அறநிலையத் துறை தொடர்பான பதவிகளை ஏற்க மறுப்பு சொல்ல முடியாது. தர்மசங்கடமான சூழலைக் கருதி இவற்றை அரசாங்கமே தவிர்க்கிறது என்பது வேறுவிஷயம். ஆனால், சட்டப்படி மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஏனென்றால் அரசு ஊழியர்கள் சாதி, இன, மத,மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். வேலையில் சேர்வதற்கு இடஒதுக்கீடு இருக்கும்போது, பதவிஉயர்வில் ஏன் இடஒதுக்கீடு கூடாது என்பதுதான், இடஒதுக்கீடு கோருபவர்களின் தரப்பில் கேட்கப்படும் கேள்வி. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களை மேனிலைப்படுத்த வேண்டிய அரசின் கடமை. ஆனால், படிப்பில் தேர்ச்சி அல்லது பதவி உயர்வு என்பது, தகுதி அடிப்படையிலானதாகத்தான் இருக்க முடியுமே தவிர, அதற்கு சாதி எப்படி அடிப்படையாக இருக்க முடியும்? மாணவர் சேர்க்கையில், 100 இடங்களில் 19-ஐ தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்கின்ற சட்டம், அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தருகிறது. அதற்காக, தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது வினாத்தாளில் சமரசம் ஏற்படுத்துவதை எப்படி ஏற்பது? எல்லா மாணவர்களையும் போல அவர்களும் போட்டியிட்டாக வேண்டும். வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீடு அளிப்பது சரி. அவர் அரசு ஊழியர் என்று ஆகிவிட்டால், சாதி அடையாளத்தை இழந்துவிடுகிறார். பதவிஉயர்வு இடஒதுக்கீட்டால் பெற முடியாது என்கிறது நீதிமன்றம். இது அனைவருக்கும் புரியக்கூடிய விவகாரம்தான் என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிக்காக அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் குழப்பங்கள்தான் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகள். ஒவ்வொரு அரசுத் துறையிலும் எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் சங்கத்தைத் தனியாக உருவாக்கி, அரசு இயந்திரத்தில் தேவையற்ற பாகுபாட்டை ஏற்படுத்தி, ஆதாயம் பார்ப்பவர்கள் அரசியல்வாதிகள்தான். மத்திய, மாநில அரசு ஊழியர்களிடையே இத்தகைய பாகுபாடு முறையல்ல. இது சரியென்றால், வன்னியர் அரசு ஊழியர் சங்கம், பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கம், கிறிஸ்துவர் அரசு ஊழியர் சங்கம், முஸ்லிம்கள் அரசு ஊழியர் சங்கம் என்று அரசு ஊழியர்களை பிளவுபடுத்திக்கொண்டே போனால்.... அப்புறம் அரசு இயந்திரம் எப்படி செயல்படும்?
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
05-செப்-201212:29:40 IST Report Abuse
R. Vidya Sagar கல்லூரிகளில் இட ஒதுக்கீடு உள்ளது. அரசு பணிகளில் நுழைய இட ஒதுக்கீடு உள்ளது. பல்வேறு concessions களும் உள்ளன. பின் பதவி உயர்வில் எதற்கு இட ஒதுக்கீடு? ஐயா, நீங்கள் வேலையே செய்ய வேண்டாம், உங்களுக்கு பணி உயர்வு நிச்சயம் உண்டு என்று அறிவிக்கவா? இப்படிப்போனால் நிர்வாகத்திறன் எப்படி இருக்கும்? திறமை இல்லாதவர்களுக்கு ஜாதி அடிப்படையில் பணி உயர்வு கொடுத்தால், நாளை நிலக்கரி, 2G ஊழல் மட்டும் இருக்காது. சீனாவோ பாகிஸ்தானோ இந்தியாவை வளைத்துப் போட்டு விடுவார்கள். உஷார்.
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201211:28:00 IST Report Abuse
periya gundoosi சாதி என்ற ஒன்று இல்லாமல் இருப்பதே இந்தியனுக்கு சிறந்தது. இந்த ஒரு வார்த்தையை எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகில் மதங்கள் உண்டு. ஆனால் சாதிகள் இல்லை. மனிதரில் உயர்வு தாழ்வு என்பது மனிதனாகவே ஏற்படுத்திக்கொண்டது. பதவி உயர்வில் சாதியைத் திணித்தால் அறிவாளிகள், திறமைசாலிகள் இவர்களில் நேர்மையானவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். நிர்வாகச்சீர்கேடு உண்டாகும் என்பது என் தாழ்மையான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
05-செப்-201211:16:54 IST Report Abuse
Diviya Rathi இந்தியாவில் எல்லா இடத்திலும் உயர் ஜாதிகாரர்கள் பெரிய பதவிகளில் இருந்து கொண்டு திறமை உள்ள தாழ்த்த பட்ட மக்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கிறார்கள். இந்த பதவி உயர்வு இட ஒதுக்கீடு மிகவும் அவசியம். திறமை உள்ள தாழ்த்த பட்ட அதிகாரிகளின் உயர் பதவிக்கான கோப்புகள் உயர் ஜாதி அதிகாரிகளின் பார்வைக்கு போகும் போது அது திட்டம் இட்டு புறக்கணிக்கபடுகிறது என்பதுதான் உண்மை. எனவே இந்த ஆதிக்க வர்கத்தின் சூழ்ச்சியில் இருந்து இவர்களை காக்கவேண்டும் என்றால் இந்த சட்ட மசோதா மிகவும் அவசியம் ...
Rate this:
Share this comment
Cancel
sekar - Muscat,ஓமன்
05-செப்-201210:04:12 IST Report Abuse
sekar இட ஒதுக்கீடு அளிப்பதால் பிற்படுத்தப்பட்டோர் நிரந்தரமாகப் பிற்படுத்தப் படுகிறார்கள் என்பதே நிதர்சனம்......இட ஒதுக்கீட்டால் 2 தலைமுறை பயன் பெற்று விட்டால் 3 வது தலைமுறைக்கு அதன் தேவை என்ன?.....இதை விடக் கொடுமை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதைப் பயன்படுத்தி மற்ற பிரிவினரின் நியாயமான வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பது எந்த விதத்திலும் சரியல்ல....அரசியல்வாதிகளுக்கு ஒட்டு வங்கியாக மட்டுமே வாழ்ந்து அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலை வேண்டுமானால் வாங்கலாம்.... மற்றவர்களுடன் என்றும் ஒரு சம நிலையை அடைய முடியாது....காலம் மட்டும் தனிக் கூட்டமாக ஒதுக்கப்பட்டும்,பிற்படுதப்பட்டுமே வாழ முடியும்......அழகு என்னவென்றால் அவர்களே அதை நன்கு அறிவர்....ஆனால் அவர்கள் தூங்குவதைப் போல் நடிப்பவர்கள், எழுப்ப நினைப்பதே முட்டாள் தனம்.....
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
05-செப்-201209:52:33 IST Report Abuse
Tamilan ஒரு குழந்தை பிறக்கிறதுல இருந்து சாகுற வரைக்கும் இட ஒதிக்கீடு தேவையா? வாக்கு வங்கி அரசியல்.............
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
05-செப்-201209:35:34 IST Report Abuse
N.Purushothaman அடுத்த தடவை எப்படியாவது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் செய்கிற கோமாளித்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.... ஏற்கனவே அரசு பணிகள் மகா கேவலமாக நடந்து வரும் வேளையில் இது மேலும் மோசமடைவதை உறுதிபடுத்தும்......அதற்கு பேசாமல் அரசு பணி முழுவதும் தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தான் ஒதுக்க படும் என்ற சட்ட திருத்தம் செய்து விடலாம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை