Teacher's day today | அறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரியர் தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரியர் தினம்

Added : செப் 05, 2012 | கருத்துகள் (6)
Advertisement

மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான். வாழ்க்கை என்றால் என்ன, சமூகத்தில் மாணவரின் பங்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் தான் சொல்லித் தருகின்றனர். ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, பொறுப்பை உணர்ந்து மாணவருக்கு ஆசிரியர், உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.


எப்படி வந்தது: சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால், பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.


ஏன் இந்த முரண்பாடு: தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. இந்த உறவு, பள்ளிகளைத் தாண்டியும் தொடர வேண்டும். ஆசிரியர், மாணவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தாகத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல.


உங்கள் கடமை: மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. தற்போது ஆசிரியர் ஆவதற்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். கல்விக்கு தான் அரசு, அதிக நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி, உண்மையில் கல்வியை வளர்க்க பயன்பட வேண்டும்.


கவுரவம்: ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
05-செப்-201215:41:54 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA எனக்கு முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை வந்த ஆசிரிய பெருமக்களை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறேன் ... ஆனால் ... இன்றைய பொதுவான நிலை.... நீங்களே கற்பனை செய்யவும்.... லஞ்ச(க்) கோட்டாவில் வந்தவர்களே அதிகம்.. நுழைவு தேர்வு பாஸ் செய்யமுடியாதவர்கள்... என்னதொரு அவலமான நிலைமை...
Rate this:
Share this comment
Cancel
llekshmiganthan - Chennai,இந்தியா
05-செப்-201211:51:31 IST Report Abuse
llekshmiganthan இன்று ஆசிரியர் தினம். அனைத்து ஆசிரியர்களுக்கும் நல் வாழ்த்துக்கள். ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள். இலட்சியம் அவசியம். கனவுகள் அவசியம். முழுப் பொறுப்பும், பொறுப்பேற்றலும் மிக அவசியம்.கல்வி என்பது வெறும் மதிப்பெண்ணும், சான்றிதழும் அல்ல. 1 முதல் 10 வகுப்பு வரை,6 வயது முதல் 16 வயது வரை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு வயதிலும் நிர்ணயம் செய்யப்பட்ட தரமான கல்வியை வழங்கி, அனைத்து சிறந்த பண்புகளையும் மாணவர்கள் மனதில் பதிய வைத்து, தீவிரப் பயிற்சி அளித்து, அனைத்திற்கும் முன்மாதிரியாக இருந்து சிறந்த மனிதர்களை உருவாக்கி சமுதாயத்திற்கு அளிப்பது தான் ஆசிரியர்களது முதல் பணியாகும்.இன்றைய சமுதாயத்தில் குரு,மாதா,பிதா, தெய்வம் என்பது தான் சரியாகும். அதேசமயத்தில் இன்றைய சமுதாயம் அனைத்து மாணவர்களின் நலன்,பாதுகாப்பு ,எதிர்காலம் கருதி ஆசிரியர்களின் பணியின் பயத்தினைப் போக்க வேண்டும்.Corporal punishment கூடாது என்பது அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட சட்டம்.ஆனால் கண்டிப்பே கூடாது என்பது மாணவாகள் மத்தியில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்தி,கற்றல்,கற்பித்தல்,நல்ல பண்புகளை வளர்த்தல் போன்ற சூழ்நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது.அறிவுரை வழங்கியும்,திருந்த வாய்ப்பு அளித்தும் தவறு செய்கின்ற மாணவர்கள் கண்டிப்பு என்ற நிலை இல்லாத சூழ்நிலையில் தாங்களும் அழிவதோடு மற்ற மாணவர்களையும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்குத் தள்ளி விடுகின்றார்கள்.ஆசிரியர்கள் சமுதாயத்திற்குப் பயந்து, மாணவர்கள் பாடத்திட்டத்தை முடிக்காத நிலையில், தாங்கள் பாடத்திட்டத்தை முடித்து சம்பளத்திற்கு உழைக்கும் வெறும் பார்வையாளர்களாகத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை.அனைத்து குழந்தைகளின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து அவர்களுக்கு ஒரு பயமற்ற சூழ்நிலை பள்ளியில் அமைத்துக்கொடுப்பது சமுதாயம் மற்றும் அரசின் பொறுப்பாகும். ஆசிரியர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, தரமான கல்வி மற்றும் சிறந்த பண்புகள் பெற்ற குழந்தைகள் சமுதாயத்தை உருவாக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-செப்-201208:50:39 IST Report Abuse
villupuram jeevithan எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற அவ்வையார் மொழியை நினைவுகூர்ந்து ஆசிரிய நட்மக்களுக்கு நன்றி கூறுவோம்.
Rate this:
Share this comment
Cancel
thaniganandam - kanchipuram,இந்தியா
05-செப்-201208:43:58 IST Report Abuse
thaniganandam ஆசிரியர் தினம். இந்த நன்னாளை மாணவர்கள் மிகுந்த மரியாதையோடு கொண்டாட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Thiruppathi Ponnudurai - RAJAPALAYAM,இந்தியா
05-செப்-201207:40:11 IST Report Abuse
Thiruppathi Ponnudurai " ஆசிரியர் பணி ஒரு அறப்பணி அதற்கு உன்னை நீ அற்பனி " ஆசிரியர் பணியில் முன்பெல்லாம் சேவை செய்யும் நோக்கத்துடன் பலரும் சேர்ந்தார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பலரும் அதை ஒரு நிரந்தர மற்றும் அவர்களுக்கு எளிதாக இருப்பதற்காக பணி புரிய எண்ணுகின்றனர். மேலும் சில ஆசிரியர்கள் செய்யும் சில தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் தவறாக எண்ணுவது சரியல்ல. கல்வி அறிவை நமக்கு அவர்கள் வழங்குவதால் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அனைத்து ஆசிரியர் ( ஆசிரிய கடவுள்களுக்கும் )எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் ( கமெண்ட் ) செய்கின்றனர். அவர்கள் எப்பொழுது இந்த ஆசிரியர்களின் அருமையை உணர்வார்களோ தெரியவில்லை.எனக்கு அறிவை புகட்டிய மட்டும் தற்பொழுது புகட்டி கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.நன்றி
Rate this:
Share this comment
Cancel
Anandane Alain - Paris-93 ,பிரான்ஸ்
05-செப்-201201:23:10 IST Report Abuse
Anandane Alain புனிதமான ஆசிரியர் பணியினை உண்மையாக செயல்பட்டால், சமுதாயம் நிச்சயம் மாற்றம் காணும். ஆனால்,அரசியவாதிகளின் தலையீடு என்பதை ஆசிரியர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலை உருவாக வேண்டும்.கனவில்தான் இனி ஆசிரியருக்கு மரியாதை கிடைத்திடும். 1971 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய நேரத்தில் கூட, மாணவர்களும், பெற்றோர்களும்,காட்டிய மரியாதை இன்னமும்,பசுமையாக உள்ளது. எனது முன்னால் ஆசிரிய தெய்வங்களை இந்த நாளில் வணங்குவதை பெருமையாக எண்ணுகின்றேன். புதுச்சேரி முன்னால் ஆசிரியன் - அலன் ஆனந்தன்-பிரான்ஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை