Urea deficiency: central fertilizer ministry in careless mind | சம்பா சாகுபடி அதிகரித்தால் யூரியா தட்டுப்பாடு ஏற்படும்: மத்திய உரத்துறை அலட்சியம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (4)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழக டெல்டா பகுதிகளில் விவசாயம் சூடு பிடிக்கும்போது, அங்கு தேவைப்படும் யூரியா உரம் பற்றாக்குறையின்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும், பல்வேறு உரத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால், நாட் டின் உரத்தேவையைப் பூர்த்தி செய்ய, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய உரத்துறை அமைச்சகம், மானியம் வழங்குவதன் மூலம், உரங்களை குறைந்த விலையில், இந் நிறுவனங்கள் வழங்கி வந்தன. ஆனால், யூரியாவைத் தவிர மற்ற உரங்களை, மத்திய அரசு அனுமதியு டன், எண்ணெய் நிறுவனங்கள் போலவே, உரத்தயாரிப்பு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்கின்றன.

மாற்றாக: நுண்ணுயிர் சத்து கூடிய உரத்தேவை முக்கியத்துவம் மற்றும் மண்வளத்தைப் பாதுகாக்க கருதி, ரசாயன உரங்கள் மீதான மானியங்களை அரசு குறைத்ததும், இந்த விலை உயர்வுக்கு காரணம். தற்போதைய நிலவரப்படி, 50 கிலோ, டி.ஏ.பி., 1,200 ரூபாய், எம்.ஓ.பி., 840, எஸ்.எஸ்.பி., காம்ப் ளக்ஸ், 720 முதல், 1,095 ரூபாய் வரை,

விற்பனை செய்யப்படுகிறது. யூரியாவிற்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளதால், அதை மட்டும், 269 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மற்ற உரங்கள் விலை கூடுதலாக உள்ளதால், அவற்றிற்கு மாற்றாக, யூரியாவை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். தற்போது, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில், உரத்தின் தேவை அதிகரித்து உள்ளது. அங்குள்ள விவசாயிகள், குறைந்த விலையில் கிடைக்கும் யூரியாவை வாங்கி பயன்படுத்துவ தால், அவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யூரியாவை பதுக்குவது அதிகரித்து, கள்ளச்சந்தையில் கூடுதல் விலை யில், விற்பனை செய்வதும் அதிகரித்திருக்கிறது. தண்ணீர் இல்லாததால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், சம்பா சாகுபடிக்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதல்வர் ஜெ., உத்தரவுப்படி, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு, தமிழக வேளாண் துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் முக்கிய அம்சமாக, செப்., 17ம் தேதி, பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட இருக்கிறது. இது, காவிரி டெல்டா மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால்,

Advertisement

விவசாயம் களைகட்டும் நேரத்தில், மற்ற மாநிலங்களை போலவே, யூரியா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிடைக்குமா? தமிழகத்தில், 64 ஆயிரம் டன் யூரியா, கையிருப்பு உள்ளது. தற்போதைய நிலைமையைச் சமாளிக்க, இதுபோதுமானதாக இருந்தாலும், சம்பா சாகுபடி உச்ச கட்டத்தை எட்டும்போது, யூரியாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் உரத்தேவை குறித்து, வாரத்திற்கு ஒருமுறை, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், டில்லியில் உள்ள உரத்துறை அதிகாரிகளிடம் பேசுகிறோம். "ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மாநிலங்களுக்கு மட்டும் தான், இப்போது யூரியாவிற்கு அவசியத் தேவை இருக்கிறது. தமிழகத்திற்கு அவசியத் தேவை ஏற்படும்போது, வழங்குவோம்' என்று கூறுகின்றனர். இருப்பினும், சம்பா சாகுபடி முழுமைக்கும் தேவையான யூரியாவை கேட்டு பெற, நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
h j - pudukkottai,இந்தியா
05-செப்-201223:30:21 IST Report Abuse
h j எங்க மத்திய ஊரியா .....அமைச்சர்....ச்சீ யூரியா சம்பந்தமா பேசும் அமைச்சர் ...ஆளே காணோம்?ஏம்ப்பா இவ்ளோ அமளி துமளி நடக்கையிலே ...அவரு அங்கே மிச்சர் தின்னுகிட்டு இருக்காரோ?கூப்பிடுங்கப்பா கேட்போம்
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
05-செப்-201220:33:05 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar தமிழக மாநிலம் அதிக அக்கறையோடு விவசாயம் தொழில் செய்து வருபவர்கள்.., அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் காவரி நீர் பற்றாகுறை போக்க மத்திய அரசு உதவிட வேண்டும்.., விவசாயிகள் மூலம் தான் உணவு பற்றாகுறை போக்க முடியும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
05-செப்-201215:51:32 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA மத்திய உரமே மகனை காக்க அல்லாடுது.. த.நா.க்கு என்ன உரம் வேண்டிக்கிடக்குது.. எலிக்கறி சாப்பிட சொன்னவர்கள் ஆயிற்றே...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
05-செப்-201209:08:08 IST Report Abuse
rajan மத்திய உர துறை இபோ 360 டிக்ரி கோணத்தில கிரானைட் ஊழல்ல காணாம போன மேலூரு ஜாங்கிட் நகர்ல்லாம் குடும்ப சகிதம் தேடிகிட்டு இருக்காங்க. உரம் இருந்தா என்ன பயிர் வாடினா எங்களுக்கு என்ன. நாங்க வாதம் இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.