No Stay in Kudankulam matter | கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப அனுமதி ; சுப்ரீம்கோர்ட் போட்டதே சூப்பர் உத்தரவு !| Dinamalar

கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப அனுமதி ; சுப்ரீம்கோர்ட் போட்டதே சூப்பர் உத்தரவு !

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
No Stay in Kudankulam matter, கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப அனுமதி ; சுப்ரீம்கோர்ட் போட்டதே சூப்பர் உத்தரவு !

புதுடில்லி: கூடங்குளத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் வேளையில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்த முடியாது என்றும் இதற்கு தடை விதிக்க முடியாது என்றும் இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்து விட்டது. இதனால் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பெரும் சம்மட்டி அடி விழுந்துள்ளது. இதனால் தற்போதைய போராட்டம் இனிமேல் சட்டப்பூர்வமாக ஏற்க முடியதாததாகிவிடும் இத்துடன் இவர்கள் போராட்டம் தொடர்ந்து நடத்துவது நியாயமற்றதாகி விடும்.

கூடங்குளத்தில் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட தயார் பணியில் முக்கிய எரிபொருளான யுரேனியம் நிரப்பும் பணி துவங்கவுள்ளது. இதற்கென டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் குழு முழு அளவில் ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு அறிக்கை அளித்ததும் யுரேனியம் நிரப்பப்படும். இந்த அளவிற்கு இறுதிக்கட்டத்தை எட்டி நிற்கும் வேளையில் உதயக்குமார் தலைமையிலான குழுவினர் போராட்டத்தை துவக்கினர். இது கடந்த 9ம் தேதி வன்முறையாக வெடித்தது. கடந்த வாரத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இநத மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியானது. 300 பக்கம் கொண்ட தீர்ப்பில் மனுதாரர்களின் அச்சம தேவையற்றது என்று கருத்து தெரிவித்தது.


இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.விபத்துக்களை பட்டியலிட்ட வக்கீல் :

வழக்கில் மனுதாரர் சார்பில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார், இவர் தனது வாதுரையில் ; உலகம் முழுவதும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அணு உலை காரணமாக ஏற்பட்ட விபத்துக்களை பட்டியலிட்டு காட்டினார். சமீபத்திய புகுஷிமா விபத்தையும் இதனால் மக்கள் வெளியேற்றத்தை சுட்டிக்காட்டினார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றார். ஆனால் இவரது வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.


இது வரை யாரும் தடை இல்லை:

அரசு வக்கீல் வாதிடுகையில்; இந்த திட்டம் ரூ. 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு பிரச்னையில் மாநில அரசு மத்திய அரசு கமிட்டிகள் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். தமிழக அரசு முதலில் எதிராக இருந்து பின்னர் முழு அளவில் ஏற்றுக்கொண்டது. இந்த திட்டத்திற்கு இதுவரை எந்த இடத்திலும் தடை பெறப்படவில்லை . எனவே இந்த திட்டத்தை நிறுத்தும் பணிக்கு தடை விதித்தால் அரசுக்கு பெரும் நஷ்டம் வரும். மின்சார பிரச்னையை சமாளிக்க முடியாது எனவே தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கை விரித்து விட்டனர். இந்த வழக்கு வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இது ‌தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஆய்வு அறிக்கைகளையும் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள் என்றும் நீதபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே தற்போது சட்டரீதியான தடை இல்லை. இதனால் போராட்டம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் 15 நாளில் யுரேனியம் நிரப்பும் பணி துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (156)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srikrishnan - bangalore,இந்தியா
15-செப்-201212:18:02 IST Report Abuse
srikrishnan உங்களுக்கு இங்கு இருந்து பாக்கும்போது இந்த போரட்ட காரர்களின் வலி தெரியவே தெரியாது. வாங்க வந்து இங்க பாருங்க எங்களின் நிலைமை என்ன வென்று தெரியும் .........
Rate this:
Share this comment
Cancel
user2616 - ???????????,சிங்கப்பூர்
14-செப்-201222:05:51 IST Report Abuse
user2616 "சுப்ரீம் கோர்ட்" என்று ஆங்கிலத்தில் எழுதாமல், "உச்ச நீதி மன்றம்" என்று தமிழில் எழுத முடியாதா? நீங்க எல்லாம் என்ன தமிழ் பத்திரிக்கை நடத்துறீங்க?
Rate this:
Share this comment
srikrishnan - bangalore,இந்தியா
15-செப்-201212:14:06 IST Report Abuse
srikrishnanஇதுவாடா முக்கியம்...
Rate this:
Share this comment
Deepak - Nellai,இந்தியா
15-செப்-201212:15:13 IST Report Abuse
Deepakஉம்முடைய பெயர் தமிழில் மிக அழகாக இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Ilambirairajan - madurai,இந்தியா
14-செப்-201221:28:31 IST Report Abuse
Ilambirairajan தினமலருக்கு இந்த அணு உலைக்கு வக்காலத்து வாங்குவதில் அவ்வளவு அக்கறை ஏன்? தினமலருக்கு அணு உலைகள் பற்றி மிக செறிந்த ஞானம் உண்டோ? சமீபத்தில் ஜப்பான் நிறைவேற்றிய தீர்மானம் பற்றி ஒரு வார்த்தையும் செய்தியாக வெளியிடாதது ஏன்? ஜப்பான் நாடு இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் தன்னுடைய அனைத்து அணு உலைகளையும் மூட போவதாக முடிவு செய்து உள்ளது...அவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடு அணு உலைகள் பேராபத்து என்று உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது....அவர்களது மக்களுக்கான அரசாங்கம்...நம்முடையது கக்கூஸ் கட்டினாகூட அதுல எவ்வளவு அடிக்கலாம்னு பாக்குது....அதற்கு சில ஊடகங்களும்/பத்திரிகைகளும் காசு வாங்கிட்டு சேவகம் செய்கின்றன...
Rate this:
Share this comment
Cancel
MaestroMind - Bangalore,இந்தியா
14-செப்-201217:35:33 IST Report Abuse
MaestroMind Go & visit websites like ://www.99acres.com or ://www.magicbriks.com or ://www.realtyneeds.in .Search some land which is far away from Nuclear attack...
Rate this:
Share this comment
Cancel
rajaram avadhani - Tiruchy,இந்தியா
14-செப்-201213:44:32 IST Report Abuse
rajaram avadhani இவ்வளவு அபாயகரமானது என்றால் அடிக்கல் நாடும் பொழுது எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? கோர்ட்டில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் செய்ய விடாமல் ஸ்டே வாங்கி இருக்க வேண்டியதுதானே? பதினைந்தாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் வரையில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்களா?
Rate this:
Share this comment
Cancel
Pamaran A - chennai,இந்தியா
14-செப்-201209:04:07 IST Report Abuse
Pamaran A மூடு, மூடு-இன்னு இப்ப கத்துற முட்டாள்களே, செலவழிச்ச 10-ஆயிரம் கோடியை உங்கள் வெளிநாட்டு கூலிகளிடம் வாங்கி தர தயாரா ??
Rate this:
Share this comment
Cancel
Jana - Chennai,இந்தியா
14-செப்-201207:23:48 IST Report Abuse
Jana @Prabhu Franco It shows your ignorance .. Staying in UK & talking about small radiation.. Microwave which you use to reheat your food emit small radition.. Cell phone has more radition which causes cancer..Can you ask to ban cell phone for ever...
Rate this:
Share this comment
Cancel
Kumar Shan - Singapore,சிங்கப்பூர்
14-செப்-201205:26:26 IST Report Abuse
Kumar Shan தங்கராஜாவின் கருத்து அனைத்தும் தங்கத்திற்கும் மேலான மதிப்புமிக்க கருத்து ... வாழ்த்துக்கள் தஞ்சை குமார் ....
Rate this:
Share this comment
Cancel
Raj - Singapore  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201205:12:51 IST Report Abuse
Raj thanks thangaraj nadar for explaining in detail and simple words to the innocent people who support nuclear power plant. Everyone please read thangaraj nadar comments. Me too confused why dinamalar is extensively supporting nuclear power plant @ koodangulam....we know the level of corruption in the govt.....how can one expect a safe operation of nuc pwr plnt....
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Texas,யூ.எஸ்.ஏ
14-செப்-201203:22:44 IST Report Abuse
Thamizhan அணு உலை குறித்து பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் வேளையில், பாதிக்க பட்ட இடத்திலிருந்து வரும் நானும் எனது கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். இதில் சிலருக்கு உடன்பாடுகள் இருக்கலாம், ஆனால் இதை வாசிக்கும் ஒருவராவது இது சரிதான் என்று புரிந்தால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இந்த கூடங்குளம் உலை ஆரம்பித்த நாட்களிலே, அதை எதிர்த்து கையெழுத்து வேட்டை நடத்தியதில் நானும் ஒருவன். இன்று காலத்தின் கட்டாயத்தில் அந்நிய நாட்டில் பணி புரிந்தாலும், என் மனம் என் தாயகத்தை பற்றியே நினைக்கிறது. அணு உலை சரியா, தவறா, இல்லை உதயகுமார் நல்லவரா, கெட்டவரா எனும் கேள்விகளுக்கு பதில் தெரியுமுன், ஓன்று மட்டும் என் மனதிற்கு கேட்கிறது .... மக்கள் எதிர்க்கும் இந்த போராட்டத்திற்கு, மக்கள் பிரதிநிதிகள் ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்கள் .... அப்படியானால் இது ஜனநாயகமா ? ஏனெனில் இதற்க்கு பச்சை கொடி காட்டுபவர்கள் எல்லோரும் இந்த இடத்திலிருந்து அப்பாற்பட்ட இடங்களில் வாழ்வதால் தான். அவர்களின் குடும்பம் இந்த கூடங்குளத்தருகில் வசிப்பதாயிருந்தால், இவர்களும் இந்த எதிர்பாளர்கள் பட்டியலில் இருப்பார்கள். அணு உலை பாதுகாப்பானதுதான் என்று கூறும் அரசியல் பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் குடும்பத்தோடு சில ஆண்டுகள் கூடங்குளத்தில் வந்து வசிக்க முடியுமா ?. அப்படி நீங்கள் வந்து, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்தால் நீங்கள் காலங்கள் கடந்த வரலாறில் இடம் பிடித்து விடுவீர்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் எல்லாம் அணு உலையை எதிர்த்து கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஏன் இந்த விஷ பரிச்சை செய்ய வேண்டும். அணு உலையை கூடங்குளத்தில் இருந்து நீக்குவது மட்டும் அல்ல எங்களது வேண்டுகோள், அணு இல்லாத ஒரு புதிய பாதுகாப்பான மாற்று முறையை கண்டு பிடியுங்கள் என்று தான் சொல்லுகிறோம். இன்று அரசியல் பலத்தில் இருக்கும் சில வியாபாரிகள் எடுக்கும் முடிவினால் மனித குலத்திற்கே தீமை விளைவிக்காதீர்கள் நாமே நாம் தலையில் மண் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கையோடு இந்த மடலை முடித்துகொள்ளுகிறேன். - தமிழன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.