Why Given Bribe?- Readers' Outburst | இதெல்லாம் ஒரு பிழைப்பா...?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (17)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

நீலகிரி மாவட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் எழுதுகிறார்...
சிங்காநல்லூர் உழவர் சந்தையில், நீலகிரி மலைக்காய்கறிகளை விற்கும் விவசாயிகள் 20 பேர் இருக்கிறோம்; மலைக்காய்கறிகள், கோவை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில்தான், எங்களை இங்கு வந்து காய்கறி விற்பதற்கு அரசு ஊக்குவித்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இங்கே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
உழவர் சந்தையில் பணி புரியும் உதவி நிர்வாக அலுவலர்கள், இப்போது எங்களிடம் ஒரு கடைக்கு தினமும் 20 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர்; தராத விவசாயிகளின் அடையாள அட்டையை ரத்து செய்வோம் என்று மிரட்டுகின்றனர்.
பொங்கலுக்கு ஒரு கடைக்கு ஐநூறு ரூபாய் கேட்டனர்; சிலர் தந்தனர்; பலர் தரவில்லை; உழைப்பவனிடம் பறிப்பது என்ன பிழைப்போ?
ரயிலில் பறக்கும் லஞ்சக்கொடி: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த வாசகரின் அனுபவம்...
நான் ஒரு சீனியர் சிட்டிசன்; ரயில்வே பயணச்சீட்டில் எனக்கு சலுகைக்கட்டணம் உண்டு. கடந்த 4ம் தேதியன்று, கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்காக, கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., டிக்கெட்டிங் சர்வீஸ் மையத்தில் டிக்கெட் எடுத்தேன்; அதில், எனக்குரிய கட்டணத் தொகையுடன், 100 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் எடுத்தனர்.
ஆனால், 10 ரூபாய் மட்டுமே எடுத்ததாக ரசீது கொடுத்தனர்; இதுபற்றி கேட்டதற்கு, "அப்படித்தான் வாங்குவோம்' என்று கூறி விட்டனர்; ரயில்வே ஸ்டேஷன் கண்காணிப்பாளரிடம் சென்று கூறியதற்கு, "நீங்கள் ஏன் அங்கே போய் டிக்கெட் வாங்கினீர்கள்?; எங்களால் எதுவும் செய்ய முடியாது,' என்று "பொறுப்பாக' பதில் கொடுத்தார்.
ரயில்வே ஏஜன்சிகள் இப்படி பகிரங்க கொள்ளை அடிப்பதற்குக் காரணம், ரயில்வே உயரதிகாரிகளுக்குப் போகும் லஞ்சம்தான். ரயில்வே இ-டிக்கெட்டிலேயே சர்வீஸ் சார்ஜ் சேர்த்து, போட்டுக் கொடுத்தால், ஏஜன்சிகள் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட முடியாது; அதை ஏன் ரயில்வே நிர்வாகம் செய்வதில்லை?
லஞ்சத்தை பதிவு பண்ணுங்க!: லஞ்சத்தை ஒழிக்க குறிச்சி கருப்புசாமி சொல்லும் ஆலோசனை...
அதிகமாக லஞ்சம் விளையாடும் அரசு அலுவலகங்களுக்கு அருகிலோ, கோவில் போன்ற பொது இடங்களிலோ, லஞ்சம் கொடுத்தது பற்றிய தகவல்களை பொது மக்கள் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்; இதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இந்த பட்டியலை பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம்; அதனால், லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது குறைக்கலாம்.
பட்டா மாறுதல் செய்வதற்கு சில நேரங்களில், கட்டுக் கட்டாய் லஞ்சம் கை மாறுகிறது; அதனை "கட்' பண்ணுவதற்கு ஆலோசனை தருகிறார் திருப்பூரைச் சேர்ந்த முருகராஜ்...
ஒருவர் பூமியை கிரயம் செய்யும்போது, பட்டா மாறுதல் மனுவில், வாங்குபவரும், விற்பவரும் கையெழுத்திட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் தருகின்றனர்; முன்பெல்லாம், இந்த மனு, தாலுகா அலுவலகத்துக்கு வந்து அவர்களாகவே பட்டா மாறுதல் செய்து கொள்வர்; தற்போது, இதனை அனுப்புவதில்லை. இதுவே, வருவாய்த்துறையினருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை "இன்டர்நெட்' மூலம் இணைத்தால் இதற்கு தீர்வு காணலாம்; கிரயம் முடிந்து, பத்திரம் "ஸ்கேன்' செய்யும்போது, அந்தந்த வருவாய் கிராமங்களில் சர்வே எண்களில் வாங்குபவர், விற்பவர், செய்தால், அதனை 30 விஸ்தீரணம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

அப்போதே அனைத்து அலுவலகங்களிலும் உள்ள பட்டாவில் பதிவாகி, நேரடியாக வேறு பெயருக்கு பட்டா மாறுதலாகி விடும். அதற்கு சார்பதிவாளர் மற்றும் வருவாய்த்துறையினர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது. கிரயம் பெற்றவர், வருவாய்த்துறையை அணுகி, தனது பெயர் பட்டாவில் வந்த விபரத்துக்கு கணினி சிட்டா மனுச் செய்து, உண்மை நகலை பெற்றுக்கொள்ளலாம்.
இதனை தமிழக அரசு செயல்படுத்தினால், வருவாய்த்துறையிலும், பட்டா மாறுதலிலும் லஞ்சம் பெருவாரியாகக் குறையும். தொழில் நுட்ப வசதிகளைப் பயன் படுத்தினால், இதே போல பல துறைகளில் லஞ்சத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க முடியும்; யோசிக்குமா தமிழக அரசு?
ஒரு மாதத்தில் டிஸ்மிஸ்: பொள்ளாச்சி கோமங்கலம்புதூர் திருநாவுக்கரசு எழுதியுள்ள கடிதம்...
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் குறைக்க வேண்டுமெனில், ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கால வரையறை செய்ய வேண்டும்; குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணி முடியாவிட்டால், அதற்கான காரணம், விண்ணப்பதாரர்க்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்; அரசுக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு, உடனுக்குடன் ரசீது தரப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளுக்கு முரணாக செயல்படும் லஞ்ச அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு நாட்களுக்குள் விசாரித்து முடித்து, தீர்ப்பளிக்க வேண்டும். லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்க்கு மேல் முறையீடு வாய்ப்பு எதுவும் தராமல், பணியிலிருந்தும் "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.
பறிக்கப்படுவதே...லஞ்சம்: கோவை எஸ்.எம்.பாளையம் ஆசிரியர் காலனியிலிருந்து எழுதுகிறார் ஜெயராமன்...
புது வீடுக்கான "பிளான் அப்ரூவல்' வாங்க இரண்டாயிரம் ரூபாய், மின் இணைப்புக்கு மூவாயிரம் ரூபாய், சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று வாங்க மூன்று முறை தலா 200 ரூபாய், எனது மூன்று பேரக்குழந்தைகளுக்கு பிறப்புச்சான்று வாங்க 300 ரூபாய்...என நிறைய லஞ்சம் கொடுத்துள்ளேன்; எனது அனுபவத்தில் லஞ்சம் தரப்படவில்லை; பறிக்கப்பட்டதே உண்மை.
ரயில்களில் டிக்கெட் வாங்க கணினி மயமாவதற்கு முன், அங்கிருந்த "புக்கிங் கிளார்க்' சொல்வதையே நம்ப வேண்டியிருந்தது; இன்றைக்கு, தொழில்நுட்ப முன்னேற்றம் அங்கே நடந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எல்லாத்துறைகளிலும் "மின் ஆளுமை'யை கொண்டு வந்தால், லஞ்சத்தையும், முறைகேட்டையும் பெருமளவில் தடுக்க முடியும்.
நேர்மையாளர்கள் பத்து சதவீதம்: சட்டங்களை கடுமையாக்குவதைத் தவிர, லஞ்சத்தை ஒழிக்க வேறு வழியே இல்லை என்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., வெள்ளிங்கிரி. அவரது கருத்துப் பகிர்வு...
லஞ்சம் இல்லாத துறை இல்லை. நூற்றுக்கு 90 சதவீதம் பேர், லஞ்சம் வாங்கித்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். லஞ்சம் கொடுக்காமல், எந்த அலுவலகத்திலும் எந்த வேலையுமே நடப்பதில்லை. லஞ்சம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில், அரசு அலுவலர்கள் உள்ளனர்.
நேரடியாக பலர் லஞ்சம் வாங்குகின்றனர்; சில அதிகாரிகள், தங்களுக்குக் கீழுள்ள அலுவலர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவும், உறவினர், நண்பர்கள் மூலமாகவும் லஞ்சம் வாங்குவதைப்

Advertisement

பரவலாகப் பார்க்க முடிகிறது; இவை எதுவுமே இல்லாமல், தெரிந்த இடங்களில் கொண்டு போய், லஞ்சம் கொடுக்கச் சொல்லும் அதிகாரிகளும் இருக்கின்றனர்.
லஞ்சம் இல்லாத வாழ்க்கையே வாழ முடியாதா என்றால் வாழ முடியும்; அதற்கு நமது சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; சட்டங்கள் கடுமையானால்தான், லஞ்சம் உள்ளிட்ட எல்லா குற்றங்களும் குறையும். எந்தெந்த வகையில், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென்று நீதித்துறைக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன்; இப்போது சட்ட கமிஷனுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
காத்திருக்க நேரமில்லை: அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது; சித்தப்பா என்று எப்போது அழைப்பது? என்கிற கதையாக, "சட்டங்கள் என்றைக்கு கடுமையாவது, அதுவரை லஞ்சம் தர வேண்டுமா' என்கிறார் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி. அவரது கருத்து...
சட்டம் கடுமையாகும் என்று காத்திருப்பது, கானல் நீரிலே தாகம் தணிக்க நினைப்பது போன்றது; என்றோ கிடைக்கும் தீர்வுக்காக, இன்று நடக்கும் பிரச்னையை கண்டு கொள்ளாமலிருக்க முடியாது.
இப்போது வாங்கும்லஞ்சத்தை இப்போதேதான் பிடிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவோரைத் தண்டிக்க, தற்போதுள்ள சட்டங்களே போதுமானதாக இல்லை என்பது ஓரளவு உண்மைதான்.
ஆனால், இந்த சட்டத்தின்படியே, ஏராளமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. லஞ்சம் பரவலானதைப் போல, அதை எதிர்ப்பவர்களும் பரவலாகவில்லை என்பதுதான் சமூக முரணாக இருக்கிறது. இந்த விகிதாச்சாரத்திலுள்ள இடைவெளியைக் குறைக்கின்ற பொறுப்பு, ஊடகங்களுக்கும் உள்ளது.
எந்தத் துறையில், எந்த அலுவலகத்தில் லஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினால், மக்களும், மேலதிகாரிகளும் கொஞ்சம் விழிப்படைவார்கள்; மக்களும் கொஞ்சம் ஒத்துழைக்க முன் வரும்பட்சத்தில்தான், அந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்; மீண்டும் மீண்டும் நாங்கள் வேண்டுவது, மக்களின் ஒத்துழைப்பைத்தான்.
வராவிட்டாலும் தரமாட்டேன்: இந்த முதியவரின் உறுதி, எல்லோருக்கும் வந்தால் எங்கே போகும் லஞ்சம்...?
எனது பெயர் சுப்பிரமணியம் (71); ஓய்வு பெற்ற நூலகர்; நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் வசிக்கிறேன். எனது 35 ஆண்டு கால நூலகப் பணியில், ஒரு குறிப்பட்ட அரசாணைப்படி, எனக்கு பணப்பலன் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்டிருந்தேன். அதற்கு, பொது நூலக இயக்குனர் அனுமதித்தவுடன் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று பதில் வந்தது.
உரிய சான்றுகளுடன் நூலக இயக்குனருக்கு விண்ணப்பித்தேன்; அதற்கு எந்த பதிலும் வரவில்லை. லஞ்சம் கொடுத்தால், இந்த நிலுவைத் தொகை நிச்சயமாக எனக்குக் கிடைத்திருக்கும்; அப்படி வாங்குவதற்கு எனக்கு மனமில்லாததால், ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறேன்.
இந்த போராட்டத்திலும், தகவல் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து, எனக்கொரு திருப்தி; எனக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை; ஆனாலும், நான் நிச்சயமாக லஞ்சம் தர மாட்டேன்.


மேலும் எதற்கு கொடுத்தோம் லஞ்சம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
glassboy - mangaf,குவைத்
27-ஜன-201213:59:24 IST Report Abuse
glassboy அரசு துறையை விட்டு தனியார் துறையில் லஞ்சம் இல்லாமல் சிறப்பாகவே உள்ளது இது மக்களுக்கு சாபக்கேடு
Rate this:
Share this comment
Cancel
வரதராஜ் k - minjur,இந்தியா
26-ஜன-201206:42:36 IST Report Abuse
வரதராஜ் k இங்கே அரசு ஊழியர்களும்,அதிகாரிகளும் வாங்கும் லஞ்சம் பற்றியே கருத்து சொல்லப்பட்டுள்ளது.அரசியல்வாதிகள், நம்மை ஆட்சி செய்யும்,முதல்வர்கள், அமைச்சர்கள் இவர்கள் செய்கின்ற கோடிக்கணக்கான ஊழல்களை பார்த்துதான் நாமும் வாங்குவோமே என கீழே உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் லஞ்சம் பெறுகின்றனர்.மேலே உள்ளவர்கள் நேர்மையாக இருந்தால் கீழே உள்ளவர்களுக்கு பயம் வரும்.அப்படியும் திருந்தவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
26-ஜன-201205:48:27 IST Report Abuse
ராமசாமி Venkatesan லஞ்சம் இப்போது கேட்டு வாங்கப்படுகிறது. பின் மிரட்டி வாங்குவார்கள். அதற்கும் பின் அடித்து வாங்குவார்கள். சாம தான பேத தண்டம் இங்குதான் செயல்படும். இதையே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு போதிய அதிகாரம் கொடுத்து செயல்படலாம் ஆளும் அரசுகள் விருப்பப்பட்டால்.
Rate this:
Share this comment
Cancel
அஞ்சா நெஞ்சன் - பால - The Great Coimbatore,இந்தியா
25-ஜன-201216:11:39 IST Report Abuse
அஞ்சா நெஞ்சன் - பால இதெல்லாம் படித்து விட்டு கூட இன்னும் திருந்தாமல் இருக்கும் கோயம்புத்தூர் கார்பரேஷன் டவுன் சர்வேயர்க்கு (பொ) எப்போதான் விடிவு காலமோ தெரியல. ஏற்கனவே ஒரு டவுன் சர்வேயரை லஞ்சம் வாங்கிய குற்றத்தினால்தான் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. அவருக்கு பதில்தான் இவர பொறுப்பு அதிகாரியா போட்டிருக்காங்க ஆனா இவர் எப்போ எப்படி யார் மூலமா மாட்ட போறாருன்னுதான் தெர்ல... ஆண்டவனுக்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கும்தான் தெரியும்... கையூட்டு கேட்டு வீட்டுக்கு ஆள் அனுப்புகிறார் இந்த சர்வேயர்... ச்சி ச்சி...
Rate this:
Share this comment
Cancel
kabir ahmed - chennai,இந்தியா
23-ஜன-201220:55:29 IST Report Abuse
kabir  ahmed லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி அதற்கு கொடுக்ககூடிய தண்டனையில் தான் இருக்கிறது. லஞ்சம் வாங்கினால் டிஸ்மிஸ் என்று அரசு அறிவித்தல் ஒருத்தரும் லஞ்சம் வாங்க பயப்படுவனுன்ங்க. இதை செய்யுமா தமிழக அரசு?
Rate this:
Share this comment
gopinathan - chennai,இந்தியா
25-ஜன-201218:04:27 IST Report Abuse
gopinathanலஞ்சம் வாங்கினால் டிஸ்மிஸ் என்று அரசு அறிவிக்கவேண்டும் என்று போராட யாரும் முன்வரவில்லையே. லஞ்சம் வாங்காதவர்கள் இல்லை என்பதே காரணம். மேலும் போராட்டகுணம் மழுங்கிவிட்டது. மனம் மரத்துவிட்டது....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Krishnaveni skv - cbe,இந்தியா
23-ஜன-201215:52:22 IST Report Abuse
Srinivasan Krishnaveni     skv நான் நினிக்கிறேன் லஞ்சம் வாங்கலேன்னா இந்த லஞ்ச்ஜாதிபதிகளுக்கு thuukkame வராது. துன்ன சோறு சீரணம் ஆவாது. ஏழைகள் கிட்ட லஞ்சம் வாங்கர்வனும சேரி லஞ்சத்தை பங்கு போட்டு துன்றவனும் சேரி மாறவே மாட்டானுக. உப்பு போட்டு சோறு துன்னா வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் இருக்கும். இந்த லஞ்சம் வாங்க்கியே லட்சாதிபதி ஆகும் பொறுக்கிகளுக்கு நல்ல சாவே வராது லஞ்சம் தந்து சாபம் பெத்தவங்க தான் இவுக
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
23-ஜன-201208:11:59 IST Report Abuse
 nicolethomson மலையாளிகள் கோவையில் எங்கும் நிரந்து விட்டனர், கோவை மக்களே, உஷார்.
Rate this:
Share this comment
Cancel
Ramanathan - chennai,இந்தியா
22-ஜன-201221:05:29 IST Report Abuse
Ramanathan லஞ்சம் வாங்குவதும், தேசதுரோகம் செய்வதும் ஒன்றுதான் .
Rate this:
Share this comment
Cancel
Rajendran - Thiruppur,இந்தியா
22-ஜன-201216:37:19 IST Report Abuse
Rajendran சிவகங்கை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம், ஊழியர் ஒருவர் மூலமாக நடக்கிறது. பத்திர விஷயமாக யார் வந்தாலும், காசு பிடுங்குவதே தொழிலாக செய்கின்றனர். ஈரோட்டிலிருந்து பத்திர நகல், சம்பந்தமாக, இந்த அலுவலகத்தை நாடிய போது, பகிரங்கமாகவே கேட்கிறார்கள். - ராஜேந்திரன், திருப்பூர்.
Rate this:
Share this comment
Cancel
G.Muthupandy - Theni,இந்தியா
22-ஜன-201216:36:04 IST Report Abuse
G.Muthupandy வீடு புதிதாக கட்டியிருந்தாலோ, வாங்கியிருந்தாலோ கட்டாயம் லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு வேலையும் நடக்காது என்பதை எனது அனுபவத்தில் ஆணித்தரமாகக் கூறுகிறேன். நான் 2008ல் தேனியில் ஒரு வீடுவாங்கினேன். அன்று முதல் இன்று வரை லஞ்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதை நியாயப்படுத்தவில்லை. இருப்பினும் லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். வீடுவாங்கும்போது பத்திர ஆபீஸில் துவங்கிய லஞ்சம், இன்று வரை தொடர்கிறது. மின்வாரியத்தில், பட்டா மாற்றம் செய்ய தாலுகாவில், வீட்டுவரி, குழாய் வரிக்கென நகராட்சியில் பலருக்கும் லஞ்சம் கொடுத்துவிட்டேன். நான் தனியார் துறையில் பணியாற்றுகிறேன். லஞ்சம் கொடுக்காமல் பணிகளை முடிக்க வேண்டும் என நினைத்தேன். மிஞ்சியது ஏமாற்றமும், மனஉளைச்சலும், அலைக்கழிப்பும்தான். எனக்கு வேறு வழிதெரியவில்லை. வாங்கிய சொத்தை காப்பாற்ற வேறுவழியுமில்லை. என்னைப் போன்ற லட்சக்கணக்கான இந்தியர்களின் நிலை இதுதான். தற்போது ஊழலுக்கான விழிப்புணர்வும், போராட்டமும் வலுப்பெற்றிருந்தாலும், அவற்றை களைய அரசு ஊழியர்கள் கொள்கை முடிவெடுத்தால் மட்டுமே சாத்தியம். - ஜி.முத்துப்பாண்டி, தேனி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.