எம் புள்ளைய படிக்கவையுங்கய்யா...
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கல்வி உதவித்தொகை கேட்டு நின்று கொண்டிருந்த அந்த நீளமான வரிசையில் காணப்பட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்தவுடனேயே தெரிந்தது, வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டவர் என்பது. அவரது முறைவந்து உள்ளே அழைக்கப்பட்டதும், "எம் புள்ளை என்ஜினியர் படிக்க தேர்வாகியிருக்கான்யா, படிக்க உதவுங்கய்யா'' என்று தனது வேண்டுகோளை வைத்தார்.

"அம்மா...இது அரசாங்க பள்ளியில் படிக்க ஆயிரம், இரண்டாயிரம் தேவைப்படும் குடும்பத்திற்கு உதவுவதற்கான அறக்கட்டளை, உங்க புள்ளைக்கு நாற்பாதாயிரம் ரூபாய் வரை செலவாகும், அந்த அளவிற்கு உதவுவதற்கு எங்களால முடியாதும்மா'' என்று சொல்லி திருப்பியனுப்பினர். "ஐயா, தயவு செய்யுங்கய்யா, எம் புள்ளை ரொம்ப ஆசைப்படறான்யா, எப்படியாவது படிக்க வையுங்கய்யா '' என்று கேட்டுக்கொண்டிருந்தார்; இல்லையில்லை கெஞ்சிக்கொண்டிருந்தார்.

யார் இவர்

அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.

பெயர் பிருந்தா

தற்போது சென்னை திநகர் பகுதியில் குடியிருக்கும் இவர் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டை சொந்த ஊராகக் கொண்டவர், விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர், அதற்கு மேல் படிக்க ஆசைப்பட்டாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் சென்னையில் உள்ள ஒரு ஒட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.

குடிசை வீட்டில் அன்புக் குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதுதான் பிருந்தாவின் ஆசை. இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் இவர் நாலைந்து வீடுகளில் வேலை செய்து வரும் சம்பாத்தியம் மூலம் படிப்பிற்கு செலவிட்டு வந்தார். பெற்றவளின் சிரமம் பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.

இதில் மூத்தவன் கோகுல் இந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் எடுத்துள்ளான். கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜினியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது. இதுவரை பிரச்னையில்லை. எவ்வளவு பணம்கட்ட வேண்டும் என்ற கேள்வி வந்தபோதுதான் எல்லா சலுகையும் போக வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்தேயிராத பிருந்தாவிற்கு என்ன செய்வது என்பது இன்றுவரை புரியவில்லை. உறவுகள், நட்புகள் அனைத்தும் கைவிரித்துவிட்ட நிலையில்தான் வேலை பார்த்துவரும் வீடுகளில் கடன் கேட்டுவருகிறார். இப்போதே காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிவரை இடுப்பொடிய வேலை செய்பவர், "இன்னும் இரவெல்லாம் கூட வேலை செய்கிறேன்' என் புள்ளை படிச்சசா போதும் என்கிறார் கண்கள் கலங்க.

இந்த நிலையில் இவரது கணவர் பார்த்து வந்த வேலையும் எதிர்பாரதவிதமாக போய்விட்டது, இது ஒரு பக்கம் என்றால் வரும் 14ம்தேதிக்குள் பணம் கட்டாவிட்டால் மகன் என்ஜினிரிங் படிக்க முடியாமல் போய்விடக் கூடிய சூழ்நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் மகனின் மார்க் பட்டியலுடன் உதவி கேட்டு பலரது வீட்டு கதவை தட்டி வருகிறார். பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது.

இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் முடிந்தளவு உதவலாம், நேராக கல்லூரிக்கே பணத்தை கட்டிவிடலாம், இதனால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்க வைப்பான் என்பதைவிட, ஒரு ஏழை, எளிய தாயின் கனவை நனவாக்கலாம் அவரது கண்களில் ஆனந்த கண்ணீரை பார்க்கலாம். அவருடன் தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்கான மொபைல் எண்: 9445427673 (பிருந்தாவிடம் போன் கிடையாது, அவர் வேலை செய்யும் வீட்டில் உள்ளவரின் போன் இது). நன்றி!

- எல்.முருகராஜ்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekar Rajendran - New Delhi,இந்தியா
13-ஆக-201216:40:16 IST Report Abuse
Gnanasekar Rajendran வணக்கம் நண்பர்களே. நான் இங்கு குறிப்பிடும் செய்திக்கு யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.. திண்டுக்கல் மாவட்டத்தில் கற்பகவல்லி என்னும் மாணவி பனிரெண்டாம் வகுப்பில் 1039 மதிப்பெண் பெற்று தற்போது மேற்படிர்பினை தொடர இயலாத நிலையில் உள்ளார்.. உதவ நினைபவர்கள் 9944134437 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
PADDI - chennai,இந்தியா
08-ஆக-201215:43:59 IST Report Abuse
PADDI pl.try at RAJASTHAN YOUTH ASSOCIATION 9841187474 A NOBLE ASSOCIATION TAKES CARE EDUCATION FOR FOUR DECADES
Rate this:
Share this comment
Cancel
Padman - Chennai,இந்தியா
08-ஆக-201215:31:46 IST Report Abuse
Padman இலவசம் குடுப்பதருக்கு பதிலாக கல்வி கட்டணங்களை குறைக்கலாம். கருப்பு பணத்தை இதற்க்கு உபயோகிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Uthavi - USA,யூ.எஸ்.ஏ
06-ஆக-201220:12:37 IST Report Abuse
Uthavi முருகராஜ், கலைச்செல்வி அவர்களே, வணக்கம், அந்த தாய்க்கு என் கோவை வீட்டில் வேலை தருகிறேன் அவர்களுக்கு விருப்பம் இருந்தால். அவர் அப்படி கோவை வந்தால் அவர்களின் தனையனின் நான்கு வருட படிப்பு செலவு முழுவதையும் ஏற்று செய்கிறேன். நீங்கள் கேட்டு இங்கு உங்கள் ஈமெயில் முகவரி கொடுங்கள் நான் தொடர்பு கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Jhanani - Chennai,இந்தியா
12-ஆக-201200:03:43 IST Report Abuse
Jhananiவணக்கம், மிக்க நன்றி, உதவிக்கரம் நீட்டியதற்கு. தற்போதைய நிலையென்னவென தெரிந்துகொள்ளலாமா?எங்கள் குழுமத்தின்(shade.org.in) மூலம் உதவி செய்ய முடியுமா என பார்க்கும் முன், இதை உறுதி படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நன்றி, ஜனனி...
Rate this:
Share this comment
Cancel
m.ravi - madurai,இந்தியா
06-ஆக-201210:29:13 IST Report Abuse
m.ravi இது போன்ற ஏழை மாணவர்களுக்கு இட ஒதிக்கீடு எந்த பலனும் அளிப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
sasikumar - Bangkok,தாய்லாந்து
06-ஆக-201209:25:30 IST Report Abuse
sasikumar தயவு செய்து இந்த மாதிரி உதவிகள் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள். இந்த மாணவனுக்கு கிடைக்கும் உதவிகள் அவனுக்கு தேவையான அளவினை விட அதிகம் கிடைக்கும் போது அந்த பணத்தின் மீது அவனுக்கோ,அவனை சார்ந்தவர்களுக்கோ பண மோகம் வரகூடாது. மட்டவர்கள் அவனுக்கு எப்படி உதவி செய்தார்களோ அதனை மனதிற்கொண்டு , அவனை போல கஷ்டபடுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் . நன்றி தினமலர் மற்றும் உதவும் உள்ளங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
05-ஆக-201218:08:24 IST Report Abuse
thamizh Madayan கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. பிருந்தா மற்றும் கோகுல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எத்தனை பேர் கோகுல் போல உள்ளனர்? அத்தனை பேருக்கும் செய்தித் தாள் மூலம் நன்கொடை பெற்று படிக்க முடியுமா? இங்கே அமெரிக்காவில் பொதுவாக எல்லோரும் நான்காண்டுகளில் முழு நேர படிப்பாக படித்து பட்டம் பெற்றாலும், கல்லூரிகள் எட்டாண்டுகள் அவகாசம் தருகின்றன. இதே படிப்பை ஓரிடத்தில் வேலை செய்துகொண்டே பகுதி நேரமாகப் படிக்கலாம். 8 x 2 = 16 செமெஸ்டர் மற்றும் 7 கோடைப் பருவங்கள், முழு நேர வேலைக்குப் பின் படிக்க போதுமான நேரம் கிடைக்கும். தன சம்பளத்திலிருந்து மாதாம் ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டி, மீதி 60000 ரூ வங்கிக் கடன் வாங்கி படிப்பை முடிப்பது சாத்தியம்தான். ஆனால் கல்லூரிகள் பகுதி நேர படிப்பை எந்த அளவு ஆதரிக்கிறார்கள் தமிழகத்தில் என்று தெரியவில்லை. இங்கே இது சர்வ சாதாரணம். பலர் பள்ளி முடித்தவுடன் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் வேலை செய்து பணம் சேர்த்து முழு நேர கல்வி பெறுகிறார்கள். அல்லது பகுதி நேரமாகப் படித்து ஆறு அல்லது எட்டு ஆண்டுகளில் பட்டம் பெறுகிறார்கள். இங்கே பணி மூப்பு வயது 67 . எனவே பட்டம் பெறுவதில் அவ்வளவு அவசரம் தேவை இல்லை.
Rate this:
Share this comment
Subramani Pichaimani - Blr,இந்தியா
07-ஆக-201221:50:43 IST Report Abuse
Subramani PichaimaniSource Link : ://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=4442&cat=Album (2nd Pic of Album) Details of this Student :- Student Name: Rakkappan Education: Higher Secondary with 1104 marks Place: Rajapaalaiyam He got a place to do his B.E(Mech. dept.) in National Engineering college, Koivilpatti, but financial issue to continue his studies. Right now he is working in a Winding shop About his Parents, His father is no more and Mother is a labor(Daily wages) in Cookery agency and she has wheezing problem as well. Fee Details : Tution fee- 35,000 Hostel - 26,000 mess - 18,000 Due day to pay the Fee: Aug 14th College s: 22nd Aug... If you would like to help, Please contact on +919986462643 or Subramani.pm@gmail.com...
Rate this:
Share this comment
Cancel
Ravi - london,யுனைடெட் கிங்டம்
05-ஆக-201210:25:24 IST Report Abuse
Ravi thanks for revealing this news.. am about collecting funds to this guy.. uk
Rate this:
Share this comment
Cancel
saseendran - chennai,இந்தியா
05-ஆக-201205:35:03 IST Report Abuse
saseendran இந்த செய்தியை வெளி இட்டமைக்கு தினமலர்க்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Sethuraman Babu - San Francisco Bay,யூ.எஸ்.ஏ
05-ஆக-201203:46:21 IST Report Abuse
Sethuraman Babu மாணவன் விவரங்களை இங்கு பிரசுரித்தால் உதவி செய்ய எளிதாகும். நன்றி.
Rate this:
Share this comment
murugaraj - chennai,இந்தியா
05-ஆக-201211:40:06 IST Report Abuse
murugarajஅன்பான பெரியவர்களே உதவிகள் தொடர்கின்றன மாணவன் கோகுல கண்ணன் மற்றும் அவனது தாயார் பிருந்தா கண்ணீர் மல்க நன்றி கூறுகின்றனர் -கலைச்செல்வி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்