ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் ஆயிரத்து இருபது வரை எண்ணலாம், எதை என்று கேட்கிறீர்களா... எல்லாம் கேமிராதான். அந்த காலத்தில் பத்து பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு போய் படமெடுத்த பெல்லோஸ் கேமிரா முதல் ஐந்து செ.மீட்டர் உயரமேயுள்ள சிறிய கேமிரா வரை ஒரே இடத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டை , கஸ்தூரிரங்கன் சாலை , எண் 41ல் உள்ள ஆர்ட் ஹவுசில் நடந்து வரும் இந்த பழங்கால கேமிரா கண்காட்சியை நடத்தி வருபவர் ஏ.பி.ஸ்ரீதர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர், ஓவியத்தின் மீதான ஆர்வம் காரணமாக சென்னை வந்தார். ஒரு உத்வேகத்துடன் ஒவியம் பயின்ற இவரை நவீன ஒவியம் சுவீகரித்துக்கொண்டது.
பலரும் அறிந்த நவீன ஒவிய படைப்பாளியான இவர் தனது ஒவிய கண்காட்சிக்காக வெளிநாடுகளுக்கு போயிருந்தபோது ஒருவர் பழைய கேமிராக்களை பொக்கிஷம் போல பாதுகாத்து வருவதைப்பார்த்ததும், தானும் அது போல பழைய கேமிராக்களை சேகரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக இவர் மேற்கொண்ட இந்த ஆர்வம்தான் இப்போது பழமையான கேமிரா கண்காட்சியாக உருவெடுத்துள்ளது. முதல் முறையாக இவர் நடத்தும் இந்த பழமையான கேமிரா கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கேமிராக்களை பார்க்கும் போது புகைப்படத்தின் மீது யாருக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு இந்த கலை வளர்க்கப்பட்டுள்ளதை இந்த கண்காட்சியில் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஒரு காலத்தில் 25 பேர் 250 கிலோ எடையுள்ள கேமிரா சாதனங்களை தூக்கிச் சென்று படம் எடுத்துள்ளார்கள். பின் அது கொஞ்சம், கொஞ்சமாக நவீனமாகி இன்று கையடக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வந்து நிற்கிறது. இந்த கேமிராக்களின் வளர்ச்சியை இந்த கண்காட்சியில் படிப்படியாக அறியலாம்.
வெறும் கேமிராக்கள் மட்டுமின்றி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கேமிராவுடன் இருக்கும் படங்களையும் (உபயம் புகைப்படக்கலைஞர் ஞானம்) கண்காட்சியில் வைத்துள்ளார். வரும் செப்டம்பர் 10ம்தேதி வரை நடைபெறும் இந்த கேமிரா கண்காட்சி தொடர்பாக விசாரிக்க போன் எண்:9092861461.
(முக்கிய குறிப்பு: வாசகர்களே கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பழைய கேமிராக்களில் சிலவற்றை பார்க்க ஸ்ரீதர் படத்தின் கீழ் போட்டோ கேலரி என்று எழுதப்பட்டுள்ள சிவப்பு பட்டையை கிளிக் செய்யவும்)
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.