இதுதான் என் வாழ்க்கை: பவானி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சமீப காலமாக நிறைய தற்கொலை செய்திகள், தற்கொலை செய்தவர்களில் திருச்சியை சேர்ந்த நட்சசத்திர ஒட்டல் அதிபர் முதல் சென்னையைச் சேர்ந்த சீனியர் டாக்டர் வரை உண்டு. இது போக ஐஐடி மாணவர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பட்டியல் நீளும். இவர்களது தற்கொலைக்கு காரணம் நிச்சயமாக வறுமை கிடையாது. ஏதோ ஒரு தோல்வி, ஒரு சறுக்கல், ஒரு பிரச்னை, ஒரு கவலைதான் இவர்களை சட்டென இப்படி ஒரு முடிவு எடுக்கவைத்துள்ளது.


ஆனால் வாழ்க்கையில் நித்தமும் எத்தனையோ தோல்விகள், பிரச்னைகள், சறுக்கல்கள், கவலைகளுடன் அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாத வறுமையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும் இந்த தேசத்தில் ஆயிரக்கணக்கில் உண்டு. அவர்களின் பிரதிநிதிதான் பவானி.


ஓரு வார்த்தையில் சொல்வதானால் சென்னை பிராட்வேயின் பிளாட்பாரவாசி. எங்க தாத்தா, எங்க அம்மா, நான், என் பொன்னுங்க, பொன்னோட பசங்கன்னு ஐந்து தலைமுறையா இங்கேதான் வாழ்றோம், பல்லு விலக்குறதுல இருந்து படுக்கிறது வரை எல்லாம் இங்கேதான். நிரந்தரமான பொழப்பும் இல்லை, நிரந்தரமான வருமானமும் கிடையாது. அன்றாடம் என்ன கிடைக்குதோ அத வச்சு சாப்பிடுவோம், ஒண்ணும் கிடைக்கலைன்னா தண்ணிய குடிச்சுட்டு படுத்துக்குவோம்.


வீட்டு ஆம்பிளைகளுக்கு பொழப்பு இருக்குது ஆனா அதுல வர்ர வருமானத்தை முழுசும் குடிச்சே தீர்துராவங்க.... எம் புருஷன் இதுவரை, இந்தாடி நாம் சம்பாதிச்சதுன்னு ஒத்த ரூபா கொடுத்தது கிடையாது.


நான் வயசுக்கு வந்த நாள்ல இருந்தே துரத்தி, துரத்தி காதலிச்சாரு, நம்பளையும் ஒரு மனுஷன் விரும்பரேன்னு கட்டிக்கிட்டேன், அப்ப பிக்பாக்கெட் அடிச்சுட்டு இருந்தாரு, அதெல்லாம் தப்பு கூடாதுன்னு சொன்னதுக்கப்புறம் சைக்கிள் ரிக்ஷா ஒட்டறாரு, அதுல சொற்ப வருமானம்தான் வரும், அதை அப்படியே எடுத்துட்டு போய் குடிச்சுட்டு கவிந்தாருன்னா அப்புறம் ஒரு வாரம் ரிக்ஷா ஒட்டமாட்டாரு. பேருக்கு புருஷனா இருக்காரு, இவரால ஐந்து புள்ளைக பிறந்ததுதான் மிச்சம்.


மூணு பொன்னுங்க, ரெண்டு பசங்க, மூத்த பொன்னுக்கு கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்ல மாப்பிள்ளை இறந்துட்டான், கேட்டதுக்கு அவனுக்கு எய்ட்ஸ் நோய்னாங்க, அதுக்கு பிறகு என் தம்பிய சேர்த்துவச்சுகிட்டு வாழ்றா, இரண்டாவது பொண்ணு கல்யாணம் பண்ணி போன கொஞ்ச நாள்ல புருஷன் சரியில்லைன்னு திரும்ப இங்கேயே வந்துட்டா, மூனாவது பொண்ணு வீட்டு வேலைக்கு போய்ட்டு இருக்கா, பெரிய பையன் மீன்பாடி வண்டி ஒட்டுறான், சின்னவன் ஆட்டோ மெக்கானிக்க இருக்கான், இரண்டு பேரும் அப்பனை போலவே ரெண்டு காசு சம்பாதிக்கிறதுக்குல்ல நாலு காசுக்கு குடிப்பானுக, குடிக்க வாங்க கடனுகள அடைக்கவே அவுனுகளுக்கு ஆயுள் போதாது. அப்புறம் எப்படி ஆத்தாளுக்கும், கூடப்பொறந்தவகளுக்கும் கொடுப்பானுக.


அதுனால என் வயத்துப்பாட்டை நான்தான் பாத்துக்கணும், ரோட்டில கொட்டுற அட்டைப்பெட்டி, மற்றும் காகிதங்களை பொறுக்கி கொண்டு போய் எடைக்கு போடுறதுல நூறு, நூத்தைம்பது ரூபாய் கிடைக்கும், கிடைக்கறத வச்சு கஞ்சியோ, சோறோ ஆக்கி சாப்பிட்டுக்குறோம். அவ்வப்போது பூ கட்டி கொடுத்து அதுல வர்ர காச சேத்துவச்சு ஒட்டல் போய் நானும் என் பொண்ணுகளும் சாப்பிடுவோம்.


ரேஷன் கார்டுக்கு, அடையாள அட்டையெல்லாம் இருக்கு ஆனா அதல இருக்கிற அட்ரஸ் எங்களுக்கு எதிரா உள்ள கடை அட்ரஸ்தான். என்ன மாதிரி இங்க இருக்கிற எல்லாருக்கு அந்த கடைதான் முகவரி. மற்றபடி அட்ரஸ் இல்லாத ஆளுங்க நாங்க.


குடிகார புருஷனால அடி, உதைக்கு பஞ்சமேயில்லை, அக்கறை இல்லாத புள்ளைகளால ஏச்சுக்கும், பேச்சுக்கும் குறையேயில்லை, யாருக்கும் படிப்பறிவு இல்ல, சொத்து பத்து என்றோ சொந்த பந்தம் என்றோ சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை, வெறுத்துப்போய் எங்காவது கால் போன போக்கில் போவேன், அப்புறம் எங்கேன்னு போறாதுன்னு திரும்ப இங்கேயே வந்துடுவேன். நடுரோட்டிலே பிளாஸ்டிக்கை கட்டிட்டு குளிப்போம், மழைக்காலம் வந்தா ரொம்ப கஷ்டம் எதையாவது தலைக்கு மறைவா பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டே விடிய, விடிய தூங்குவோம் என்னய்யா செய்யறது "வாழ்ந்தாகணுமே'.

-எல்.முருகராஜ்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிந்திப்பவன் - chennai,இந்தியா
17-அக்-201207:50:27 IST Report Abuse
சிந்திப்பவன் //வெறுத்துப்போய் எங்காவது கால் போன போக்கில் போவேன், அப்புறம் எங்கேன்னு போறாதுன்னு திரும்ப இங்கேயே வந்துடுவேன்// மனதை உலுக்கிய வரிகள்.இது வாக்கியம் இல்லை.அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இடப்பட்ட சாபம்
Rate this:
Share this comment
Cancel
Sellur Vel Murugan - Madurai,இந்தியா
20-செப்-201211:06:05 IST Report Abuse
Sellur Vel Murugan அம்மா நீ பேப்பர் [பொரிக்கு இந்த நாட்டை சுத்தம் செய்ற அதுக்கே நான் தல வணகுகிறேன் ........ நம்ம ஊரு ஆள்களுக்கு சுவிஸ் பேங்க் ல அக்கௌன்ட் ல இருக்கா ஆனா உனக்கு அட்ரஸ்எ இல்லையம்மா.... என்ன கொடும சார் இது......... im very [proud of u ma....... உன்னாலே இந்த நாடு சுத்தம் ஆகும்.............
Rate this:
Share this comment
Cancel
Lalitha Kannan - Coimbatore,இந்தியா
09-செப்-201207:25:15 IST Report Abuse
Lalitha Kannan அந்த அம்மாவின் மனோதைரியத்தை பாராட்ட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Mohamed Alikhan Mohamed Alikhan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-201217:15:24 IST Report Abuse
Mohamed Alikhan Mohamed Alikhan இதற்கெல்லாம் மூல காரணம் ஆண்களின் குடிபழக்கம். அரசு உடனடியாக மது விலக்கை அமுல் படுத்தி இப்படிப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
07-செப்-201216:28:19 IST Report Abuse
sing venky வெறும் கருத்து மட்டும் கூறிவிட்டு அடுத்த வேலையை கவனிக்க மனம் வருந்துகிறது. ஏதேனும் வகையில் இந்த அம்மாவிற்கு உதவ விரும்புகிறேன். தினமலர் அதற்கான நடை முறை திட்டம் ஏதேனும் அறிவித்தால் நன்றாக இருக்கும். ஏதேனும் என். ஜி. ஒ அமைப்புகள் இவர்களை போன்றோரின் மறு வாழ்விற்கு உதவுவதாக இருந்தால் அவர்களின் முகவரியை தெரிவிக்கவும். ஐந்து தலைமுறைகளாக ஒரு குடும்பம் பிளாட்பாரத்தில் வாழ வேண்டிய நிலையில் தான் நாடு இருக்கிறது ஆனால்,..லட்ச-கோடிகளில் ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் இவர்களை போன்றோருக்கு ஒரு வீடு வேலை கொடுத்து கூட ஆதரிக்காதது மன வேதனையை அளிக்கிறது. இவர் ஒருவரின் வாழ்க்கையே நாட்டில் உள்ள அனைத்து குறைகளையும் சொலவதாக இருக்கிறது. (i ) வறுமை (இருக்க இடம், உடுக்க உடுப்பு, உன்ன உணவு இல்லாத கொடும் வறுமை), (ii ) கல்வியின்மை (iii ) கருத்தடை, தோற்று நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை (iv ) குடி பழக்கத்தால் குடி கெடும் என்பதற்கு உதாரணம் இவர் வீட்டு ஆண்களின் வாழ்க்கை. (v ) வறுமை, கல்வியறிவு இல்லாத பெண்களிடம் தலை விரித்தாடும் ஆணாதிக்க கொடுமை. ( அடிக்கும் கணவன், மகள்களின் வாழ்கையை பாழாக்கிய மருமகன்கள், அம்மாவிற்கு உதவாத மகன்கள்) ...வாழ்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனை துன்பங்களை அனுபவிக்கிராரோ இந்த அம்மா. ....இறைவன் மட்டுமே துணை இருக்க வேந்தி=உம இவர்களை போன்ற ஆதரவற்றவர்களுக்கு. இவர்களை எத்தனை முறை கடந்து சென்றிருப்பார்கள் அதிகாரம் உடைய அரசியல் வாதிகள், அதிகாரிகள்? எத்தனை முறை பார்த்து சென்றிருப்பார்கள் பகட்டு வாழ்க்கையை வாழும் சினிமா காரர்கள். எத்தனை முறை பார்த்து சென்றிருப்பார்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த துடிக்கும் பொருளாதார நிபுணர்கள். எத்தனை முறை கவனித்திருப்பார்கள் செவ்வாய் கிரகத்திற்கும், நிலவுக்கும் ராக்கெட் அனுப்ப திட்டமிடும் விஞ்ஞானிகள். ......நெஞ்சு பொறுக்குதில்லையே. .....இக்கொடுமைகளை காண விரும்பாமல் தான் மறைந்து போயினையோ என் பாரதி ...வல்லமை தாராயோ
Rate this:
Share this comment
Satheesh Kumar - joda,இந்தியா
08-செப்-201208:10:42 IST Report Abuse
Satheesh Kumarsing why you want help this kind of persons their suffered due to drinking father and now sons, they are not suffered by any other diseases or etc, so helping this family also sin...
Rate this:
Share this comment
Antony - Male,மாலத்தீவு
09-செப்-201214:18:56 IST Report Abuse
AntonyIt was touching...Mr. sing why cant we jus join hands to do atleast something for these people....Lets start...Jus by giving money to this family, te problem wont be solved....we could think of something different...contact me at mathaa75@yahoo.com.......
Rate this:
Share this comment
Radha Krishnan - Tiruchirapalli (Trichy),இந்தியா
11-செப்-201212:52:03 IST Report Abuse
Radha Krishnanwe need to some organisation and to get suggestion from those who are the same mentality.. pls some one website to tell all our opinion to develop our country and to remove poverty and to remove ugly politicians from this country. pls help somebody to the website soon........
Rate this:
Share this comment
Cancel
Dhandapani Natarajan - Singapore,சிங்கப்பூர்
07-செப்-201207:31:51 IST Report Abuse
Dhandapani Natarajan உங்களுக்கு அனைத்தும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
sivanesh - coimbatore,இந்தியா
06-செப்-201212:51:45 IST Report Abuse
sivanesh இவ்வளவு கஷ்டத்திலும் திருடாமல், பொய் சொல்லாமல், உழைத்து வாழும் இந்த தாய்க்கு என் வணக்கங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
04-செப்-201222:05:36 IST Report Abuse
Chandra Sekaran இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கும்போது அவர்களுக்கு உதவி கிடைக்கும் வண்ணம் அவர்களது முகவரியாவது தெரிவிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
m.srinivasan - Dharmapuri,இந்தியா
04-செப்-201211:39:05 IST Report Abuse
m.srinivasan பெருமைக்குரிய உங்களை போன்ற போராளிகளை நேசிகின்றேன். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் முதல்வர்களை விட உங்களை போன்றவர்கள் பெரிதும் மதிக்க வேண்டியவர்கள் அம்மா. உங்கள் வேதனை வலியை என்னால் உணர முடிகிறது. நான் ஒரு ஏழை மாணவனாக இருந்து வேதனைபடுகிறதே தவிர உங்களுக்கு என்னால் ஏதும் உதவ முடியாத கட்டாயத்தில் உள்ளேன். உங்களை போன்றவர்களை படம் பிடித்து காட்டும் தினமலர் கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
Rate this:
Share this comment
Cancel
Ramkumar Gangadharan - Bangalore,இந்தியா
04-செப்-201210:49:28 IST Report Abuse
Ramkumar Gangadharan இதற்கெல்லாம் மூல காரணம் ஆண்களின் குடிபழக்கம். அரசு உடனடியாக மது விலக்கை அமுல் படுத்தி இப்படிப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்