Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
அரசியல் செய்திகள்
கள் இறக்க அனுமதி: ராமதாஸ் அறிவிப்பு
ஜூன் 22,2009,00:00  IST

Latest indian and world political news information

சென்னை: கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்; கள் இறக்க நான் ஆதரவு தருகிறேன்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று திடீரென அறிவித்தார்.தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் அனைத்து உழவர் சங்கம் மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பா.ம.க., தலைவர் மணி தலைமை வகித்தார்.அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:



தென்னை, பனை விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். என் தோட்டத்தில் ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. ஒரு தேங்காயை இரண்டு ரூபாய்க்கு கூட எடுக்க மாட்டோம் என்கின்றனர். ஆனால், இளநீர் ஐந்து ரூபாய்க்கு எடுக்கின்றனர்.இதே மாதிரி தான் அனைத்து விவசாயிகளின் நிலை உள்ளது. மது இல்லாத நாட்டை உருவாக்குவது தான் நமது லட்சியம். ஆனால், வெளிநாட்டின் கலர் சாராயத்தை விற்பனை செய்யும் போது கள் ஏன் இறக்கக் கூடாது என விவசாயிகள் கேட்கின்றனர்.



கள் இறக்குவதை நான் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. பூரண மதுவிலக்கு அமலாகும் வரை, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கள் இறக்க முழு ஒத்துழைப்பு தருகிறேன். பூரண மது விலக்கு அமலுக்கு வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு குடிகாரர்களின் நாடாக மாறி விட்டது.தமிழகத்தில் ஆறு சாராய தொழிற் சாலைகள் உள்ளன. மூன்று பீர் தொழிற்சாலைகள் உள்ளன.



தற்போது கூடுதலாக மூன்று பீர் தொழிற்சாலை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பி.,க்கும், கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒருவருக்கும், உளியின் ஓசை திரைப்படத்தை தயாரித்தவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக இன்னும் ஆறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி தர கேபினட் காத்திருக்கிறது.



விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து இங்குள்ள அமைச்சருக்கும் தெரியாது; மத்திய அமைச்சர்களுக்கும் தெரியாது. அடுத்த மாதம் மீண்டும் நாம் கூடி பேசுவோம். நாம் அனைவரும் இணைந்து பெரிய போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 Some body mentioned that toddy make rural peopel as drinkers. Do u think tasamc is only on in town or in city. no. It is available in every places.So toddy could n''t make non-drinkers to drinkers.  
by s suthan,coimbatore,India    22-06-2009 23:33:24 IST
 கல் இறக்குவதை பற்றி பிரச்னை இல்லை. அதை பற்றி யார் யார் பேச வேண்டும் என்ற ஒரு தராதரம் வேண்டும். நேற்று சிகரெட் குடித்ததர்காக திரையை கிழிக்க சொன்னவர் இப்போது இதை பற்றி பேச வேண்டாம் என்பதே எனது கருத்து 
by Oru Tamilan,Chennai,India    22-06-2009 19:04:38 IST
 இது வல்லாவ டாக்டேர்,மகன் மந்திரியா இருந்தால் சுகாதாரம்,இல்லையேல் மக்களுக்கு தாங்கள் அளிக்கும் ''மின்சாரம்''தாங்களுக்கு எது பிடிக்கிறதோ,அது எல்லோருக்கம் பிடிக்கவேண்டும் அப்படித்தானே,அப்படி என்றால் ''புகை''பிடிப்பாது தடை இல்லைத்தானே,அதை ஏன் தாங்கள் அறிவிக்கவில்லை.முயற்சித்துப்பாருங்கள் மக்களின் நலன் கருதி.வெண்டக்கா.இதல்லாம் உனக்கு தேவையா? போய் வேறவேலை பார். 
by m.y. aminmohamed ,villiers sur marne paris,France    22-06-2009 18:52:35 IST
 dear all what ramadoass says its right oneway it is helpful for farmers dont think only ramadoss he has got 1000 trees rest croes of trees all over tamilnadu think those helpless farmers govt should think seriously and consider accordingly. 
by p thirumal,india,India    22-06-2009 11:03:28 IST
 Nothing wrong in what he said..let him benefit from it or not that is not a issue here.when so many Factories coming in at least let the farmers benefit from it.Already there is one to do farming why not they benefit too.Its people wish to take that local drink or not. 
by T raj,chennai,India    22-06-2009 10:46:48 IST
 Mr. Ramdoss is 100% correct, because some high level people are getting benifit by selling liquor, but it should be shared to the farmer also. 
by Mr. Indian,trichy,India    22-06-2009 10:30:39 IST
 tasmac makes crorepathi brandy company owners richer.Kal-toddy makes poor Farmers rich.so,please allow farmers to become rich.This is true..true true..
last 20years brandy manufactureres earned atleast 1lakh crores..so they are trying to stop this developments.. 
by jk jayakumar USA,USA seattle,India    22-06-2009 10:24:09 IST
 one side ramadoss says ''no liquor '' other side..
.he cheats kongu folks... ramadoss makes statements daily to ensure that he been treated as politician and media also very much focus on his words....

so he being a doctor he does not care for health of people...

simply makes political statements ....i am wondering how much vote he wants to gather because of his statements 
by s shanmugs,bangalore,India    22-06-2009 10:13:08 IST
 First of all you are Doctor do not forget really if you want do something good for TN people please move out from politics that is everyone now expected from you. 
by AT Saravanan Athappan,kingdom of Bahrain,India    22-06-2009 10:09:47 IST
 ஆயிரம் தென்னை மரம் இருக்குள்ள, அதுல கள் எறக்கினா...... நல்ல பிசினஸ்தான்.
போராட்டம் பண்ண வேண்டியதுதான்.
அப்புறம், சினிமால கலர் சாராயம் குடிச்சா ஸ்டிரைக் பண்ணுங்க, கள்ளு குடிக்க சொல்லுங்க....
அப்புறம், சிகரெட் நிறுத்திட்டு பீடி, சுருட்டுன்னு உள்ளூர் சரக்குக்கு ஆதரவு குடுங்க...
ஏதாவது பண்ணிகிட்டே இருக்கணும்... இல்லேன்னா மக்கள் மறந்துடுவாங்க...
பொழப்ப ஓட்டணும் இல்ல... 
by mr deesh,dubai,United Arab Emirates    22-06-2009 09:54:30 IST
 பூரண மதுவிலக்கு வரும் என்பதில் நம்பிக்கை இல்லை என்கிற அளவிற்கு யதார்த்தத்தைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. அது மட்டுமல்ல பூரண் மதுவிலக்கு சாத்தியமும் இல்லை. கள் இறக்குவதில் அரசுக்கு மதுபான விற்பனை மூலம் கிடைகும் வருவாய் இழப்பு , தரத்தின் மீதான நேரடிக் கட்டுப்பாடின்மை , கள் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்பனை - அதைக் கண்டுபிடிக்க போலிஸ் ஆற்றல் வீணடிப்பு எனப் பல தொல்லைகள் உண்டு. ஆயினும் எல்லாக் கட்சிகளும் இதை ஆதரிப்பதால்(காங். தவிர) கள் இறக்க அனுமதி கிடைத்துவிடும் என்றே நினைக்கிறேன். அந்தோ பரிதாபம். எல்லாக் கட்சிகளும் ஆதரிப்பதால் இதனால் கிடைக்கும் வோட்டுகளும் எல்லோருக்கும் பிரியும் . வேண்டுமானால் அமல் படுத்திய கட்சிக்குச் சற்று கூடுதலாக் கைடைக்கும் . அதுவும் கள்ளினால் பிரச்சனைகள் வராமல் இருந்தால்.. 
by M.S Boobathi,Ajman,United Arab Emirates    22-06-2009 09:45:26 IST
 I think Mr.Ramdoos now act for his own benefit(his coconut tree). Very good politician you are....! Again again you are proving you and your party haven''t any standard theme.  
by S Thil,Chennai,India    22-06-2009 09:35:54 IST
 You too Brutus?
Permitting Toddy tapping, to counter Tasmac Menace, is like setting fire to the roof, to get rid of Bedbugs!
Already most Tamil youngsters have become drunkards and fit for nothing.
Introducing Toddy will spoil even the rural Youngsters.
AIDS has made many an African country left with no work force.
Liqour is a worser menace.
It will have bad effect both in Health and Moral values.
I request Ramdoss not to fall into vote politics, to kill his dream project(Liqour free Tamilnadu) 
by K raghunandan,Poondurai,India    22-06-2009 08:35:58 IST
 ''பூரண மது விலக்கு அமலுக்கு வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு குடிகாரர்களின் நாடாக மாறி விட்டது.''

அதனால் அவர்களைத் திருத்த இயலாதென்று உணர்ந்ததால், அவர்கள் கள் குடித்து சீறழிந்தாலும் பரவாயில்லை, தமிழக அரசுக்கு வருவாய் தடைப்பட்டால் தான், இத் தீமுக அரசின் நாட்டு நலதிட்டப் பணிகள் முடங்கும், அப்போதுதான் என்னால் இயலாவிட்டாலும், என் மகனாவது இத்தமிழகத்திற்கு முதல்வனாகி ஆள்வான், நானும் எனது குடும்மமும், நேற்று நான் மிதி வண்டியில் வாழ்ந்திருந்தாலும் கூட, இன்று போல இன்னும் பற்பல கோடிகள் சம்பாதிக்க ஏலும், ஆதலால் கள் இற்க்குவது மிக அவசியம், எமது இப்போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.
அன்பன்,
டாக்டர் அய்யா.
 
by J thulasingam,சென்னை,India    22-06-2009 06:42:42 IST
 மருத்துவர் ஐயா....நீங்க தினமும் ஏதாவது உளறிக்கொண்டே இருப்பது ஒரு விதத்தில் நல்லதுதான்.

செய்திகளை மட்டும் வாசித்து கொண்டு இருந்த நாங்கள்....உங்கள் அறிக்கைகளுக்கு கமெண்ட் செய்யும் அளவுக்கு முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம். நல்ல பயிற்சி.

சரி விசயத்துக்கு வருவோம்....

இன்னைக்கு நீங்க விட்ட காமெடி அறிக்கையில் '' தமிழ்நாடு குடிகாரர்களின் நாடாக மாறி விட்டது ''......என்று கூறி இருக்கின்றீர்கள்.

மருத்துவர் ஐயா, நீங்க அடுத்தவனை சொல்வதற்கு முன் தனக்கு முதலில் சொல்லக்கூடிய தகுதி இருக்கிறதா என்று நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள்.

திண்டிவனம் தெரியுமா உங்களுக்கு.....ஆமாங்க ஐயா.....நீங்க இருக்கும் ஊர்தான்...

அந்த ஊருல பஸ் ஸ்டாண்டுல இறங்கினதும் பாத்தா....உங்களுக்கு கண்ணுல கண்டிப்பா சிக்குவது டாஸ்மாக் கடை. ..1 அல்ல 2 அல்ல மூன்று கடைகள் உள்ளன.....எனக்கு தெரிந்து மூன்று. இன்னும் பல கண்டிப்பாக இருக்க கூடும்.
நீங்கள் வசிக்கும் இடத்திலேயே உங்களால் டாஸ்மாக் கடைகளை மூடச்செய்வதில் துப்பு இல்லை....இதில் தமிழ்நாடு அரசினை குறை சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது.

முதலில் திண்டிவனத்தை மாற்றி காட்டுங்கள்.....அப்புறம்....தமிழ்நாடைப் பற்றிப் பேசலாம்.

இரண்டாவது அறிக்கை...''விவசாயிகளின் கோரிக்கைகள் இங்குள்ள அமைச்சருக்கும் தெரியாது...மத்திய அமைச்சருக்கும் தெரியாது''.....இப்போ இப்படி சொல்ற நீங்க...உங்க ஆசை மகன் மத்தியில் அமைச்சராக இருந்தாரே, அப்போ அவருக்கும் ஒன்றும் தெரியாதுதானே அர்த்தம். ...
விவசாயிகளின் மேல் இவ்வளவு அக்கறை உள்ள நீங்கள் ஏன் சென்ற முறை உங்கள் அன்பு மகன் அன்புமணிக்கு மருத்துவம் மற்றும் குடும்ப நல அமைச்சர் பதவி வாங்கினீங்க.....ஒரு விவசாயத்துறை அமைச்சரோ..அல்லது ரசாயனம் மற்றும உரத்துறை அமைச்சர் பதவியோ வங்கி இருக்கலாமே....

ஏன் ராமதாஸ் இப்படி லூசு மாதிரி ஏதாவது தினமும் பேசிட்டே இருக்கீங்க?...

பொழுது போகலையா..தினமும் 1000 தென்னை மரம் இருக்கும் உங்க தோட்டத்துக்கு போங்க...ஒவ்வொரு மரத்திலும் இருக்கும் தேங்காயை , இளநீரை கவுண்ட் பண்ணுங்க.....
நல்லா பொழுதும் போகும்....தாகத்துக்கு இளநீரை பறிச்சும் குடிச்சுக்கலாம். ....

நீங்க போட்டு இருக்குற வெட்டி சட்டை மட்டும்தான் வெள்ளை ....உங்களுக்கு உள்ளார...ஒரு பச்சோந்தி....ஒரு குரங்கு குணம்....ஒரு டுபாக்கூர்.......ஒரு காமடியன்...ஒளிஞ்சு இருக்காங்க.....

இன்னைக்கு விட்ட அறிக்கைக்கு இவ்ளோ போதும்... 
by boaaz boaaz,India,India    22-06-2009 01:18:26 IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்