Advertisement
அரசியல் செய்திகள்
மாநில நதிகள் இணைப்பு திட்டம்: பார்லிமென்டில் கோரிக்கை
ஜூலை 29,2009,00:00  IST

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு மானிய உதவி அளிக்க வேண்டுமென்று பார்லிமென்டில் தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.



வறட்சி மற்றும் வெள்ளம் ஆகியவை குறித்து லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு பேசியதாவது:தமிழகத்தில் எப்போதும் ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூர் அணை திறப்பது வழக்கம். இந்த ஆண்டு திறக்கப்படாத காரணத்தினால் தஞ்சை விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் 2.5 லட்சம் ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்யும் நிலை இருந்தும் இந்த ஆண்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், தஞ்சை விவசாயிகளுக்கு ரூ.840 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் கர்நாடகாவில் கபினி, ஹேரங்கி ஆகிய அணைகளை அனுமதியின்றி கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு வழங்கிய அனுமதி தான்.



தற்போது பாலாறு விவகாரத்திலும் இதே நிலை உருவாகியுள்ளது. மத்திய நீர்வள கமிஷன் தான் முடிவெடுக்க வேண்டுமென்ற நிலை இருந்தபோதிலும் ஆந்திர மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.நதிநீர் இணைப்பு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தாலும் இமாலய நதிகளை இணைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டப்படுகிறது. தீபகற்ப நதிகளை இணைப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



காவிரி-கட்டளைக்கால்வாய் ஆகியவற்றை இணைக்க ரூ.189 கோடியில் பணிகளும், திருநெல்வேலியில் தாமிரபரணி நதியை ராதாபுரம், நாங்குநேரி போன்ற வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் ரூ.369 கோடியில் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு மத்திய அரசு மானிய உதவி அளித்திட வேண்டும். தமிழகத்தில் 4 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால் இதிலும் மத்திய அரசு 50 சதவீதம் அளவுக்கு செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பாலு பேசினார்.



                                               - நமது டில்லி நிருபர்-

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்